Blog Archive

Monday, November 13, 2017

November 13th 1966

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்












அழகான ஐப்பசி 22 ஆம் நாள். தலை தீபாவளி முடிந்து சிங்கம் சேலத்துக்குத் திரும்பிச் சென்றார்.
அடுத்த நாள் ஆரம்பித்த  பிரசவ வலி, அதற்கடுத்த நாள் காலையில் பொன் போன்ற குழந்தையை என் கையில் கொடுத்தது.

மூன்று வாரங்கள் முன் பிறந்துவிட்டான் . தலையில் பேருக்கு ஒரு முடி இல்லை.
 பார்க்க வந்தவர்களுக்கு அதிசயம்.
சிம்மு பிள்ளையா இது என்று  ஒரே சிரிப்பு. இப்பொழுது வாரம் ஒரு முறை தலை முடி    திருத்தம் 😊😊😊செய்ய வேண்டி இருக்கிறது.
தந்தையின் பரிபூரண அன்பைப் பெற்ற  மகன்.

என்றென்றும்  நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சி நலன்களுடனும், மக்கள் ,மனைவி  யுடன்  நல்  வாழ்வு   பெற இறைவனை வேண்டுகிறேன்.
மனம் நிறை வாழ்த்துக்கள் மகனுக்கு.









11 comments:

Geetha Sambasivam said...

எங்கள் அன்பும் ஆசிகளும் உங்கள் மகனுக்கு ரேவதி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

​தொடர்கிறேன் அம்மா.​

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வாசித்து வருகிறோம்.

நெல்லைத் தமிழன் said...

தொடர்கிறேன்.....

Angel said...

உங்கள் மகனுக்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்கம்மா

பூ விழி said...

உங்கள் நினைவுகளை தொடர்க்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

தந்தையின் பரிபூரண அன்பைப் பெற்றவன்//

இறைவனின் அருள்!!!

தொடர்கிறோம் வல்லிம்மா

கீதா

கோமதி அரசு said...

அருமையான நினைவுகள்.
தங்கள் அன்பு மகன் என்றும் நலமுடன் வாழ ஆசிகள்.

Bhanumathy Venkateswaran said...

உங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகனின் புகைப்படம் இணைத்திருக்கலாமோ? என் மகனும் தீபாவளி முடிந்துதான் பிறந்தான் ஆனால் Oct. born.

'பரிவை' சே.குமார் said...

வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ சகோதரனுக்கு வாழ்த்துக்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் நன்றி. என் ஒரே பிரார்த்தனை அனைவரும் எப்பொழுதும் நலமாக இருக்கணும்.
@ பானு, அவர்களூக்குப் புகைப்படங்கள் இணையத்தில் போடுவது பிடிக்காதுமா.
குழந்தைகளுக்குப் பிடிக்காததைச் செய்வது தப்புதானே. Best wishes to your son ma Bhanu.