அன்புள்ள சுஜாதா(ரங்கராஜன்)
பின்னணியிலேயே இருந்து நீங்கள் காத்த பொக்கிஷம் இன்று தன் எழுத்தை முடித்துக் கொண்டதாகச் சொன்னீர்கள்.
இந்த இழப்பில், உங்கள் மனதிலிருந்து வரும்
இந்த
இலக்கிய வரிகளை என்ன என்று சொல்வது.
ஒரு அறிவாளியின், ஒரு மாபெரும் புகழ்படைத்த
மனிதருக்கு மனைவியாக இருந்து ,
காரியம் யாவிலும் கைகொடுத்த
இணை நலம் நீங்கள்.
அவர் எழுத்துக்களில் அவ்வப்போது நீங்கள் தலை காட்டும்போது இப்படி ஒரு வெகுளிப் பெண் உண்டா
என்று வியப்பேன்.
நேரில் பார்த்ததும்தான்
ஒரு பெரிய மனிதரின்,,
புத்தியே உரு எடுத்த ஒரு விஞ்ஞானியின்
மனைவியாக இருக்க வேண்டிய
தகுதி அனைத்தும் படைத்த ஒரு
பெண்ணாகவே பார்த்தேன்.
உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் கிடையாது.
குழந்தைகளுக்கும், பேரனுக்கும் எங்கள் அனுதாபங்கள்.
உங்கள் கணவர் ஸ்ரீ ரங்கராஜனுக்கு எங்கள் அஞ்சலி.
அவர் வார்த்தைதிறனை இனிமேல் எங்கே பார்க்கப் போகிறோம்.???
20 comments:
ஒ...சுஜாதா அம்மையாருக்கா இந்த கடிதம். மிக்க உருக்கமாக இருக்கின்றது. என் அனுதாபத்தையும் தெரிவிக்கவும்:-((
நாளைக்கும் அங்கே போவேன்(மனதுக்குத் தெம்பிருந்தால்.
அபி அப்பா, வெள்ளை உள்ளம் கொண்டவர் இந்த அம்மா.
வேறு யார் சமைத்தாளும் அவர் ஒத்துக் கொள்ள மாட்டாராம்.
எத்தனையோ தியாகம்.
சேதி தெரிஞ்சதுமுதல் மனசுக்குப் பாரமா இருக்குப்பா.
திருமதி சுஜாதாவுக்கும், அவர் குடும்பத்துக்கும் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவிக்கின்றோம்.
கடைசிவரை தான்க்யூ தான்யூ னு சொல்லிட்டே இருந்தாராம்.
இவங்க வரை அவ்வளவு நல்லா கவனித்துப் பார்த்துக் கொண்டதால் தான்
இவ்வளவு நாட்கள் அவர் எழுத முடிந்த்தது என்று நினைக்கிறேன்.
மனதுக்கு ரொம்ப வருத்தமளித்த செய்தி வல்லி..உங்களுக்கு சுஜாதாவை பெர்செனலா தெரியுமா??நீங்க பாக்கும் போது எங்க எல்லாருடைய வருத்தங்களையும் சொல்லுங்க...எல்லாரையும் சிரிக்க,சிந்திக்க வச்சார் அவர். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.
கட்டாயம் சொல்றேன் ராதா. போனில ஒரு பந்தாவே இல்லாம பேசற சுபாவம்.
ரொம்ப இளகின மனசு.
மிக்க உருக்கமாக இருக்கின்றது. என் அனுதாபத்தையும் தெரிவிக்கவும்:-((
தமிழுலகிற்கு ஒரு மாபெரும் இழப்பு. அன்னாரை இழந்து பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
அவரது எழுத்துகள் மூலம் அவரது புகழ் என்றும் மங்காது ஒளிவீசும்.
வாய்ப்புக் கிடைக்கும் போது கட்டாயம் தெரிவிக்கிறேன் அம்பி.
நன்றி ராசா.
உண்மைதான்.
எழுத்துகள் மூலமே அவர் வாழ்வார்.
