Add caption |
Add caption |
போன பதிவில் சொன்னது போல 1997இல் பலகை தடுக்கினது.
அப்பா கேட்பது போல அது வந்து உன்னைத் தடுக்கித்தா. அதுக்கு உசிரே இல்ல.
நீ பராக்கு பார்த்தேன்னால் அது என்ன செய்யும். நல்ல வேளை சிங்கம் கை கொடுத்தார்.
ஊனி ஊன்றி நடந்தே அந்தக் கல்யாணத்துக்குப் போய் வந்தோம். சம்பந்தி வீட்டுக் கல்யாணம்.
ஸ்பெஷலா, சமையல் நடக்கும் அறையிலியே ,நாற்காலி மேஜை போட்டு சாப்பாடு.
அய்யோ பாவம் சம்பந்தி மாமி காலைப் பாரேன். இரண்டு மூணு அப்பம் கட்டின மாதிரி இருக்கு.
ரிசப்ஷனுக்குப் போகவில்லை.
சரி அடுத்தாற்போல நம்ம டயபெடிக் ரெஜிம் ஆரம்பித்தது.
டாக்டர் செரியன், உன் முதுகு எலும்பெல்லாம் உதிருகிற மாதிரி ஆஸ்டியோ போரொசிஸ் ஆரம்பித்திருக்கு.
மெரினாவில 45 நிமிடம் நடந்ததால் தான் நீ சரியா இருப்பேன்னு மிரட்டி இருப்பார்.
சிங்கத்திடம் அலுத்துக் கொண்டேன்,உங்க வீட்டுக்கு உழைத்து என் எலும்பே தேய்ஞ்சு போச்சு என்று.
அவர் புருவங்களை உயர்த்தி நிஜமாவா. என்று சந்தேகப் பார்வை பார்த்தார்.
ம்ஹூம் இந்த மனுஷனுக்குப் புரியாதுன்னு நிறுத்திக் கொண்டேன்.
டாக்டர்,சிங்கத்திடம், நீயும் கூடப் போ. விழுந்தால் தூக்கி விடணும் என்று ஆர்டர் போட்டார்.
ரீபாக் ஷூ என்ன ,காஞ்சி காட்டன் சாரி//முதல் தப்பு// என்னன்னு கிளம்பியாச்சு.
அடுத்த நாள் காலை 5 மணிக்கு.
மெரினாவில் கொஞ்சம் இருள் பாக்கி இருந்தது.
என்ன நீ வரியா. கடலைப் பார்த்துண்டு நிக்கப் போறியான்னு அவர் நடையைக் கட்டினார். இனி அது நேப்பியர் ப்ரிட்ஜ் போய்தான் திரும்பி வரும்.
எனக்குக் காலக் காற்று, நடந்து வரும் நம்பியார் சாமி, சிவக்குமார் தம்பதிகள்
இவர்களூக்கு வணக்கம் போட்டுக் கொண்டே ,அன்ன நடை போடப் பிடித்திருந்தது.
அப்படி ஒரு காலை வேளையில் கொஞ்சம் வயசான குழு,வெள்ளை வேட்டி,ஜிப்பா என்று வந்து கொண்டிருந்ததைப் பார்த்துப் பாதையை விட்டு ஓரமாக நின்று கொண்டேன்.
நான் ஒதுங்கின இடத்தில் ஒரு பெரிய கல்.
தடால் விழுந்தாச்சு. நெற்றியில் ஒரு கீறல் ரத்தம்.
அவர்கள் அவசரமாக அருகில் வந்தனர்.
விழுந்துட்டீர்களே, இதோ இந்தக் கர்சீஃப்னால நெற்றியைத் துடைத்துக் கொள்ளுங்கள் என்று நீட்டிய ஜிப்பா கை, நம்மவர் கமலோட அண்ணா சாருஹாசன்.
எனக்கு மிகக் கஷ்டமாகப் போய்விட்டது. குடிக்கத்தண்ணீர் கொடுத்தார்கள்.
where do you live, shall we drop at your house// என்றதும்,
நான் இவருடன் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லவும் ,இவர்
வரவும் சரியாக இருந்தது.
அவர் முகத்தில் ஒரே சிரிப்பு. இங்க்கயும் விழுந்திட்டயான்னதும்.
மற்றவர்கள் நெத்தில அடி சார். ஏடிஎஸ் போட்டுக்கணும்
என்றெல்லாம் சொல்லவும்.
