Blog Archive

Tuesday, November 28, 2017

திண்டுக்கல் 1962

 திண்டுக்கல்  பள்ளியில் கற்ற பாடங்கள் அத்தனையும் கல்வெட்டுப் போல மனதில் பதிந்ததற்குக் காரணம்,  கணிதம், தமிழ், விஞ்ஞானம்,ஆங்கிலம் கற்றுத் தந்த ஆசிரியர்கள்
  நல்ல படிப்பாளிகளாக இருந்ததை விடச் சொல்லிக் கொடுக்கும் விதத்தில் சிறந்தவர்கள்.

காலையில் எட்டரை மணிக்குப் பள்ளியில் இருக்க வேண்டும்.

தினமும் அசெம்ப்ளி உண்டு.  ஸ்கூல் லீடர் ஜி. ஞானம். 
11 ஆவது வகுப்பு. ஆணித்தரமாகப் பேசுவார். 
 எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம்..
அசெம்ப்ளி முடிந்து அனைவரும் ,//தந்தானைத் துதிப்போமே//
பாடல் ஒலி பெருக்கியில் ஒலிக்க, வரிசையாகப் படிகளில் ஏறி அவரவர் வகுப்படைவோம்.

அப்பொழுது கிடைத்த தோழிகள் ஷாந்தா, பிற்காலத்தில் டாக்டரானதாகக் கேள்வி,
  உஷா கிருஷ்ணன், சுருட்டை முடியில் இரட்டைப் பின்னல் நினைவுக்கு வருகிறது,
ஜி. மீனாக்ஷி, என் போட்டியாளர்களில் இவளும் ஒருத்தி.

இதைத்தவிர வி ஆர் செவன் என்றபாடலை ஆங்கிலத்தில் கற்றதின் 
எதிரொலிப்பு, இன்னோரு குழு.
கமருன்னிசா, ஹெலன், செலின், சீத்தாலக்ஷ்மி, தங்கம்,ஆறுமுகத்தாய்,, நான்.
கனகா பிறகு சேர்ந்து கொண்டாள். 
பள்ளிக்குள் எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வது, மரத்தடியில் உண்பது, உணவைப் பகிர்ந்து கொள்வது
 பரீட்சை நாட்களில் பாடங்கள் பிரித்துப் படித்து ஒவ்வொருவரிடமும்
 ஒப்பிப்பது. யாருக்கு எந்த மிஸ் பிடிக்குமோ அவர்களுக்கு ரோஜா கொடுப்பது.
ஸ்டாஃப் ரூம் சென்று  ஓய்வாக இருக்கும் டீச்சர்களிடம் வம்படிப்பது.
எல்லாம் உண்டு. ஒரு மாற்றத்தில் எங்கள் தமிழ் மாஸ்டர் ரெட்டியார் சார்
ரிடயராகிப் புதிதாக செல்வம் என்று ஒரு இளைஞர் வந்தார்.
23 வயது இருக்கலாம்.  நல்ல மானிறம். கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்,
மேஜை பின்னாலிருந்து வெளியவே  வரமாட்டார்.
எடுப்பதோ நள தமயந்தி. சொல்லி முடிப்பதற்குள் 
வியர்த்துவிடும். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிடுவார். இது எங்கள் பத்தாம் வகுப்பில்.
வேறு வகுப்புக்குப் போகும் போதோ வரும்போதோ, நாங்கள் கண்ணில் பட்டால்
சுவரோடு ஒட்டிக் கொண்டுவிடுவார்.
மரியாதை நிமித்தம் சிரிக்க மாட்டோம். ஓடி மரத்தடிக்குப் போய் புத்தகங்களைப் பிரித்து
வைத்துக் கொண்டு சிரிப்போம். ஏம்பா இப்படி பயப்படுகிறார். ம்ஹூம். இன்னும் ஒரு மாததில் கிளம்பிவிடுவார். 
சரசர  சாரக்காற்று காற்றுப் பாட்டு//// பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவுதான் வரும். எங்கே இருக்கிறாரோ.
மீண்டும் பார்க்கலாம்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
திண்டுக்கல் பூட்டுகள் 

15 comments:

ஸ்ரீராம். said...

பள்ளிக்கால நினைவுகள் சுகமானவை.

ராஜி said...

நினைத்தாலே இனிக்கும்

நெல்லைத் தமிழன் said...

'தந்தானைத் துதிப்போமே' கேட்டமாதிரியே இருக்கு. இளமைக்கால நினைவுகளில் மூழ்கிவிட்டீர்கள். தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

நல்ல நினைவுகள். எங்க ஆசிரியர்களோடு எல்லாம் சகஜமாகப் பேச முடியாது! :) கொஞ்சம் விலகியே இருப்போம். என்றாலும் பாடங்கள் எடுப்பதில் திறமையானவர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

என்ன இனிய நினைவுகள் வல்லிம்மா! அதுவும் பள்ளிக்கால நினைவுகள்....

துளசிதரன்: எனது பள்ளிக் கால நினைவுகள் அதுவும் நான் பிறந்த கிராமத்தில் என் நண்பர்களுடன் இனியவை...இப்போதுவரை இருவர் இருந்தனர் தொடர்பில் பாவம் இருவருமே மிக மிக கஷ்டமான நிலையில். அதில் ஒருவர் இறந்துவிட்டார்...

