Thursday, May 03, 2018

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பலவகைகளில் இளவயதில் ,25 என்று வைத்துக்
கொள்ளலாமா
பலவித சோதனைகள் வந்து சேர்ந்த போது,
அவற்றைச் சமாளிக்க
உடலிலும் மனதிலும் வலு இருந்தது.

கொஞ்ச நாட்கள் கழித்து அந்தத் துன்பங்களுக்குக் காரணமாக இருந்தவர்கள்
மாறினார்கள்.

நம் மனம் மாற மறுத்தது.
பலவிதங்களில் அவர்களைச் சந்திக்க மறுத்தது.

என்னுடன் சேர்ந்து என் மக்களும் அவதிப்பட்டதே
என் சினத்துக்குக் காரணம்.
 அப்போதெல்லாம் சுற்றி நில்லாதே போ  பகையே துள்ளி வருகுது வேல்
என்பதே ஒரு மந்திரம் போல் ஒலிக்கும்.
 பெற்றோர்கள் என்னைத் தாங்கித்தான் நான் வளர்ந்தேன்.
பலவிதங்களில் உயர்ந்துவிட்ட உறவுகள்.
இப்போது மாறிய காலத்தை உணர்ந்து மதிக்கத் துவங்கினார்கள்.
என் கசப்பை எல்லாம் விழுங்கி  ,நானும் நடிக்க ஆரம்பித்தேன்.

இதில் அதிசயம் என்ன தெரியுமா, என் மக்கள்
அவர்களைச் சீக்கிரமே மன்னித்துவிட்டார்கள்.
மனதில் கசப்பை வைத்துக் கொள்ளாதே மா.
இனி எல்லாம் நலமே. மன்னித்து மறந்துவிடு என்பது அவர்கள்
அறிவுரை.
சிங்கம் இருந்தாலும் இதையே சொல்லி இருப்பார்.
அவரது உழைப்பு எங்களை உயர்த்தியது

இதுதான் என் பதிவுகளின் பின்னோக்குப் பயணத்துக்கான காரணம்.
என்னை நானே உழுவதற்கான ஏற்பாடு.
தொடர்ந்து படித்து என் எழுத்துக்கு மதிப்பு கொடுக்கும் நண்பர்களுக்கு மிக நன்றி.

18 comments:

ஸ்ரீராம். said...

ஒரு மாதிரி குண்ட்ஸா புரியுது.

வல்லிசிம்ஹன் said...

ஒரு மாதிரி புரிகிறதா. ஸ்ரீராம். பலவீடுகளின் கதைகள் இதில் இருக்கிறது. என்னால் அனுத்தமா,லக்ஷ்மி,சூடாமணி போல எழுத முடியாதே.
அது தனியான வல்லமை இல்லையா.

இதை முக நூலில் பதிய எனக்கு தைரியம் இல்லை.

எல்லோரும் அங்கே இருக்கிறார்கள்.நன்றி ராஜா.

KILLERGEE Devakottai said...

எல்லோர் வாழ்விலும் கடந்து வரும் வ(லி)ழி.... நலமே விளையட்டும்.

கோமதி அரசு said...

//இப்போது மாறிய காலத்தை உணர்ந்து மதிக்கத் துவங்கினார்கள்.
என் கசப்பை எல்லாம் விழுங்கி ,நானும் நடிக்க ஆரம்பித்தேன்//

நமக்கு நிம்மதி வேண்டும் என்றால் இப்படி நடிக்கத்தான் வேன்டும் அக்கா.
பழசை மறந்து மகிழ்ச்சியாக இருங்கள்.
குழந்தைகள் துணை இருக்கும் போது கவலை வேண்டாம்.
சிங்கம் சாரும் கவனித்துக் கொள்வார்.

Avargal Unmaigal said...

குழந்தைகள் மன்னித்துவிடுவார்கள் ஆனால் அப்படி நம்மால் எளிதில் செய்ய முடியாது காரணம் மனதில் ஏற்பட்ட ஆழமான வடுதான் காரணம்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தேவகோட்டையாரே.
எழுதுவதற்காவது சுதந்திரம் இருக்கிறதே. அது கூட இல்லாமல் புழுங்குபவர்கள்
எத்தனையோ.ஆண்களும், பெண்களும்,குழந்தைகளும்.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் யதார்த்தம் அம்மா கோமதி.
கசப்பை விழுங்கி நாமே மற்றவர்களுக்குக் கசந்துவிடக் கூடாது.
நீங்கள் இதைப் புரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

நாம் பெற்ற மக்களைக் காப்பது தாயின் கடமை இல்லையா
துரை.
அப்போது இயலாமையால் கட்டுப்பட்டேன்.
அவர்கள் தெளிந்துவிட்டார்கள்.

நானும் தெளிய வேண்டும். மனம் நிறைந்த நன்றி மா.

Geetha Sambasivam said...

//நம் மனம் மாற மறுத்தது.
பலவிதங்களில் அவர்களைச் சந்திக்க மறுத்தது.

