Friday, June 29, 2018

காசிப் பயணத்தின் முதல் படி

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ரயில் வேகம் எடுக்க ஆரம்பித்ததும் அதுவரை வெளியே பார்த்துக் கொண்டிருந்த
வஞ்சும்மா, கணவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள்.
என்னால் நம்பவே முடியவில்லை. நாம் தனியாக
இந்தக் கங்கைப் பயணம் மேற்கொண்டிருக்கிறோம்னு.

 எதிர் சீட்டில் இருந்த தம்பதிகளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்த ஸ்ரீனிவாசன்
அவளை நோக்கி, நம்புமா. உன் மன சந்தோஷம் எனக்கு
ரொம்ப முக்கியம்.
ரொம்ப பயந்து போயிருக்கிறீர்கள்.
இன்னும் நாம் போக வேண்டிய இடங்கள் எத்தனையோ.

உங்களுடந்தான் நான் போய்ப் பார்க்கவேண்டும், என்றபடி ,ஏதோ
பையிலிருந்து கொடுப்பது போல அவர் கரங்களைப் பிடித்தபடி
சொன்னார்.

உடனே எதிர் இருக்கைகளில் இருந்த தம்பதியினரை அறிமுகப்
படுத்த ஆரம்பித்தார். தன் கண்களில் துளிர்த்திருந்த
நீரை மறைக்க  பக்கத்தில் திரும்பியவாறு பேசினார்.

இவர்கள் சென்னையிலிருந்து வருகிறார்கள். இங்கே பங்களூரில்
மகன் வீட்டுக்கு வந்துவிட்டு இப்போது நம்மைப் போலவே
காசி,கயா,மதுரா எல்லாம் பார்க்க வருகிறார்கள்.
 அவர் நாராயணன், அம்மா லட்சுமி.
இது என் மனைவி வஞ்சுளா.. எங்களுக்கெல்லாம் கும்பகோணம்
பக்கம். நாச்சியார் கோவில்.
உடனே அந்த லக்ஷ்மி அம்மா, பெயர் பொருத்தம் பிரமாதமாக இருக்கே
என்றார். வஞ்சும்மா சிரித்துவிட்டார்.
உங்கள் இருவரையும் போலத்தான் என்றபடி பேச்சைத் தொடர்ந்தார்.

மணி ஒன்பதை நெருங்குவதைப் பார்த்த ஸ்ரீனிவாசன், வஞ்சு
உன் மாத்திரைகளை எடுத்துக் கொள்.
பிறகு இருவரும் சாப்பிட்டுப் படுத்துக் கொள்ள சரியாக
இருக்கும்  என்றவாறு மருந்துகள் கொண்டு வந்த
பெட்டியை எடுத்தார்.
எதிரில் இருப்பவர்களும் இதே நிலைமையில்
 இருப்பவர்கள் போல. இருவருக்கும் டயபெடிஸும்,
இரத்த அழுத்தமும் இருப்பதாகச் சொன்னார்கள்.
இந்த வயதில் இதெல்லாம் வராமலிருந்தல் தான் அதிசயம் என்று சொன்னபடி
நால்வரும் உண்டு முடித்தனர்.

கிட்டத்தட்ட 40 மணி நேரம் ஆகும் போலிருக்கே.
நாளைப் பொழுது நல்ல பொழுதாகட்டும்.
என்றபடி ,படுத்துக் கொள்ள ஏதுவாக வஞ்சுமாவின் இருக்கையை விரித்து
கொண்டு வந்திருந்த படுக்கையை விரித்தார்,
நீங்கள் மேலே ஏறணுமே என்றார் கவலையோடு வஞ்சுமா.
நான் கிழவன் இல்லைமா. நன்றாக ஏறி இறங்குவேன்.சிரித்தவரைப் பார்த்து நாராயணன்
எல்லா மனைவியரும் இப்படித்தான்
என்றபடி  தங்கள் படுக்கையையும் விரித்தார்.
மனைவிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து
ரகசியமாக புன்னகை புரிந்து கொண்டார்கள்.
என்னம்மா ,பால் வரவழைக்கட்டுமா என்றவரிடம்
மறுத்துவிட்டு ,ரயிலின் தாலாட்டில் உறக்கம் வரத் தூங்க ஆரம்பித்தார்.
ஸ்ரீனிவாசன் ,நாராயணன்  மேலேறிப் படுக்க
பயணத்தின் முதல் நாள் இனிதே பூர்த்தியானது.
Add caption

16 comments:

Anuradha Premkumar said...

இதமான பயணம்...

ஸ்ரீராம். said...

// பெயர் பொருத்தம் பிரமாதமாக இருக்கே
என்றார். //

ஆமாம்... நானும் நினைத்தேன். இப்போதுதான் நாங்களும் சென்று தம்பதியினரை தரிசித்து வந்தோம்!

ஸ்ரீராம். said...

// எதிரில் இருப்பவர்களும் இதே நிலைமையில்
இருப்பவர்கள் போல. இருவருக்கும் டயபெடிஸும்,
இரத்த அழுத்தமும் இருப்பதாகச் சொன்னார்கள்./

இந்த புண்ணிய க்ஷேத்திராடனங்களை எல்லாம் வயதானபின்தான் செய்கிறோம், இல்லை? முன்னரே செய்வதில்லை!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா என்ன ஒரு வாஞ்சை..... பயணம் இனிதாகத் தொடர்கிறது.... நானும் தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

இனிமையான பயணம்.

நெ.த. said...

இரயில் பயணத்தில் தொடர்கிறேன். காஷி என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைப் பார்த்தேன்.

Bhanumathy Venkateswaran said...

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறை நன்றி பானு மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் , முரளி மா. இந்தியில் அது காஷி.
நமக்கு காசி. எங்க அப்பா, அங்கே போய் விட்டு
எனக்கு நிறைய புத்தகங்களை வாங்கி வந்தார். உத்தரகாண்ட்
என்ற புத்தகத்தில் அந்த இடங்களின் map.
அவருக்கு நான் அவர்களுடன் வரமுடியவில்லையே என்று
வருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அனுராதா. ஆமாம் பயணங்கள் இது போலத்தான் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அட . ஸ்ரீராம் எந்தக் கோவில் அஷ்ட லக்ஷ்மியா.
அவர்களுக்கென்ன .கொடுத்து வைத்த தம்பதியினர் இல்லையா.
எங்களுக்கு பாகவதம் சொல்லிக் கொடுத்த பெரியவர் சொல்லிக் கொண்டே இருப்பார். சிறிய வயதிலேயே கோவில்களுக்குச் சென்று வரவேண்டும். அப்போதுதான்
தெம்பிருக்கும் என்று.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பிறந்த நாள் சந்தோஷமாகச் சென்றதா.
ஆமாம், இனிமையாகச் சென்ற பயணம். வாழ்க்கையும் இது போலச் செல்ல வேண்டும்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா மா. நல்ல படியே பயணம் செல்லும்.

கோமதி அரசு said...

பயணம் இனிமையாக செல்கிறது.
கணவரின் கவனிப்பு இதம்.

Thulasidharan V Thillaiakathu said...

பெரியவர்களின் பயணம் இனிதே அமையட்டும். அன்பு ததும்பும் பயணம். அக்கறை பரிமாறிக் கொள்ளப்படும் இனிதான பயணம். கூடவே மற்றொரு அதே போன்ற தம்பதியர். நாங்களும் பயணத்தைத் தொடர்கிறோம்

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu said...

முகப்புப் படம் செமையா இருக்கே அம்மா.

கீதா