Vallisimhan
1974 டிசம்பரில் திருச்சி ,சமயபுரம் அம்மா என்னை விட்டுவிட்டு மற்ற நால்வரிடம் குடி புகுந்தாள். பெற்றொர்களால் வரமுடியாத நிலை.
மன உரம் என்று மைவிட்டதில்லை.
வீடு நிறைய இளனீர், பருத்திப்பால்,வேப்பிலைக் கொத்துகள். ஜட்டி மட்டும் போட்டுத் திரிந்த சிறார்கள். சற்றே தீரமானான நிலையில் கண்வர்.
உதவிக்கு இருந்த மேரி,
சொன்ன வழி முறைப்படி
எல்லா சாங்கியங்களும் செய்து வந்தேன்.
என் பொறுமை ஆவியாகிவிடப் போகிறதே என்னும் நேரம்
வந்தான் என் சின்னத் தம்பி.
அதுவரை அடக்கி வைத்திருந்த அழ்கை எல்லாம் அவனைக் கண்டதும்
பொங்கியது.
தே, அம்மா வந்த வீட்டில் அழக்கூடாது என்று மேரி அதட்ட,
அவன் என்னிடம் சொன்னது இதுதான். 22 வயதில் என்ன
செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்தான்.
மொந்தன் பழம் வாங்கி வந்தான். சமையல் நேரத்தில் கீரை கடைந்து கொடுத்தான்.
குழந்தைகளுக்குத் தள்ளி நின்று விளையாட்டுக் காட்டினான்.
என்னை மதிய நேரம் ஓய்வெடுக்க வைத்தான்.
வீட்டுப் பொருட்களை
வாங்கிப் போட்டான்.
ஒரு வாரம் என் பாரம் முழுவதுமாகக் குறைய சிங்கத்துக்கு மூன்றாம் முறையும் தண்ணீர் விட்ட பிறகே கிளம்பினான்.
அந்தச் செல்லத்தம்பிக்கு இன்று பிறந்த நாள்.
அம்மா, அப்பா, சிங்கம், என் பெரிய தம்பியுடன்,
என்னைப் பார்க்க இங்கே கூட வந்திருப்பான்.
பித்ரு பக்ஷ்மாச்சே.
நன்றி டா ரங்கா. உன் குடும்பம் தழைக்க ஆசிகள் தருவாய்.
No comments:
Post a Comment