கீதா: வல்லிம்மா எனது பள்ளிக்காலம் மற்றும் கல்லூரிக்காலம் ரொம்ப இனிமையானவை. நீங்கள் சொல்லியிருப்பது போல் நாங்களும் மரத்தடியில்தான் கூடி இப்படிச் சிரிப்பது எல்லாம். என் நட்பு குழுவிலும் கயருனிஸா (உங்கள் தோழி கமருனிஸா) என்ற தோழி இருந்தார். நான் குள்ளமோ குள்ளம். அவளோ செம ஹைட் வெயிட்டாகவும்....செம கலர்....பூனைக்கண்கள்...முடி நிறைய இருக்கும்...இப்படி நிறைய நினைவுகள் நிழலாடுகின்றன வல்லிம்மா...தொடர்கிறோம்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். எத்தனை ஆர்வமாகப் பள்ளிக்கு ஓடுவோம்.
இனிமைதான்.

வல்லிசிம்ஹன் said...

ராஜி மா. அத்தனையும் உண்மை. lovely life.

வல்லிசிம்ஹன் said...

நெல்லைத்தமிழன் ,இந்தப் பாட்டு கேட்டு இருக்கிறீர்களா. அடுத்தாப்பில தேன் இனிமையிலும் வரும்.
நான் வீட்டுக்கு வந்து பாடினாலும் அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார்.
ஆமாம் நினைவுகள் என்னை மாற்றுகின்றன,. நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
ஏன் சிறிய வயதில் இறந்தார். ரொம்ப வருத்தமா இருக்குமா.
என் தோழிகள் ஒருவரும் என்னுடன் தொடர்பில் இல்லை.
53 வருடங்கள் ஆகிவிட்டதே.
ஒரே ஒரு தோழி வந்து பார்த்தாள். விடை பெற்றுக் கொண்டு போய்விட்டாள்.,. வாழ்க்கையின் சிரமங்கள் அவளை வாட்டி விட்டன.

அன்பு கீதா,
உண்மையான அன்பு நிறைந்த நாட்கள் அவை.
அட நீங்களும் எழுதலாமே.
மன்னிக்கணும் உங்கள் பதிவுகள் எல்லாம் நான் படிக்காமல் விட்டிருக்கிறேன்.
கயறுன்னிசா வடிவம் உங்கள் நினைவில் பதிந்திருக்கிறது.
அவளைக் கேட்டால், எங்க கீதா எப்பவும் சிரித்துக் களித்திருப்பாள் என்று சொல்வாள்.
மகிழ்ந்திருங்கள் அம்மா.

பூ விழி said...

பள்ளி நினைவுகள் ஹா ஹா சுவராஸ்யம்

கோமதி அரசு said...

'தந்தானைத் துதிப்போமே' ஜிக்கி பாடியது முன்பு அடிக்கடி கேட்கும் பாடல்,(திருச்சி வானெலியில் காலை .)

பள்ளி நினைவுகள் இனிமை.

Bhanumathy Venkateswaran said...

//எங்கள் தமிழ் மாஸ்டர் ரெட்டியார் சார்
ரிடயராகிப் புதிதாக செல்வம் என்று ஒரு இளைஞர் வந்தார்.
23 வயது இருக்கலாம். நல்ல மானிறம். கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்,
மேஜை பின்னாலிருந்து வெளியவே வரமாட்டார்.
எடுப்பதோ நள தமயந்தி. சொல்லி முடிப்பதற்குள்
வியர்த்துவிடும். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிடுவார். இது எங்கள் பத்தாம் வகுப்பில்.//

என்னுடைய பத்தாம் வகுப்பில் கூட இதே போல ஒரு சம்பவம் உண்டு. கணக்கு படம் எடுக்க புதிதாக ஒரு ஆசிரியர் வந்தார். அப்போதுதான் படித்து முடித்து விட்டு வேலைக்கு வந்திருந்தார். மிகவும் பயப்படுவார். எங்களையெல்லாம் நீங்க, வாங்க, போங்க என்று மரியாதையாக பேசுவார். நாங்கள் அவரை மிகவும் ஓட்டுவோம். ஒரு நாள் கோபமாக கொஞ்சம் பேசாமல் இருக்கீங்களா? என்று அதட்ட என் தோழி ஒருத்தி,"பரவாயில்லையே பையன்"எங்க, நாங்கள் சிரித்ததை இப்போது நினைத்தாலும் கூட சிரிப்பு வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி நன்றி மா. வெகு சுவாரஸ்யம் தான். ஹாஹா.
பாவம் அந்த சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, பள்ளியில் கற்ற கிறிஸ்துப் பாடல்கள் அதிகம்.
வானொலியிலும் கேட்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அச்சோ பானும்மா. பையன் என்றா சொன்னாள் உங்க தோழி. ஹாஹா.
என்ன செய்வது வாலைப் பருவம் அது.
நான் சொன்ன ஆசிரியர் அடுத்த மாதம் பையன் கள் படிக்கும் பள்ளிக்கு
மாற்றிப் போய் விட்டார்.
அப்போது சாரதா படம் வேறு வந்திருந்தது.

அதை நாங்கள் பார்க்கவில்லை என்றாலும் கதையில் S.S.RAJENDRAN
ஒரு ஆசிரியர் என்று தெரியும்.
அதைப் பிடித்துக் கொண்டுவிட்டாள் இன்னுமொரு தோழி.
சே மோசம் பா. இப்படி ஓடிப் போய் விட்டாரே என்று வருத்தப்பட்டாள்
ஹாஹா.