Vallisimhan
அனைவரின் புதுவருடமும் ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள்.
முதுமை 70 ஐ எட்டிய இரு தோழிகளோடு நானும் புது வருடத்தன்று பேசிக்கொண்டிருந்தேன்.
சொல்லி வைத்தால் போல் தங்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களைத் தாங்கள் கவனித்துக் கொண்ட விதமும்
இப்போது அந்த நிலைமைக்குத் தாங்களே வந்து
விட்ட நிலையில் தங்கள் வாழ்க்கை நடக்கும் விதமும்
சொல்ல நானும் அவ்வப்போது
என் பங்கைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
முக்கிய ஆற்றாமை தாங்கள் பல விஷயங்களில்
கலந்து கொள்ளப் படாததே.
THEY were told . Their uptake on any matter கேட்கப் படவில்லை. என்பதே.
அதில் இருவர் குடியுரிமை வாங்கியவர்கள். கணவனோடு இங்கே மகன் வீட்டுக்கு வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
நான் தான் புது வரவு. ஒண்ணரை வருடங்கள் தானே ஆகிறது.
நானிருப்பது மகள் வீட்டில். வானப்ரஸ்த நிலையில் என்னைச் செலுத்திக் கொண்டுவிட்டேன்.
என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களூக்கும் எனக்கும் பல சமயங்களில் சம்பந்தப் படுத்துக் கொள்வதில்லை.
அவஸியமில்லை என்ற ஒரே காரணத்தால்.
நாம் நம் குடும்பத்தை நடத்தி முடித்தாச்சு.
இப்போது இவர்கள் நம்மைவிடப் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள்.
இதில் நாம் தலையிடுவதே தவறு.
ஏதாவது விஷயத்தில் அபிப்பிராயம் கேட்டால் சொல்லலாம்.
கேட்கவில்லை என்றாலும் பாதகமில்லை.
திண்ணையிலிருந்து குரல் கொடுத்த பாட்டிகள் காலம்
மலைஏறிவிட்டது.
மற்ற இருவரும் ஏன் அல்லலுறுகிறார்கள் என்று யோசித்தேன்.
பிள்ளையின் மேல் வைத்த அதீதப் பாசமும் கட்டுப்பாடும் தான் காரணம்.
எத்தனை விதமாகக் காலம் மாறினாலும் சில அம்மாக்கள்
மாறுவதில்லை. நம் ஊரிலாவது அக்கம்பக்கம் தோழிகள் இருப்பார்கள்.
ஆற்றாமையைச் சொல்லிக் கொள்ளலாம். இங்கே அப்படி எல்லாம்
பேச முடியாது.
இந்த சந்திப்பில் முதலில் பேசியது திருமதி.வாத்வானி.
வீட்டில் மருமகள் தன்னை சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிப்பதாகச் சொன்னார்.
என்னவாக இருக்கும் என்று யோசித்ததில், அந்தப் பெண்ணுக்கு வேலைக்கும் போய்
வீட்டையும் கவனிப்பது சிரமமாக இருந்திருக்கிறது.
சுசீலா வாத்வானிக்கு கைகளில் நடுக்கம் கொஞ்சம் உண்டு.
அதனால் காப்பியோ தேனீரோ சிந்துவது வழக்கமாகிவிட்டது.
மருமகளுக்கு உதவப் போய் , சமையல் முடிந்ததும்
அடுப்பை அணைக்க மறந்திருக்கிறார்.
அது பெரிய தவறு தான். நல்லவேளை அவரது கணவர் கவனித்து
அணைத்திருக்கிறார்.இதை அங்கே வேலை செய்ய வந்த ,
சுத்தம் செய்யும் பெண் பார்த்து மறு நாள்
கைபேசியில் மருமகளிடம் சொல்லிவிட்டாள்.
பலன் 72 வயது சுசீலாபென் எங்களை அழைத்து அழுதது.
என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை.
அல்சைமர் வந்துவிட்டதா எனக்கு என்று தெரியவில்லையே
என்று புலம்பும் சுசீலாபென்னை சாந்தப் படுத்தியது இன்னோரு தமிழ்ப் பெண்மணிதான்.
பிரேமா ஸ்ரீனிவாசன்.
இந்தக் குளிர் நம் எல்லோரையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கிவிட்டது
சுசீலாபென். நீங்கள் வருந்த வேண்டாம்.
சிம்பிளாக ஒரு பரிசோதனை செய்தால் உடல் நிலை தெரிந்துவிடும்.
எனக்குப் போன வருடம் இருந்த நிலையில் எத்தனை ஆப்பரேஷன் நடந்தது. அத்தனையும் மீறிவர என் மருமகளே ஆதரவாக இருந்து எல்லாம் செய்தாள்.
பெண் பிறகே வந்தாள் என்றார்.
ப்ரேமா ,தன்னுடைய மாமியார் மாமனார் இருக்கும் போதே இங்கே வந்துவிட்டார்.
மச்சினர் ஓர்ப்படி என்று பெரிய குடும்பமாக
இருந்து பழக்கப் பட்டவர். அவர் சந்தித்த பிரச்சினைகளைச் சொல்லி முடியாது.
மாமியார் மாமனாரைக் கரையேற்றி, இப்போது மகன், மகள் இருவரிடமும் மாற்றி மாற்றி
இருக்கிறார்.
எங்கு சென்றாலும் முழு சமையல் பொறுப்பு அவரிடம் தான்.
அலுப்பே காட்டாமல் உழைப்பார். அவர் கணவருக்கு 80 வயதாகப் போகிறது.
தன் சேமிப்பால் கோவையில் அபார்ட்மெண்ட் வாங்கி விட்டார்.
இந்தியா சென்று விடவேண்டும் என்ற துடிப்பு எங்கள் எல்லோருக்குமே உண்டு.
வருடத்துக்கு ஒரு முறை சுசீலாபென் அஹமதாபாத், த்வாரகா என்று போய்விடுவார்.
ப்ரேமா இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோவை, திருச்சி என்று போய்
வந்துவிடுவார்.
எதிலும் அவருக்குத் திருப்தி உண்டு. கம்ப்ளையினே செய்ய மாட்டார்.
ஸ்ரீனிவாசனுக்கோ சுத்தமாகக் காது கேட்காது.
மாடியில் பக்தி டிவி போட்டுக் கொண்டு அதிலேயே மூழ்கிவிடுவார்.
பிரேமா தான் ஒவ்வொரு காப்பியோ டீயோ கொண்டு போய்க் கொடுப்பார். பிரேமாவுக்கு என்ன கவலை என்று கேட்கிறீர்களா. பார்ப்போம். .தொடரும்.

No comments:
Post a Comment