Blog Archive

Friday, December 15, 2017

ராதையின் நாட்கள்.....7 ஆம் பாகம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


அப்பா, huggingனால்  என்ன அர்த்தம், சின்னப் பையன்  மாதவ்
கேட்டதும்  அவனை அணைத்துக் கொண்டான் கேசவன்.
இதுதான் கண்ணா. நீ பாட்டியை ஓடிப்போய்க் கட்டிக்கிறியே அதுதான்.
ஏன் பாடம் எதிலாவது வந்திருக்கா என்றான்.
இல்லை என்று திணறும் குழந்தையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது
அப்பாவின் மனம்.
 சரி .சொல்ல வேண்டாம். ஹக்கிங்க் இஸ் குட்
பையா. கண் களில் சந்தேகத்தோடு பார்க்கும் 7 வயசுக் குழந்தையைப் பார்த்து
வேறு ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அணைத்துக் கொண்டான்.
மனதில் கண்ணீர் நிரம்பியது.
 சென்னை வந்த ஆறு மாதங்களில் குழந்தைகளை இங்கும்
ராதையுடனும் இருந்தன. பள்ளிக்கூடத்துக்கு இங்கிருந்தே சென்றன.

 வந்த ஒரு வாரத்தில் ராதையின் கட்டுப்பாடுகளை ஒத்துக் கொண்டே குழந்தைகளை அழைத்து வந்தான்.
பெரியவர்கள் அவனுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை.
அவன்  மனமும் இறுகிக்கொண்டது.குழந்தைகளுக்கு
மட்டும் திறந்து கொண்டது. இதோ 3 வருடங்களும் ஓடி விட்டன.

ராதையின் வீட்டில் எல்லாமே வழக்கப்படியே நடந்தது.
நவீன் கிருஷ்ணா அவளுடைய உயிராக நடந்து கொண்டான்.
ஒரே ரசனை, புத்தக வாசிப்பு, பாடல்,நடனம் எல்லா
விருப்பங்களும் ஒத்துப் போயின. அந்த ஒரு நாள் வரும் வரை.

வாசலில் நின்ற வயதானவர்களைப் பார்த்து ராதையின் தந்தை
ஆங்கிலத்தில் யாரென்று கேட்டார்.
நவீன் கிருஷ்ணா இங்கே இருக்கிறானா என்று கேட்டார் அந்த பெங்காலி மனிதர்.
  இருக்கிறார். நீங்கள் யார் என்றதும், தன் மனைவியைப் பார்த்துவிட்டு அங்கேயே நின்ற
அந்த மனிதர் நாங்கள் அவனுடைய மாமனாரும் மாமியாரும்,
என்றதும் ஒரு தடவை உடல் நடுங்கியது ஸ்ரீனிவாசனுக்கு.
அதாவது ராதையின் அப்பாவுக்கு.
ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு அவன் கல்யாணமானவனா என்றார்.
ஆமாம் 5 வருடங்கள் ஆகிறது ஒரு பையன் கூட இருக்கிறான்.
அவன் ஒரு வருடமாக கல்கத்தாவுக்கு வரவில்லை.
கடிதங்களுக்குப் பதில் இல்லை. கவலையாகிவிட்டது.
அதுதான் நேரே வந்தோம்.
 அவன் வேலை செய்யும் கம்பெனியில் விசாரித்தபோது
அவன் இந்த விலாசத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.
அவனை அழைக்க முடியுமா.
அவன் குழந்தையும் மனைவியும் டாக்சியில் இருக்கிறார்கள்.
என்று சொன்னவரைப் பார்த்து வெறிக்க மட்டுமே
முடிந்தது.
அதே சமயம் வெளி கேட்டைத் திறந்து உள்ளுக்குள் நுழைந்தது
ராதை ஓட்டிய ஹெரால்ட் வண்டி. பக்கத்திலிருந்து உத்சாகமாக இறங்கினான்
நவீன்.   தொடரும்.
Add caption

10 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நவீனுக்கு தன் பெற்றோரைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்...உண்மை வெளியில் வர இருக்கிறது...புரிகிறது முடிவு...

ராதைக்கும் இப்போது புரியும் அதுவும் நவீனின் மனைவியும் குழந்தையும் வேறு வந்திருக்கிறார்கள்....கேசவனை அந்நிலையில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்திருப்பாள்...என்று தோன்றுகிறது...நவீனின் மனவி, ராதை, கேசவன் நவீன் எல்லோருமே அவரவர் துணைகளைப் ப்புரிந்து கொண்டு ஒரு பகுதியில் சீதை ராமனை மன்னித்தல் என்று ஆகும், மற்ரொரு பகுதியில் ராமன் சீதையை மன்னித்தல் என்று....

