Blog Archive

Friday, May 24, 2019

ஆதாரம் நீயே 😇

வல்லிசிம்ஹன்



எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .
சென்ற வாரம்  நான் இந்த ஊர் ஆளு என்பதற்கு 
ஆதாரம்  வேண்டும் என்பதற்காக 
ஒரு   விலாசம், புகைப்படம் ,ஒரு நம்பர் எல்லாம் 
எடுக்க இந்த ஊர் அலுவலகத்துக்குச் சென்றோம்.

கவுண்டடரில் டோக்கன் வாங்கி  உட்கார்ந்ததும் 
பக்கத் து   இருக்கையில்  உட்கார்ந்திருந்த  அம்மா, நான் ட்ரைவர் லைசென்ஸ் 
புதுப்பிக்க வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டார்.

ஹௌ  ஓல்ட் ஆர் யு என்றார். 71 என்று சொன்னதும் 
என்  வயசென்ன தெரியுமா  என்று கேட்டார்.
60 இருக்குமா என்றேன்.
76 ஆகிறது.//
சிரித்துக் கொண்டே சொன்னவர்  நீ நல்லா ஓட்டுவியா  என்றார் .

திடுக்கிட்ட நான்  ,இல்லை  என்றேன். சோ ,ஹவ் டு யூயூ கெட் 
அரவுண்ட்  என்று கேட்டார்.
என் பெண் என்று சொன்னேன்.
 இப்பவும் ஒன்னும்  லேட் இல்லை. வண்டி ஓட்டக்  கற்றுக்கொள். என்று  புத்தி சொல்லியபடி  எழுந்தவர்,
இந்தியாவில் ஒரு 85 வயதுக்கு கிழவர், சாலை யோரம் மரம் நட்டு ,தண்ணீர் விட்டு வளர்க்கிறார் தெரியுமா. 

   ஹி  இஸ்  ரியலி கிரேட்.
நான் தலை ஆட்டினேன். 
அவரால் முடியும் என்றால் உன்னால் முடியாதா என்ற  வண்ணம்,
கவுண்ட்ட்ருக்குச் சென்று டெஸ்ட் எடுத்துக் கொண்டு 

  லைசென்ஸ் புதுப்பித்துக் கொண்டு , என்னைப்  பார்த்துக் கையசைத்து விடை பெற்றார்.

பெருமூச்சு விட்டுத் திரும்பினேன்.

பெண் சிரித்துக் கொண்டாள் . அம்மா கார் ஓட்டக்  கற்றுக் கொண்டதை  நினைத்துப் பார்த்திருப்பாள் .

இந்த ஊர் ஆதார் கார்ட் வாங்கித் திரும்பினோம்.😉😉😉 










12 comments:

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் அம்மா..

ஒரு சிறு அறிவுரையுடன் கூடிய இனிய நிகழ்வு..

சரி...

ஆனால் அதில் ஒரு க் வைத்து விட்டீர்களே... ஒரு சின்ன சஸ்பென்ஸ்..! நீங்கள் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட .அனுபவத்தையும் எழுதுங்கள்.

Geetha Sambasivam said...

எதையுமே சிறப்பான முறையில் கதையாக்கத் தெரிந்த சிறந்த கதை சொல்லி நீங்கள். அருமை!

KILLERGEE Devakottai said...

காரோட்ட்டிய அனுபவத்தை பகிருங்கள் அம்மா.

கோமதி அரசு said...

'ஆதாரம் நீ என்று அருமறைகள் கூறும்' என்ற பாடல் நினைவுக்கு வந்தது அக்கா.

அங்கு வாழும் முதியோர்கள் எல்லாம் தங்களை முதியோர் என்றே நினைப்பது இல்லை.

மால்களில் வேலைப் பார்க்கும் முதியவர்கள் எவ்வளவு நேரம் நிற்கிறார்கள்! சிரித்த முகத்துடன், சுறு சுறுப்பாய் இருக்கிறார்கள்.

அவர்களே கார் ஓட்டிக் கொண்டு நீண்ட தூரம் தனியாக போகிறார்கள்.

ஏற்கனவே கார் ஓட்ட பழகி இருக்கும் அனுபவம் இருக்கே! மீண்டும் ஓட்டி பாருங்கள் அக்கா.


திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,
பிழை திருத்தி விட்டேன்.

நான் வண்டி ஓட்டாததால் எத்தனை ஜீவன்கள் பிழைத்து இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாது.
அந்த அம்மா சொன்னதைச் சொல்கிறேன்.

Idia is full of farms and good roads. you should be able
to drive smoothly // என்பதுதான். ஒரு வேளை லகான் பார்த்திருப்பாரோ.

நான் வண்டி ஓட்டப் பழகிய கூத்து பதிந்திருக்கிறேன். எங்க இருக்கோ.
மீண்டும் எழுதுகிறேன்.நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

பாருங்க அம்மா அந்த அம்மா இந்தியாவின் வயோதிகர் செய்வதை சொல்லி உன்னால் முடியும் என்று சொன்னது சூப்பர்!!!!

அது சரி உங்க கார் ஓட்டும் அனுபவம் ஆஹா அதைச் சொல்லாம இருக்கக் கூடாதே!! சொல்லியே ஆகணும்...!!!!!!!!!!!!!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

Idia is full of farms and good roads. you should be able
to drive smoothly ///

ஆஹா அந்த அம்மாவுக்கு இப்படி ஒரு எண்ணமா இந்தியாவைப் பத்தி!!! இங்குள்ளவங்க புலம்பல்ஸ் அவங்க காதுல விழலை போல ஹா ஹா ஹா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, கதை சொல்வது நமக்கு ராசி.
மேலும் இந்தப் பாடங்களை மறக்கக் கூடாது
இல்லையாம்மா.
வலிய வந்து பேசுவது இந்த ஊரில் பழக்கம் இல்லை.
இந்த அம்மா பேசுவதே அதிசயமாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி. கட்டாயம் எழுதறேன் மா.
சும்மா ஒரு நகைச்சுவைப் பதிவு தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கை கோமதி,
எனக்கும் அந்தப் பாடல்தான் நினைவு.
எத்தனை அழகான அருமையான பாடல்.

அங்கே லைசென்ஸ் வாங்க வந்தவர்களில்
வாக்கர் வைத்து வந்தவர்களே அதிகம்.
எண்பது வயதில் தனியே இருப்பவர்கள்.அதுவும் பெண்மணிகள்.

நான் இங்கே ஓட்டுவது நல்லதுதான்.
என்னை ஒருவர் கொண்டு போய் விடணும். அழைத்து வரவேண்டும்.

அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு ஓட்டணும்.
யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன்.