வசீகரமான எழுத்துக்கு சொந்தக்காரர்.
கணேஷ் வசந்த் மறக்க முடியாதவர்கள்.பலநேரங்களில் விவாதப் பொருளாகிப் போனாலும் அந்த எழுத்துக்களை யாராலும் ஈடு செய்ய முடியாது.கதை படிக்கும் ஆர்வமே அவரால் ஏற்பட்டதுதான்.
திருமதிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை சொல்லிக் கொள்கிறேன்.
திருமதி சுஜாதாவுக்கும், அவர் குடும்பத்தாருக்கும் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவித்துவிடுங்கள் வல்லியம்மா.
ஒரு தரமாவது நேரில் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் :(( அவரை பெர்சனாலாக தெரியும் என்று சொல்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.
அவர் மறைந்ததை கேள்விப் பட்டதும் வருத்தமாய் இருக்கிறது. எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கவும்
கல்லூரி நாட்களில் தன்னுடையஎழுத்தாற்றலினால் என்னை அடிமையாக்கியவர். ஆவலுடன் காத்திருந்து படிப்பேன். வாரக் கதையை யார் முதலில் படிப்பது என்று போட்டியே வரும்.மனது கனத்து விட்டது. என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மறைந்தது போல் உணர்வு.அவர்களுடைய குடும்பத்துக்கு ஆறுதல் அவர் வணங்கிய அந்த ரங்கநாதன்தான் தர வேண்டும்.என்னுடைய ஆற்றாமையையும்,வருத்தத்தையும் தெரிவியுங்கள்.
When my heart is sorrowful
My toungue is still
கண்மணி,
எல்லாருடைய வாழ்க்கையையும்
தொட்டு இருக்கிறது அவரது எழுத்து.
வேறு விதமாகச் சிந்திக்க வைத்த பெருமை அவருக்கு உண்டு.
இன்னும் சில நாட்கள் கழித்து தான் திருமதியுடன் பேச முடியும்.சொல்லிவிடுகிறேன்.
காட்டாறு,
தொலை பேசியில் தான் பேசுவேன். அப்போது சொல்கிறேன்.
நன்றி.
டுபுக்கு,
அவரைப் பர்சனலாகத் தெரியும் என்று சொல்வதை விட அவரைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரிடம் பேசுவதற்கு எனக்குத் தைரியம் போதாது.
அவங்க வீட்டுக்குப் போன ஓரிரு தடவையும் திருமதிதான் அழகாகப் பேசிக்கொண்டு இருப்ப்பார்.
அவ்வளவுதான். நெருக்கமாக இருப்பவர்கள் தேசிகன்,மனுஷ்யபுத்திரன் இவர்கள் தான். நன்றிம்மா.
ஆமாம் தி.ரா.ச.
நம்முடைய சிறிய வயதில்
எழுத்துகள் ஏற்படுத்தும் தாக்கம் நம்முடன் எப்பவுமே இருக்கும்.
அந்த நாட்களில் இவரும் திரு ஸ்ரீ வேணுகோபாலனும் போட்டி போட்டு கொடுத்த கதைகள் படைப்புகள் நம் அறிவுக்கும் சிந்தனைப் போக்குக்கும் நிறைய உதவி செய்திருக்கின்றன.
நேற்று காலை சுமார் 7 மணியளவில் சுஜாதா அவர்கள் வீட்டில் இருந்தீர்களா வல்லிசிம்ஹன் அவர்களே? (மணியம் செல்வன், பாக்கியம் ராமஸ்வாமி மற்றும் இயக்குநர் வசந்த் இருந்தபோது)
ஆமாம், சிமுலேஷன். நேரம் நினைவில்லை.செய்தி கேட்டதும் திருமதி சுஜாதாவைப் போனில் கேட்டுவிட்டு உடனே கிளம்பிப் போனேன்.
வசந்த சார் பார்த்தேன்.அவர்தான் எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொள்வதாக சொன்னார்.
நீங்களும் அங்கே வந்தீர்களா?
Post a Comment