இப்படி முடிந்திருந்தால் நலம்...இப்படித்தான் முடிந்ததோ வல்லிம்மா...(யாரது அங்கு முந்திரிக்கொட்டை சும்மாரு....கதாசிரியர் தான் சொல்லணும்!!!!! என்று வல்லிமா என் தலையில் செல்லமாகக் குட்டுவது தெரிகிறது ஹா ஹா ஹா ஹா ஹா ...!!!)

நான் என் பாட்டியிடம் அத்தைகளிடம், மாமிகளிடம் இப்படித்தான் விளையாடுவது..இப்பவும் கூட...என் மாமிகளிடம் இப்படித்தான்.... அப்படி உங்களிடமும் தோன்றியதால்.....ஹா ஹா ஹா

கீதா

ஸ்ரீராம். said...

பயங்கர ட்விஸ்ட். நவீன் முகம் எப்படிப் போயிருக்கும் என்று கற்பனை வருகிறது! என்ன ஆசைகளோ..

இன்று பாடல் ஒன்றையும் பகிரக் காணோமே அம்மா?

நெல்லைத் தமிழன் said...

ஐயோ... இப்படியா? ஒரு செயல் இரண்டு குடும்பங்களுக்கும், அவரவர் பெற்ற குழந்தைகளுக்குப் பாதகம் என்றும் தெரிந்தா? ராதையின் பெற்றோர் செய்த தவறுகளுக்கு என்ன விளைவு வந்தது?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

Hugging என்றால் எனக்கு முதலில் நினைவிற்கு வருவது இந்திரா காந்தியை பீடல் காஸ்ட்ரோ hugging செய்ததும், அது தொடர்பாக வந்த செய்திகளும். அப்புகைப்படத்தை நான் அதிகம் ரசித்தேன். அண்மையில் பீடஸ் காஸ்ட்ரோ இறந்தபோதுகூட சில இதழ்களில் அந்த புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்கள். இரு பெரும் தலைவர்களை நான் நேசித்ததுதான் என் ரசனைக்குக் காரணமென நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

ஹையோ! நிஜம்மாவே திடுக்! அதிர்ச்சி! ஆத்திரம்! இப்படியா தன்னை மறந்து இருப்பார்கள்? பெற்றோர் கூட ஒத்துழைப்பு? மனசே விட்டுப் போயிடும்போல் இருக்கு! :( இரண்டு பேரின் குழந்தைகளும் என்ன பாவம் பண்ணின?

வல்லிசிம்ஹன் said...

நல்லாச் சொல்லலாமே கீதா.
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
அதுதான் கதைகளில் நடக்கும் நம் ராதா
கொஞ்சம் வேற மாதிரி இல்லையா.
ராதை ,நவீன் இருவரும் இப்போது முப்பதுகளில்.
அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், இந்த நிலமைக்கு ஏற்ற பாடல் கிடைத்தது.
மனம் வரவில்லை போட.
இப்படித்தான் நடந்தது. எங்கள் பாட்டி வரை வந்தது.
கொஞ்ச துரோகமா.

வல்லிசிம்ஹன் said...

இது ஒரு வினோதமான சூழ்னிலை. நெல்லைத் தமிழன்.
அவர்கள் எந்த நியதிக்கும் கட்டுப் படவில்லை.
எது கர்மாவோ அது பலன்.
குழந்தைகள் சிறிது பாதிக்கப் பட்டாலும் தந்தையின் துணையோடு
வெளி வந்தார்கள்.
அந்தக் குழந்தை என்ன ஆகிற்றோ தெரியவில்லை.நவீனின் குழந்தையைப்
பற்றிச் செய்தி இல்லை.அம்மா.
அவனும் மனைவியும் பிரிந்து விட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

Hugging as such is not bad and it is a sign of
love and respect between honest people and lovers.

இந்தக் குழந்தை கண்ணில் பட்டது வேற சமாசாரம் திரு .ஜம்புலிங்கம் ஐய்யா.
அதற்குச் சொல்லவும் வழி தெரியவில்லை. ரொம்பப் பாவம்.

அன்பும் நேசமும் நல்ல இடத்தில் காண்பிக்கப் படும்போது அருமையே.
மிக நன்றி. எனக்கும் காஸ்ட்ரோ மிகவும் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

இந்த இடத்துக்கு வந்து சேர அவர்களுக்கு ஐந்து வருடங்கள் ஆகி இருக்கின்றன
கீதாமா.
கலியுகம்னு பாட்டி சொல்வதைக் கேட்டு இருக்கிறேன்.
இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
அக்கிரமம் என்று தெரிந்தும் செய்த செயல்களை மறக்கவே இந்தப் பதிவுகள் மா.