நான் பார்த்துக்கறேன் சார்.//
எனக்கு சாருஹாசனின் கர்சீஃப் உறுத்தியது.
I shall wash and send it to you// ந்னதும் பெரிய ஜோக் சொன்ன மாதிரி
சிரித்தார்கள்.
சரியான கேனம்னு நினைத்திருக்கலாம்.
இன்னும் இவர் ஏதாவது சொல்லப் போறாரோ என்று பார்த்தால் அவரும் சிரிக்கிறார்.
சரியான Damsel in Distress மாதிரி இருந்தம்மா நீ. ஹாஹா.
கொஞ்சம் ராங்க் சைட் ஆஃப் 40ஸ்.
வீட்டுக்கு வரும் வரை சிரிப்பு ஓயவில்லை. பிறகு பார்க்கலாம்.
இந்த ஆண் வர்க்கமே இப்படித்தான். இவர் நீளக்காலை வைத்துக் கொண்டு
ஓடி இருக்காவிட்டால் அசட்டுப் பட்டம் தடுத்திருக்கலாம்.
Add caption |
19 comments:
படிக்கும்போது சிரிப்பாக இருந்தாலும், இப்படி விழுவது பெரிய கஷ்டம்.
சிலருக்கு இப்படி விழுவது தொடர்து நடக்கிறது!
//இவர் நீளக்காலை வைத்துக் கொண்டு
ஓடி இருக்காவிட்டால் அசட்டுப் பட்டம் தடுத்திருக்கலாம்//
டாகடர் சொல்லியும் சார் உடன் வரவில்லை, வந்திருந்தால் அசட்டுப் பட்டம் தடுத்திருக்கலாம் தான்.
வேறு அனுபவம் கிடைத்து இருக்கே!
உறவினர் பேசுவது போல் எனக்கு பக்கத்து வீட்டினர் பேசி இருக்கிறார்கள் அக்கா.
கார்டூன் பூனையார் போல வழுக்கி கொண்டே போய் எதிலாவது போய் முட்டியபின் தான் என் கீழே விழுதல் நிற்கும்.
அதனால் இடுப்பு எலும்பு விரிவு கொடுத்து விட்டது, வெகு நேரம் உடகார முடியாது.
கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது , விழுந்து விழுந்து தண்டுவடம் ஜாம் ஆகி விட்டது ரொம்ப நேரம் உட்கார்ந்தால் இடுப்பில்தான் வலி வரும் அதனால் நடக்க வேண்டும்.
விழுந்து விட்டதும் அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வந்து நல்லவேளை இத்தனை தடவை கீழே விழுந்தும் கால் கை உடைய வில்லையே ! என்று கேட்டுப் போவார்கள்.
அழுவதா சிரிப்பதா தெரியாது.
அன்பு வெங்கட்,
அதிக ஆடவர்களைப் பார்க்கும் போது வரும் கூச்சம் தான். என்னால்
படபடவென்று நடக்கப் பிடிக்காது . மோதவும் பிடிக்காது.
இனி கவனமாக இருப்பேன் அப்பா. நன்றி.
ஓ. பேசுபவர்களுக்கு என்ன குறை அம்மா.
எனக்கும் முதுகுத் தண்டு இறுகி சிக்கல் ஏற்படுகிறது.
சிலருக்கு இது ஒரு கஷ்டமாகிப் போகிறது.
எலும்பு உடையாமல் சிலசமயம் தப்பி இருக்கேன்..
லிகமெண்ட் அறுந்து போகும்.
வலிதான் அதிகம்.
இறைவன் காக்கட்டும். வேறென்ன செய்ய முடியும்.
நம்மால்
ஒருவருக்கும் தொந்தரவு கொடுக்காமல்
இருந்து போக வேண்டும்.வாழ்க வளமுடன்.
ஆமாம்,படிக்கும்போது புன்னகைத்தாலும், அப்போது கஷ்டம்தான். ஆமாம், நடைப்பயணத்தில் அந்தக்குழுவில் உலக்கைநாயகன் இல்லையா அப்போது?!! (ரொம்பக்கவலை!!!!)
நடந்தால் எலும்புகள் வலுப்பெற்று விடுமா?
உலக்கை நாயகன் அவர் வீட்டு மாடில அப்போ எல்லாம் தண்டல் பஸ்கி எடுப்பார்.
