Blog Archive

Tuesday, January 09, 2018

என்றும் ஆள்பவள் ஆண்டாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  ஸ்ரீ கோதை நாச்சியார் , மனித வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்.
எல்லாமே வரலாற்று சம்பவமாக்ப் பதிந்திருக்கின்றன.
  இதில் யாரோ ஒருவர் அப்பழுக்குச் சொன்னர் என்றால் வருந்த வேண்டியது நாம் அல்ல. அவளிடம் தீரா பக்தி செலுத்தும் குடும்பங்கள் ,அதில் பிறந்தவர்கள் என்று பார்க்கும்போது,
 
இதெல்லாம் தீயினில் தூசாக வேண்டிய மொழிகள்.


பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. நாங்கள் சேலத்தில் இருந்த நேரம். அம்மா வீட்டிலிருந்து 3 மாதக் குழந்தையையும்,அவள் அண்ணனையும், என் தம்பி ,மற்றும் என் கணவரோடு ஒரு வண்டியில் சேலம் நுழைகிறோம்.

திடீரென் கறுப்புக் கொடிகளோடு ஒரு ஆரவாரக் கும்பல். என் வாழ்க்கையில் அதுவரை பார்த்திராத பெரிய பெரிய ராமர்,சீதை,லக்ஷ்மணன் பிம்பங்கள். அடுத்த காட்சி உறைய வைத்தது. அவர்கள் கழுத்தச் சுற்றி செருப்புகளால் மாலைகள்.
கெக்கலிக்கும் கோஷங்கள்.
கணவரே பிரமித்துப் போனார். குழந்தையோடு குனிந்து கொள்.
ரங்கா அவர்களைப் பார்க்காதே. என்ற வண்ணம் வண்டியை
லாவகமாக ஒடித்து வேறு சந்து வழியாக வெளி வர வழி செய்தார்.
இன்னும் பசுமையாக அந்த அலங்கோலம் நினைவை விட்டு அகலவில்லை.
 இது நடந்து 48 வருடங்கள் ஆகிறது.

இந்த நிகழ்ச்சியை பின்னர் ,என் மாமனார் வந்திருந்த போது,
மனிதர்கள் செய்யும் எந்த மாற்று நிகழ்வும் பகவானைத் தொடாது.
என்று விளக்கிச் சொன்னார்.
அதே போல இப்போது நடந்திருக்கும் சொற்பொழிவு.

 இதற்குப் பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உலகத்தைக் காப்பவர்களுக்கு, நாம் அரண் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
காலம் பதில் சொல்லும்.

7 comments:

ஸ்ரீராம். said...

============================================================================
கவிப் பேரரசுவுக்கும் கவிப்பேரரசு ரசிகர் மன்றத் தலைவராக இருக்கும் தங்களுக்கும்... ஒரு அழகான வெண்பாவை கண்ணில் காட்டுகிறேன். இது 15ம் நூற்றாண்டுத் தமிழ்!

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் – வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்றணுகக் கூசித் திரி

=================================================================

இது செங்கோட்டை ஸ்ரீராம் (முன்பு தினமணியில் பணிபுரிந்தவர்) முகநூலில் எடுத்துக் காட்டியிருக்கும் கவிதை.​

வெங்கட் நாகராஜ் said...

சரியான பார்வை இது தாம்மா.... என்னவோ சொல்லி விட்டு போகட்டும். இதுவும் கடந்து போகும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் வல்லிம்மா நானும் சில தளங்களில் உங்களைப் போன்று சொல்லியிருந்ததை வாசித்து அறிந்தேன் வைமு சொல்லியிருப்பது பற்றி. உங்கள் பார்வையை வழிமொழிகிறேன்..யார் வேணா என்ன வேணா சொல்லிக்கட்டும் இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகிக் கொண்டு...கண்டு கொள்ள்வே கூடாது..

ஸ்ரீராம் சூப்பர்ப் அந்த ஸ்ரீராம் அவர்களின் மேற்கோளூம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தீயினில் சூசாகும் செப்பேலோரெம்பாவாய்!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,,
அவர் பேச்சை வாசித்த போது இந்தத் தப்பையும் செய்திருக்க வேண்டாமே
என்று தோன்றியது.
கர்ணகடூரமான ஓசையைக் காது மூடிக் கேட்காமல் செய்வதில்லையா.
அதைப் போலக் கண்களுக்கும் மனசுக்கும் தவறான எண்ணங்களைப் பார்க்கவும் பதியவும் விடாமல் பயிற்சி கொடுக்க வேண்டும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அதே உண்மை. அன்பு வெங்கட்,
நாம் கடந்துவிடுவோம்.நற்சொல் மட்டும் கேட்போம்.
இறைவன் துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
சாதாரண மனிதர்களையே இழிதல் தகாது.
தெய்வங்களை இழிதல் இன்னும் தகாது.
கேட்டு நாம் கூசலாம். வைகுண்ட நாதருக்கோ அவரது பிராட்டிகளுக்கோ
இது அணுவளவும் பாதிக்காது.
நீங்கள் படித்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி அம்மா.