என்னுடன் சேர்ந்து என் மக்களும் அவதிப்பட்டதே
என் சினத்துக்குக் காரணம்.
அப்போதெல்லாம் சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்
என்பதே ஒரு மந்திரம் போல் ஒலிக்கும்.//
குழந்தைகள் அவங்க ரத்தம் என்பதால் மன்னிக்கிறார்கள் என நினைக்கிறேன். :) எனக்குள்ளூம் இத்தகைய கசப்பான நினைவுகள்! மறக்கவும் வேண்டும், மரத்தும் போக வேண்டும். :)

வல்லிசிம்ஹன் said...

குழந்தைகள் அவங்க ரத்தம் என்பதால் மன்னிக்கிறார்கள் என நினைக்கிறேன். :) எனக்குள்ளூம் இத்தகைய கசப்பான நினைவுகள்! மறக்கவும் வேண்டும், மரத்தும் போக வேண்டும். :)////////இதுதான் உண்மை கீதா மா. அவர்களது ரத்தம்.
இவர்களைச் சொன்னவர்களுக்கு இருக்கிறதோ

இவர்களுக்குப் பரிவு இருக்கிறது.கரந்தை ஜெயக்குமார் said...

வலிகளே வாடிக்கையாகிப்போவதுதானே வாழ்வு

நெ.த. said...

கசப்பை மறப்பது எனக்கு இயலாத ஒன்று. மன்னிப்பதும் என் குணம் இல்லை (அது நல்ல குணம் இல்லை என்றபோதும்)

இருந்தாலும் கடந்த வாழ்க்கையின் கசப்பை மீண்டும் நினைவுகூர்வதில் என்ன உபயோகம் இருக்கமுடியும்? மீண்டும் நம் மனம் புண்படுவதைத் தவிர. இருந்தாலும் எழுத்தில் வடிக்கும்போது மனது ஆறுதல் அடையும்.

வல்லிசிம்ஹன் said...

எக்காலும் உண்மை ஜெயக்குமார். மறக்கிறேன் என்பதை விட மரத்துப் போகிறேன் என்பதே உண்மை. உங்கள் புரிதலுக்கு நன்றி.மா.

வல்லிசிம்ஹன் said...

அன்றாட வாழ்க்கையில் நாம் சிலசமயம் மறந்துதான் போகிறோம் முரளி.
நான் ஞானி இல்லை.
இத்தனை வருடங்கள் கழித்தும் நம்மைத் தொலைபேசியில் அழைத்து வருத்தும் வலிமை
அவர்களுக்கு இருக்கிறது. சம்பந்தப்பட்ட
எல்லோரையும் விட வயதில் சிறியவள் நான்.
அது போல சமயத்தில் இந்தப் பதிவை எழுதிவிட்டால் மனம் கொஞ்சம்
அமைதி காணும்.
நன்றி ராஜா.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

மனத்தில் கசப்பை வைத்துக்கொள்ளவேண்டாம்.....உறுதியாகக் கடைபிடிக்கவேண்டிய ஒன்று.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஐயா. இனியும் நினைப்பதில் பொருள் இல்லை. மறக்கிறேன்.
நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள் நன்றி சோழ நாட்டில் பௌத்தம் பதிவு ஐயா.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: உங்கள் மனம் புரிகிறது வல்லிம்மா. அவற்றிலிருந்து வெளியே வந்துவிடுங்கள் இங்கு குறிப்பிடுவது டயரிக் குறிப்பு போலத்தான் சொல்லிவிட்டீர்கள் வடுக்கள் இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் அதைஹ் சிறிதாக்கிவிடுங்கள் உங்கள் உடல் நலம் முக்கியம் இல்லையா வல்லிம்மா..

கீதா: துளசியின் கருத்துதான் எனதும். வல்லிமா நீங்கள் மகாபாரதத்தில் தர்மரின் வசனம் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது ஷமா ஹி சத்ய ஹை.....சொல்வது எளிதுதான்..இருந்தாலும் இப்புராணங்கள் எல்லாம் நமக்குப் போதிப்பது அதுதானே இல்லையா வல்லிமா. உங்கள் மனதை எனக்கு நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. என்றாலும் உங்கள் உடல் நலன் முக்கியம் இல்லையா...அதனால் தான்...மனதிடத்துடன் கடந்து வந்துவிட்டீர்களே!!! அதை நினைத்து சந்தோஷப்படுங்கள் அவ்வளவுதான்...இறைவன் நல்லதே அருள்வான் உங்கள் மென்மையான மனதிற்கு வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அருமை துளசி, கீதா,
நல்ல வேளை விபரீத நடப்புகள் மறந்துவிட்டன.
மற்ற சிறு வடுக்களையும் மறக்கிறேன். உண்மைதான். இரத்த அழுத்தம் ஏறித்தான் விடுகிறது.
இனி இந்த கோபத்தினால் என்ன பயன்.

நலமே வாழலாம். நன்றி கீதா மா. துளசி மா.