Blog Archive

Wednesday, March 28, 2018

தம்பி முரளியும் அவன் வெள்ளை சட்டையும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 திருமங்கலம் 1956.

நானும் தம்பி முரளியும் முறையே மூன்றாம், இரண்டாம்
வகுப்பில் ,கஸ்தூரிபாய் காந்தி ஆதாரப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம்.

சலவைத் தொழிலாளி வீட்டுக்கு வந்து அப்பாவின் வேட்டிகள்,சட்டைகள், படுக்கை விரிப்புகளை மட்டும் எடுத்துப் போவார். ஒரே ஒரு தடவை தம்பியின்
வெள்ளை சட்டையை ,ஏதோ கறை நீக்க அவ்ரிடம் அம்மா
கொடுத்துவிட்டார்.
தம்பிக்கு மிகப் பிடித்த சட்டை.
சட்டை வந்துடுத்தாம்மான்னு கேட்டுக் கொண்டே இருப்பான்.

ஒரு வாரத்தில் கொடுப்பார்.அதில அழகா ஓரமா புள்ளி வச்சிருக்கும் பாரு
என்று சமாதானப் படுத்துவார் அம்மா.
அடுத்த நாள், அவனுடைய தோழனே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டுவந்தான்.
அவ்வளவுதான் இவனுக்கு ஒரே கலக்கம். என் சட்டையைக் கொடு  என்று அவன் பின்னாலியே சுத்தவும், பள்ளியை விட்டு ஓட ஆரம்பித்துவிட்டான் அவன்.
அவன் ஓட ,இவன் ஓட, இவன் பின்னால் நான் ஓட
 ஒரே குழப்பம். முரளி அந்தப் பையனை விடுவதாக இல்லை.
இரண்டு பர்லாங்க் போயிருப்போம். அங்கே போய் நின்ற பையனின்
வீட்டிலிருந்து வெளியே வந்தார் நம் சலவை செய்பவர்.
என்ன சாமி இங்க வந்திருக்கீங்க என்று வாஞ்சையோடு கேட்டவர்
தன் மகனையும் பார்த்தார். புரிந்துவிட்டது.

அடிக்கப் போனவரிடம் ,மனைவி வந்து தடுத்தார்.
நான் தான் போட்டுவிட்டேன். நீ அவனை அடிக்காதே.
என்றதும் அவர்,
என்னிடம்  நீங்க போங்க சாமி, நான் சட்டையைத் தோய்ச்சுக் கொண்டு வரேன்,
என்றார்.
இவனோ நகர மாட்டேன் என்கிறான். நல்ல வேளையக அங்கே எங்கள் தெருவிற்குத் தேங்காய் மிட்டாய்  கொண்டு வருபவர்
பஞ்சு மிட்டாய்க் கொண்டு வரவும்,
அம்மா கொடுத்த பத்து பைசா..என்னிடம் இருந்ததனால் ,ஒரு குச்சி வாங்கி இவன் கையில்
கொடுத்துக் கவனத்தைத் திருப்பி
வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
அம்மாவுக்கு ஒரே பெருமையும் சிரிப்பும்.
எனக்கு கோபம். அப்படியே ஓடறான் மா தெருவில. மாட்டு வண்டி வந்தால் என்ன செய்யறது.
பஞ்சு மிட்டாயை அவனுக்குக் கொடுத்துட்டேன்.
எனக்கும் வேணும்மா என்றதும் அம்மா சமாதானப் படுத்தினார்.
 மிகவும் மன்னிப்புக் கேட்டபடி வந்த சலவைக்காரரிடம்
சட்டையை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,
முரளிக்கு வேற ஒரு வெள்ளை புஷ் ஷர்ட் வாங்கினது இன்னோரு கதை.

அப்பா எனக்கும் அவனுக்கும் ட்ராக்கர்ஸ் என்று பெயர் வைத்தார்.

1992 ல  42 வயதில் அவன் பைபாஸ் செய்து கொண்ட போது அவனை சிரிக்க வைக்க நான்
 சொன்ன சம்பவங்களில் இதுவும் ஒன்று.
Add caption

9 comments:

கோமதி அரசு said...

அன்பான நினைவுகள் மிக அருமை.

ஸ்ரீராம். said...

முகநூலிலும் இப்போதுதான் படித்தேன். சுவையான சம்பவம் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான அனுபவம்.... சின்ன வயதில் நடந்ததை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அவ்வப்போது நினைத்துப் பார்ப்பது ஒரு ஸ்வாரஸ்யம்.....

தொடரட்டும் நினைவுகள்.

நெல்லைத் தமிழன் said...

ரசித்த சம்பவம். காலத்தினால் மறையுமோ?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். அவன் தான் எல்லோரையும் கிண்டல் செய்வான். இது போல நினைவுகளை நான் அவ்வப்போது சொல்லி ,நானும் கேலி செய்வது சகஜம் கோமதி மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உண்மையிலியே கொண்டதை விடமாட்டான். .
சீரியஸாக ,எதிலும் மும்முரமாக சிரத்தையோடு செய்வான்.

ஸ்ரீராம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், நல்ல சந்தோஷமான நாட்களை
எழுத நினைக்கிறேன். அன்பானவர்கள் என் சகோதரர்கள்.
நான் பாக்யம் செய்தவள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,
என் வீக் பாயிண்டே அதுதான். மறக்க மாட்டேன்.
கண்ணாடி, சீப்பு, டயரின்னு சின்ன விஷயங்களை
மறந்து விடுவேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சுவையான நிகழ்வு. கூறிய விதம் அருமை.