Friday, March 23, 2018

மாசி மாத வெய்யிலும் இன்ன பிறவும் 9

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 ஒரு மணி நேரம் கிடைத்ததும் ஜயம்மாவும், கீது,சீனு
ரவா உப்புமா செய்து சாப்பிட்டு முடித்தனர்.
சுற்றம், உற்றாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மாது தன் பள்ளித்தோழன் திருச்சியிலிருந்து வந்திருப்பதாக 
வெளியே சென்றான்,

கீது பெருமூச்செறிந்தாள்.
ஏன் மன்னி இவர் இவ்வளவு அவசரமாகக் கிளம்பினார். இவனோட எதிர்காலத்துக்கு நான்
என்ன செய்வேன். கல்லூரியில் கால் வைத்ததும் அவர் இல்லை என்றாகி விட்டது.
 என்று கண் கலங்கினாள்.
சீனு தங்கையின் அருகில் அமர்ந்தார். நீ வந்து கொஞ்ச நாட்கள் ஆகட்டும் என்றிருந்தேன்
கீது. மாதுவுக்கு நல்ல எதிர்காலம் செய்து கொடுக்கலாம்.

நாம் வடகம் சப்ளை செய்யும் நல்ல மனிதர்களில்  ஜஸ்டிஸ் மீனாட்சி சுந்தரமும் ஒருவர். ரிடயரானாலும் அவருக்கு, காலேஜ் வட்டாரங்களில்
நல்ல மதிப்பிருக்கிறது. நான் விசாரிக்கிறேன்.
அவன் எடுத்துக் கொண்டிருக்கிருக்கும் காமர்ஸ் க்ரூப்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வயது 20 ஆகிறது. 22 வயதில் அவன் பட்டம் பெற்று விடுவான்.
எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் அவனையும்
சந்தோஷமாகப் பார்த்துக் கொள்.
எங்களுக்கும் வேறு யார் சொல் என்று தேற்றினார்.

சரி நாங்கள் கிளம்புகிறோம். லஸ் பாட்டி படுத்து எழுந்திருப்பார்.
   நல்ல சூடான காப்பியுடன் காத்திருப்பார் என்று சிரித்தபடி 
கிளம்பினார்கள். அதுக்குள்ளயா காப்பி குடிப்பார் மன்னி என்று கேட்டாள்கீது.
ஆமாம், அவருக்கு எல்லாம் அப்படித்தான் வழக்கம்.
அவருக்கு அடுத்த பசி வருவதற்குள் நாம் முறுக்கெல்லாம் பிழிந்து வைக்க வேண்டும்//
என்று முகம் கைகால் அலம்பிக் கொண்டு  கிளம்பத்தயார் ஆனார்கள்.
நீங்கள் போய் அந்தக் குழந்தைகளைக் கீழே வரச்சொல்லி சாப்பிட்டு, நீங்களும் சாப்பிடுங்கள்

நாங்கள் மூன்று மணி வாக்கில் வந்துவிடுவோம் என்று வெளியே சென்றனர்.
மனம் நிறைய சிந்தனையோடு சீனு மாடிக்குச் சென்றார்.
கையில் படிப்புப் புத்தகங்களோடு இரு பெண்களும் இரு மூலையில் உட்கார்ந்து 
வடகங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மணி 12 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.
சீனு அவர்களைக் கீழே போய் சாப்பிட்டு வரச் சொன்னார்.
மாது வந்ததும் தான் கீழே வருவதாகச் சொல்லி அனுப்பினர்.
அந்தப் பெண்களும் அவர் சொல்படி சாப்பிடச் சென்றனர்.

அவர்கள் கீழே வரவும் வாசல் மணி அடிக்கவும் சரியாக
இருந்தது. மாது உள்ளே வந்து ,கைகால் கழுவிக்கொண்டு
 மாடியை நோக்கிச் சென்று விட்டான்.
இந்த இரண்டு பெண்களுக்கும் அவனது அடக்கம் பிடித்திருந்தது.
மீண்டும்  பார்க்கலாம்.

10 comments:

ஸ்ரீராம். said...

ஒரு கதை போல அழகாகச் சொல்லிக் கொண்டு செல்கிறீர்கள்.

Geetha Sambasivam said...

ஓ, வடாம் விற்பனைக்கா? வீட்டுச் செலவுக்கோனு நினைச்சேன். தொடரக் காத்திருக்கேன். அருமையாகச் செல்கிறது.

KILLERGEE Devakottai said...

நகர்வு அருமை அம்மா...
தொடர்கிறேன்...

Thulasidharan V Thillaiakathu said...

நிஜமே கதையாய்!!! வல்லிம்மா நீங்க எழுதுவது சொல்வது போலவும் காட்சியாய் விரிகிறது...ரொம்ப அருமையாய்....அதுவும் கறுப்பு வெள்ளையில் காட்சிகள் விரிகிறது!!! அவர்களின் உடைகள் கூட எப்படி இருந்திருக்கும்..என்றேல்லாம்..ஹா ஹா ஹா

கீதா

கோமதி அரசு said...

அருமையாக செல்கிறது.
நேரில் கேட்பது போல் உரையாடல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
கண்முன்னால் அவர்கள் வளர்ந்தார்கள். அன்பு நிறை தம்பதிகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா, விற்பனை செய்பவர்கள் தான்.
நெடு நாட்களாகத் தெரியும்.இப்பொழுது
அறுபதுகளில் இருக்கிறார்கள். இப்பொழுதும்
உழைக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டையார்,
மிக நன்றி மா.கொஞ்சம் கற்பனையும் கலந்ததே.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா. கற்பனை கொஞ்சம்,நடந்தது கொஞ்சம். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி பட்சணம் செய்ய வருவார்கள். அத்தனை சுத்தம். சிக்கனம்.
வேஸ்ட் என்பதே கிடையாது.
உமாராணி புடவை அப்போது விற்பார்கள்.
நம் வீட்டில் ,புடவைக்காரர் வரும்போது என் மாமியார் வாங்கி வைப்பார்.
ஜயம்மாவுக்கு எல்லாம் பொருத்தமாக இருக்கும்.
ஆறு கஜம் தான் உடுத்துவார்.
அதுவும் கறுப்பு,சிவப்பு நேர்கோடுகள் போட்ட
புடவை ரொம்ப அழகாக இருக்கும் அவருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, உங்களுக்கே தெரியும் நான் கதை சொல்லும் விதம்.
பேசாமல் கதை நகராது. நன்றி மா.