மெரினாவுக்கு வருவதெல்லாம் எங்களை மாதிரி இருந்தவர்கள்.ஸ்ரீராம்.
ஆமாம் பா ஸ்ரீராம். அதுதான் அப்போ சொன்னார்.நடந்தால் வலுப்பெறும் தசைகள்.
எலும்புக்கும் பயன் என்றார்.
அனுபவம் இரசிக்க வைத்தது அம்மா.
என்ன போங்க! நானெல்லாம் கீழே விழுந்தால் நானே தான் எழுந்துப்பேன். உங்களை விஐபி எல்லாம் வந்து கவனிச்சிருக்காங்க! ஒருவேளை மெரினாவில் விழுந்திருக்கணுமோ? ஹிஹிஹி! நல்லாத் தான் இருக்கு. :) எனக்கு நடப்பதும் இப்போல்லாம் கஷ்டமா இருக்கு, நிற்பதும் கஷ்டமா இருக்கு, உட்காருவதும் கஷ்டம்! படுத்துண்டால் அதைவிடக் கஷ்டமா இருக்கு! :))))
கவனம் சகோதரியாரே
சற்றே கவனமாக இருப்பது நலம்.
துளசிதரன்: வல்லிம்மா உங்கள் பதிவு வாசித்த போது மனது ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. விழுவது என்றால் அதுவும் அடிக்கடி எனும் போது எவ்வளவு பிரச்சனைகள் வரும் அதனால். உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். வேதனையையும் நகைச்சுவையுடன் எழுதுவது என்பது உங்கள் பாசிட்டிவ் மனதைச் சொல்லுகிறது. பிரார்த்தனைகள். இன்று உங்களுக்குப் பிறந்தநாள் என்று அறிந்தேன். மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! என்றென்றும் உடல்நலத்துடன் இருந்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் அம்மா.
கீதா: வல்லிம்மா உங்கள் எழுத்து நடை சிரிப்பை வரவழைத்தாலும்....அதன் வேதனையையும் புரிந்து கொள்ள முடிந்தது. கவனிச்சுக்கோங்க வல்லிம்மா...எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு..
விழுவதில் தவறில்லை, விழுந்தே கிடப்பதுதான் தவறு என்பார்கள். நீங்கள் எழுவதோடு மட்டுமல்லாமல் அதை சுவையாக பகிர்ந்தும் கொண்டிருக்கிறீர்களே பாராட்டுக்கள். Jokes apart take care Valli akka.
அன்பு கீதா, இது பழைய கதை இல்லையா. அப்போது எழுந்திருக்க தெம்பு இருந்தது.
வி ஐ பிகள் உலவும் நேரும். ஒதுங்கியே இருந்திருக்க வேண்டாம்.
அத்தோட போச்சுனு நினைத்துக் கொள்ள வேண்டும். இப்போ விழுந்த கதைதான் நீண்டு கொண்டு போகிறதே. ஹாஹா.பத்திரமாக இருங்கள்.
உண்மை தான் அன்பு ஜெயக்குமார். கடவுள் அருளால் மேற்கொண்டு
ஆபத்தில்லாமல் இருக்க வேண்டும்.
வணக்கம் ஐயா. இனி கவனமாக இருக்கிறேன். இறைவன் சித்தம் முனைவர் ஐயா.
அன்பு துளசிதரன் ,கீதா இருவருக்கும் மனம் நிறை நன்றி.
விழுபவர்களைக் கண்டு நகைக்கும் உலகம் முன்னால் இருந்தது. இப்போதெல்லாம் மனிதர்கள் நிறையவே உதவி செய்கிறார்கள்.
சிரித்துதான் வலியைக் கடக்க வேண்டும்.
பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி.
என் மனம் நிறை ஆசிகள் உங்கள் எல்லோருக்கும்.
உடம்பு வலியைத் தாங்கி எழுந்து விடலாம் //அன்பு பானு.//
வயதான பிறகு ஆரோக்கியத்தில் மிகக் கவனம் தேவை என்பதை
பெப்ரவரி மாதம் விழுந்தது அறிவுறுத்துகிறது.
2008இல் நடந்த கதை. ஓஹோ விழுந்த கதை.
பிறகு ரத்த அழுத்தம் தான் காரணம் என்று தெரிந்தது.
இனி இன்னும் பத்து வயது கூடி விட்டது இல்லையா.
நினைத்து சிரித்து மறக்க வேண்டும். நன்றி கண்ணா.
Post a Comment