Vallisimhan
எல்லோரும் வாழ வேண்டும்
ஹரப்பா நாகரீகம்
சீதா, இளைய வயதிலிருந்தே புராண இதிகாசங்களில் நிறைய
ஈடுபாடு கொண்டிருந்தாள்.
பாட்டி கதைகள் சொல்லும்போதே இது போல உண்மையாகவே நடந்திருக்குமா என்ற கேள்விகளை
எழுப்புவாள்.
சரித்திரங்கள் படிப்பதே முக்கிய வேலையானது.
பல ஆசிரியர்களின் கதைகளையும், நடந்த காலங்களையும்
சித்திரிக்கப்பட்டிருந்த அணிகளன்கள்,போர்ப்பயிற்சி,அரசியல் எல்லாவற்றையும் ஒப்பு
நோக்குவாள்.
நூலகமே அவளின் ஆராய்ச்சிக் கூடம்.
பட்டப் படிப்பையும் ,மேற்படிப்பையும் சரித்திரத்தை முதன்மையான பாடமாக வைத்துப்
படித்தாள். தொடர்ந்து ஆராய்ச்சியையும் அகழ்வாராய்ச்சியிலியே தொடர்ந்து மூன்று வருடங்களில்
முடித்தாள்.
இத்தனை தீவிரம் ஏற்பட்டதில், அவளுக்கு வேறு எதிலும் கவனம் செல்லவில்லை.
நண்பர்கள் அதிகம் இருந்தாலும் அவர்கள் மன நிலையும் அவளை ஒட்டியே
இருந்ததால் குழப்பங்கள் இல்லாத வாழ்வே அவளுடையதாக இருந்தது.
சிந்து சமவெளி அமைப்புகள், அவளுடைய கற்பனைகளைத்தாண்டி
எங்கேயோ போவதாக இருந்தது. பரந்து கிடந்த அந்த நகர அமைப்பு
மீண்டும் மீண்டும் அவளை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது.
இந்த உலகத்தில் பங்கெடுப்பவனாகவே அவள் ரகுராமனைப் பார்த்தாள்.
ஒவ்வொரு மாலையும் விவாதங்களும் எண்ணப் பரிமாற்றங்களும்
நடந்த பிறகு இருவரும் அமைதியான இரவில் ,மீட்கப்பட்ட நகரத்தின்
வெவ்வேறு இடங்களைப் பார்வை இடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார்கள்.
கி.மு 3000 ஆண்டுகளில் இருந்த நாகரிகம் எப்படி இவ்வளவு சீரிய முறையில்
இயங்கியது. ஏன் அழிந்தது. இதெல்லாம் அவர்களின் மனதில்
ஓடிய கேள்விகள்.
ரகுராமனின் நிதானமான பேச்சும், அணுகு முறையும் அவளுக்குப் பிடித்திருந்தது.
தான் சொன்னதே சரி என்று விவாதிக்காமல், எல்லோர் பேச்சையும்
நுணுக்கமாகக் காது கொடுத்துக் கேட்கும் முறையையும் வியந்து பார்த்தாள்.
ஒருவாரம் கடந்து போனதே தெரியவில்லை.
இன்றைய ஆய்வில் மஹாபாரதக் காலமும் , சிந்து சமவெளி நாகரீகமும் ஒத்த காலமா
என்ற முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை.
கங்கைக் கரை ஓரம் நடந்தது அல்லவா பாரதம்
என்றான் ரகுராமன்.
உண்மைதான், இது காந்தாரியின் பிறப்பிடமாக இருந்திருக்குமோ
என்று மறு கேள்வி வந்தது சீதாவிடமிருந்து.
ம்ம். இருக்கலாம். உன் உலகத்தில் அர்ஜுனனும் த்ரௌபதியும் இங்கே டூயட்
பாடுகிறார்களோ என்று கேலி செய்தான் ரகுராமன்.
வாழ்வில் முதல் முறையாக நாணம் வந்தது சீதாவுக்கு.
இந்த இடமே ஒரு கனவு பூமியாகத் தோன்றுகிறது எனக்கு.
மிகச்சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள்
இப்போது இருப்பது இதோ இந்த மகத்தான குளமும்
படிக்கட்டுகளும்.
அவர்கள் அப்போது கண்ட கனவு நம் வடிவில் இப்போது
தொடர்கிறது என்று முடித்தான் ரகுராமன். தொடரும்.
No comments:
Post a Comment