
அதென்ன மா. நாம 13 பேரு இதுல சீட்டும் 13 நு
கணக்குப் போட்டு இந்த வண்டி எடுத்தியா என்று கேலி செய்தான் மகன்.
உங்கம்மா மாதிரி யார் பண்ணுவாடா என்று அப்பாக்குப் பெருமை.
தம்பி ரங்கன் பசங்கள் கொறிக்க க்ராக் ஜாக், நேந்திரங்காய் சிப்ஸ், சுஸ்வாதிலிருந்து
முறுக்கு,தட்டை என்று பெரிய பையோடு ஏறி இருந்தான்.
முரளிக்கு இந்த நொறுக்கு சாப்பிடுவதற்கு அவ்வளவாகப் பிடிக்காது.
அவன் பெண்டாட்டி ,கணவர் ,மகனுக்கு ஏற்ற இட்லி, தோசை மிளகாய்ப் பொடி தடவினது, சர்க்கரை தூவினது என்று அழகாகப் பார்சல் கொண்டு வந்திருந்தாள்.
ரங்கன் ,பெண்டாட்டி கதம்ப சாதம் எல்லோருக்கும் பெரிய டப்பாவில்
கொண்டு வந்தாள். அம்மாவின் திருக்கண்ணமுது
நெய் வாசனையோடு மணத்தது.
அப்பா எல்லாவற்றையும் பார்த்து மூக்கில் வழக்கம் போல் கைவைத்தார்.
ஒரு நாள் தானே போகீறோம்.
என்று கேலி சொல்ல, அம்மா புன்னகைக்க வண்டி கிளம்பியது.
பாண்டி பஜார் வினாயகருக்குத் தேங்காய் உடைத்து விட்டு,
சிங்கம் சொன்ன வழியில் கூரம் ஊருக்கு வந்தோம்.
அப்பா கூரத்தாழ்வார் சரித்திரத்தைக் குழந்தைகளுக்கு
சொல்ல ,சுற்றி உட்கார்ந்து கேட்டார்கள்.
ஸ்ரீ ராமானுஜ சரித்திரம் பின் தொடர, திரு வேளுக்கை நரசிம்ம ஸ்வாமியைத் தரிசித்தோம்.
சில ஸ்லோகங்களைச் சொல்லி,
குழந்தைகளை சொல்ல வைத்தார். Appa was in his elements.happy.
அங்கிருந்து கிளம்பி காஞ்சிபுரம் அடையவும், வரதராஜர் கோவில்
நடை சாத்தவும் சரியாக இருந்தது. பட்டர்கள் வெளியே வரவும், அப்பா அவ்ர்களிடம்
தரிசன் நேரம் கேட்டார், இன்று 4 மணிக்குத் திறந்துவிடுவோம்.
வெள்ளிக்கிழமை தாயாருக்கு அலங்காரம் எல்லாம் செய்து
சாயந்திரம் புறப்பாடு உண்டு. நீங்கள் இங்கயே தங்கி குளங்களெல்லாம் சுற்றிப் பாருங்கள்.
பாண்டவதூதன் கோவிலுக்குக் கூடப் போகலாம், கோவில் சாவி என்னிடம் இருக்கிறது
நீங்கள் என்னோடு வருவதனால் போகலாம் என்றதும்,
எல்லோரும் கிளம்பி வண்டியில் ஏறினோம்.
![]() |
Add caption |
![]() |
Add caption |
![]() |
Add caption |
11 comments:
ஆஹா புளியோதரை வாசம் கமகமக்கிறதே...... வீட்டுச் சாப்பாடு, கதை சொல்ல ஒருத்தர், கேட்க குழந்தைகள் என பயணம் போவது எத்தனை மகிழ்ச்சியான விஷயம்.
தொடர்கிறேன்மா....
அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
அது புளியோதரை இல்லை. கதம்ப சாதம்.
வாசனை டெல்லி வரை வந்து விட்டதே.
உண்மையான மகிழ்வான பயணம். வாருங்கள் ஆதி,ரோஷ்ணீ
எல்லோரும் போகலாம்.
கதம்பசாதம் என்பது வெஜிடபிள் புலாவ் போல... இல்லையா! திருக்கண்ணமுது.. சுவை இட்லிகள்....
