Blog Archive

Saturday, May 11, 2019

அம்மா 1970 ........3

வல்லிசிம்ஹன்
அம்மா  1970  ஏப்ரில்  மாதம்,
எனது  மூன்றாவது  கரு ஆறு மாதம் என்ற நிலையில் உடல்
முழுவதும் சிவப்பு சிவப்பாக  ராஷஸ் .
கோவைக்கு மாற்றலாகி வந்த புதிது.

இவருக்கு என் நிலைமை பயத்தைக் கொடுக்க அப்பா அம்மாவுக்கு தொலை பேசியில் விஷயத்தைச் சொல்லி விட்டார்.

காரைக்குடியில் இருந்தவர்கள் இரண்டு நாட்களில்  கோவை வந்து விட்டார்கள்.
மணல்வாரியாக இருக்கப் போகிறதே
என்று பயந்து விட்ட அம்மா,முதலில் வேண்டிக்கொண்டது ஷீர்டி பாபாவிடம் தான். யார் சொல்லி அதுபோல் செய்தாரோ தெரியாது.

வைத்தியரிடம் அழைத்துக் காட்டியபோது உப்பு,புலி,காரம் சேர்க்காமல் முயன்று நாட்கள் இருக்கச் சொன்னார்.
மணல்வாரியாக இருந்தால் குழந்தையைப் பாதித்து இருக்கும்.
நல்ல வேலை அது இல்லை என்றதும்  அம்மா என்னை படுக்கையில் இருக்க வைத்து, மற்ற இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு  சமையலும் செய்து
ஒரு வழியாக  அந்த ஒவ்வாமை மறைந்ததும்,
பக்கத்தில் இருந்த சாயிபாபா காலனி  அழைத்துச் சென்று உப்பும் மிளகும் என் கைகளில் கொடுத்து கோவில் பின்னால் இருந்த தொட்டியில்    போடச்  சொன்னார்.

அம்மாவுக்குத்

தெய்வத்திடம் இருந்த பரிபூரண நம்பிக்கை
எனக்குப் பின்னாட்களில் வந்த சோதனைகளை
சமாளிக்கத் துணை இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து   பெரிய தம்பி வந்து என்னையும் குழந்தைகளையும்
அழைத்துச் சென்று காரைக்குடியில்  விட்டான்.
அப்போது அவனுக்கு இருபது,
எனக்கு 22.

ஆவணி மாதத்தில் சின்னவன் பிறக்கும் சமயம் பாட்டி வந்து சேர

ஒரு நல்ல பௌர்ணமி  நாளில் மூன்றாவது பையன்
ஜனனம்.

ஒரு குறையும் வைக்காமல்  என் உடம்பைத் தேற்றி,

என்னைப்  பார்க்க வந்த கணவருடன், சின்னக்குழந்தையையும் என்னையும் அனுப்பி வைத்து,
மற்ற இரண்டு குழந்தைகளைத் தானே
கவனித்துக் கொண்டார்கள்  அந்த  அருமைப்
பெற்றோர்கள்.
இத்தனைக்கும்  அப்பாவுக்கு  வயிற்றில் அல்சர் இருந்தது.
அவரையும் பத்திய சாப்பாடு கொடுத்துக் கவனித்துக் கொண்டு,
என் குழந்தைகளையும் ஆறு மாதங்கள்
கவனித்துக்  கொண்ட  பெருந்தன்மையை  என்ன சொல்வது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




15 comments:

கோமதி அரசு said...

அம்மாவின் நினைவுகள் மிக அருமை.
நீங்கள் முன்பு எழுதி படித்து இருக்கிறேன், இருந்தாலும் எத்தனை முறை படித்தாலும் அன்பான எழுத்து கட்டிப்போட்டு விடுகிறது.
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
தாயுமானவர் தேவகோட்டை ஜிக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

அம்மாவின் நினைவுகள் நெகிழ்ச்சி. அம்மான்னா அம்மாதான்!

KILLERGEE Devakottai said...

நினைவலைகள் நெகிழ வைத்தது அம்மா.
அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.

KILLERGEE Devakottai said...

நன்றி சகோ

கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன் said...

அம்மா இல்ல அப்படிதான் இருப்பாங்க,
அழகான நினைவுகள் அழகான பதிவு...!

(இவன் பூந்தோட்ட கவிதைக்காரன்)

ஜீவி said...

தாயின் அன்பிற்கு ஈடில்லை; இணையில்லை.. மனம் நெகிழ்ந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி,
மிக மிக நன்றி மா. முன்பே எழுதி இருக்கிறேனா.
அனைத்து அன்னையருக்கும், தாயாக இருந்து மக்களைக் காக்கும் தந்தையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.மக்கள் வாழ நாம் வாழுவோம்.
என்றும் வாழ்க வளமுடன்.
தங்கள் தங்கைக்கும், தம்பி மனைவிக்கும் வாழ்த்துகள்.

மாதேவி said...

அம்மாவை வணங்குகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் நம் வாழ்த்துகள் சென்றடையட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
உங்கள் நல் தாயுள்ளத்தை கோமதி சொல்லி இருக்கிறார்.
தாயும் தகப்பனுமாக விளங்கும் உங்களுக்கு என் ஆசிகளும் வாழ்த்துகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூந்தோட்டக் கவிதைக்காரன், உங்கள் பெயரே இனிமையாக இருக்கிறதே. நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் அன்பு ஜீவி சார்.
ஆமாம் அம்மாவின் அன்பை உணராதவர் யார்.
அந்த மஹாலக்ஷ்மி அன்னமிட்டு வளர்த்த
உடல் இது.
வாக்கினால் அவளை வணங்குவதில் என்றும் மகிழ்ச்சியே.
உங்கள் வீட்டு அன்னையருக்கும் என் மனம் நிறை வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
உங்களுக்கும் என் அன்பு அணைப்புகளும் வாழ்த்துகளும் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா....க்ரேட் பேரன்ட்ஸ்!!!! நெகிழ வைத்த நிகழ்வு. இப்படியான அன்பு வலை/பாசவலை ஒவ்வொரு குடும்பத்திலும் பின்னப்பட்டால் எத்தனை உறுதுணை!! குடும்பம் என்ற அமைப்பு!

அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கீதாமா. பாசம் ஒன்றே நிலைத்த சொத்து.
நாமும் அனைவரிடம் அன்பாக இருந்து அனைவரும் நம்மிடம்
பாசமாக இருந்தால் போதும்.அம்மா.