எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
ஐஐடியின் 4
வருடங்களும் மெதுவாகவே நகர்ந்தன.
எனக்கும் மூன்று முழந்தைகள் பிறந்தன.
ஒவ்வரு குழந்தை பிறக்கும் போது இரண்டே நாட்கள்
வந்து பார்த்து விட்டுப் போவான்.
அவன் தேர்வு முட்யும் போதே அவன் புகழ் பெற்ற
பாட்டா கம்பெனியில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பட்டான்.
அப்பா அம்மாவுக்குக் கவலைதான்
முதலில் பயிற்சி ஃபரீடாபாடில்.
ஆறுமாதங்கள் முடிந்ததும் கல்கத்தாவில் வேலை ஆனது. அவனுக்கு மிகப்ப் பிடித்துவிட்டது
கல்கத்தா.
ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வந்துவிடுவான்.
கல்கத்தவில் என்ன எல்லாம் கிடைக்குமோ,
அத்தனையும் பெட்டிரில் வந்து விடும்,
குழந்தைகள் கால் அளவு வருடா வருடம் எடுத்துப் போய் எக்ஸ்போர்ட்
தரத்தில் பூஜா ஹாலிடேஸ் போது வந்துவிடும்.
பெண்களுக்கு வேண்டிய அத்தனையும் புடவையோ இன்னும் என்னவோ
எல்லாம் ,முர்ஷிதபாத் பட்டு முதல் கொண்டு வாங்கி வந்துவிடுவான்.
திருச்சி வீடே அல்லோலகல்லப் படும்.
புதுப்புடவை ,செருப்பு சகிதம் ஹோட்டல் சங்கம் சென்று
இரவு சாப்பாடு முடித்து வருவோம். நான்கைந்து.
நாட்கள் கழிந்ததும் கல்பாக்கம் செல்வான்.
எனக்கோ அவன் சென்னைக்கு மாற்றி வந்துவிடமாட்டானா
என்று இருக்கும்.
இதற்கிடையில் ரங்கனுக்கு சென்ட்ரல் எக்ஸைசில் வேலை கிடைத்தது.
முரளிக்கு 27 வயதாகியது. பெண் பார்க்க வேண்டியதுதன் என்று
அம்மா அப்பா தீர்மானித்தார்கள்.
அவனுடைய ஜாதகத்துக்குப் பொருத்தமான பெண் பாட்டி
வீட்டுக்குப் பக்கத்திலியே இருந்தாள்.
குடும்பம் பெரியது.
எங்களுக்குப் பார்த்துப் பிடித்துவிட்டதுடா நீ வா என்று தொலைபேசியில் சொன்னோஓம்.
அவனுக்கு என் மேல் அத்தனை நம்பிக்கை.
ஒரு பெண் தான் பார்ப்பேன். அவளையே தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று
என்னிடம் முதலிலேயே சொல்லி இருந்தான்.
பெண் வசந்தி பார்த்ததுமே மனதை ஆட்கொள்ளூம் இனிய குணம் அழகு,அடக்கம்
எல்லாம் கொண்ட பெண்ணாக இருந்தது தான் அமைப்பு.
திருமணத்தேதி நிச்சயம் செய்து விட்டு, அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு
கல்கத்தா சென்றுவிட்டான்.
அம்மா அப்பாவுக்கு இனிய பயணமாக் அமைந்தது.
அங்கிருந்தே புபனேஸ்வர், ஆக்ரா,என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான்.
பெட்டி நிறையத் திருமணத்துக்குத் தேவையான சின்ன பொருட்களை
வாங்கி வந்தனர்.
மே 14 ஆம் தேதிக்கு முஹூர்த்தம்.
பத்தாம் தேதியே மாப்பிள்ளை வந்துவிட்டார். எல்லொரும்
திருமணத்துக்கு வருமாறு அக்கா அழைக்கிறேன்.

6 comments:
திருமண நாள் வாழ்த்துகள்
என்ன அழகான நினைவுகள்...திருமணத்துக்கு வந்துவிட்டோம் வல்லிம்மா உங்கள் நினைவுகளுடன் நாங்களும்!
துளசிதரன், கீதா
நினைவுகளில் மூழ்கி நீங்கள் செல்லும்போது நாங்களும் உடன் வந்து கொண்டிருக்கிறோம்!
மிக மிக நன்றி ஜெயக்குமார். வாழ்க வளமுடன்.
மிக நல்வரவு துளசி அண்ட் கீதா.
இருந்து உணவு உண்டு உங்கள் வாழ்த்துகளை தம்பிக்கும்
மனைவிக்கும் சொல்லுங்கள்.
எமது வாழ்த்துகளும்...
Post a Comment