கூரம் ஊர் எங்கிருக்கிறதும்மா? காஞ்சிக்கு அருகிலா?
அருமையான பயணம். சுவையான அனுபவங்கள், சாப்பாடு!
குடும்பத்தோடு பயணம் இனிமையான ஒன்று
நான் உங்கள் தம்முகள் இருவரின் கட்சி. இந்தமாதிரி பயணம் போறதுன்னா கடைலயும் நொறுக்குத்தீனி, வீட்லயும் தயார் செய்ய முடிந்தால் மிளகாய்ப்பொடி தடவிய இட்லி, புளியோதரை (தண்ணீர் பாட்டில்கள்), தயிர்சாதம். இதுல ஜலமா நெகிழ இருக்கற திக்கத்துக்கு எங்கு இடம்? கொண்டு செல்வதும் பரிமாறுவதும் கஷ்டம் இல்லையோ?
அந்த அந்த இடங்களின் சரித்த்தைத் சொல்வது அருமையான ஐடியா. அதனால்தான் நாங்கள் பார்க்க மறந்த சீதை ;ஹ்ருதயாலீஸ்வர்ர்), ராமர் வனவாசம் போன்றவற்றை நீங்கள் சொல்ல முடிந்தது. ரசித்துத் தொடர்கிறேன்.
உணவுகள் ஆளுக்கு ஒன்று கொண்டு வர , தாத்தா குழந்தைகளுக்கு கதை சொல்ல காட்சிகள் கண்ணில் விரிகிறது.
அருமையான அழகான பயணம்.
மனங்கள் அன்பால் நிறைந்து வழிய பயணம் இனிமை.
அன்பு ஸ்ரீராம், கதம்ப சாதம்,
துவரம் பருப்பு வேகவைத்துக் கடைந்து,
நாட்டுக் காய்கறிகளொடு, டபுள், பீன்ஸ், பட்டர் ,பீன்ஸ், குடமிளகாய் வதக்கி. சரிக்கு சரி
சாதம் செய்து வைத்துக் கொண்டு, சாம்பாருக்கு அரைத்துவிடுவதைப் போல
தேங்காய், புளியும் வறுத்து அரைத்து , குழம்பு கொதித்து இறக்கி சாதம் கலந்து நெய்விட்டுப் பிசிந்தது. கடையில் கருவேப்பிலை, கொத்தமல்லி கலந்து விட்டால்
பிரமாத வாசனையாக இருக்கும். Kooram is near to Kanchipuram abt 10 kms maybe.. anyone with Eye problem used to there to pray.
அப்பாவுக்கு அல்சர் கண்டு பிடிக்கப் பட்டதிலிருந்து அம்மா
ரொம்பக் கவனமாக இருப்பார் கீதா மா.
அதனால் எல்லாமே வீட்டிலிருந்து எடுத்துப் போவதுதான்.
ஒரு ஏழு வருடங்கள் இது போலப் பயணம் செய்திருக்கிறோம்.
அன்பு நெ த, படைப்பதை நீங்கள் ருசிக்கும் விதமே அழகு.
உங்களுக்கு அம்மாவைப் பத்திதெரியாது.
எங்கள் வீட்டு ஸ்பெஷல் கூஜாவில் இந்தத் திக்கம் சவாரி செய்யும்.
கூஜாவிற்குள் ஒரு குட்டி டம்ப்ளர் இருக்கும். வண்டி நின்னு வரதராஜர்
கோவில் மண்டபத்தில் உட்கார்ந்து, குளத்தில் கைகால் அலம்பி
இனிக்க இனிக்க சாப்பிட்டோம்.
அப்பா பிறந்த நாளைக்கு கண்ணமுது இல்லாமலா. நன்றி ராஜா.
கோவில் குருக்கள் சொல்லிதான் எனக்கும் தெரியும். சீதையைக் கர்ப்பிணி ரூபத்தில் இங்கு மட்டும் தான் பார்க்க முடியும்.வால்மீகி, லவ குசா கூட இருப்பார்கள்.
ஆமாம், கோமதி மா. வெகு நிறைவான பயணம்.படங்கள் சென்னையில் இருக்கின்றன.
வாழ்க வளமுடன் அம்மா.
Post a Comment