Add caption |
Add caption |
அடுத்த நாளும் நான்கு மணிக்கே எழுந்துவிட்டாள் மைதிலி
காப்பி குடித்த கையோடு ஸ்ரீனிவாசனையும் எழுப்பி,
அன்றைய திட்டங்களை விவரித்தாள். அரிசி, உளுந்து ஊறப் போட்டுவிட்டு
வந்தாள்.
இன்னிக்கு ரங்கம்,குழந்தைகள் எல்லோரும் வந்துவிடுவார்கள்.
யாராவது வீட்டில் இருக்க வேண்டாமா என்று
சந்தேகம் எழுப்பினான் ஸ்ரீனிவாசன்.
குழந்தைகளுக்கு இன்று லீவு. இதோ இங்க இருக்கற சிந்தாமணிக்கு நம்மால்
போய் வர முடியாதா
என்று சொல்லி அவனையும் ஜரூர் செய்தாள்.
அக்கா வரும் சந்தோஷம் ,குளியலறையிலிருந்து பாட்டாக
ஒலித்தது.
மைதிலி முகத்தில் புன்னகை ஓடியது. செட்டியார் அம்மா வரவழைத்துக் கொடுத்த சிகப்பும் பச்சையும் பூக்கள் வரைந்த ஷிஃபான் புடவை அணிந்து அவள் தயாராகிக் குழந்தைகளை எழுப்பினாள்.
பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருங்கள், அப்பாவும் நானும் வந்து விடுகிறோம்
என்றபடி அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்து,
லீலா நாயரிடம் ஒப்படைத்து விட்டு இருவரும் கிளம்பினார்கள்.
உடனே பஸ் கிடைத்தது தான் அதிசயம்.
சிந்தாமணியில் இறங்கி பரபரவென்று, வெற்றிலை, களிப்பாக்கு,சந்தனம்,
சீனுவுக்கு வேஷ்டி ,பச்சைக்கரை போட்டது,
சாரதாவுக்கு வாயில் தாவணி, பாவாடைத்துணி,சட்டைத்துணி எல்லாம் வாங்கி மீதி இருந்தது
35 ரூபாய்.
உலகமே தன் கைவசமான சந்தோஷத்தில்
வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
நாத்தனார் ரங்க நாயகியின் கார் நின்றதுதான் காரணம்.
வாங்கோ வாங்கோ குழந்தைகளா என்று ரங்கம் ,மைதிலியை அணைத்துக் கொண்டாள்.
அவள் அகத்துக்காரரோ சீனுவைத் தட்டிக் கொடுத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.
என்ன அக்கா இது சாயந்திரம் வருவீர்கள் என்று நினைத்து வெளியே போய் விட்டோமே
என்று அழாத குறையாகச் சொன்னாள் மைதிலி.
என் தம்பி வீடுதானே. என்னை வான்னு கூப்பிட்டு ஆரத்தி எடுக்கணுமா, பைத்தியமே என்று அணைத்துக் கொண்ட ரங்கத்தை விழுங்குவது போலப் பார்க்கத் தோன்றியது மைதிலிக்கு.
என்ன அழகுமா நீ. என்ன பாந்தம் ரங்க நாச்சியாரே எங்கள் அகம் வந்தது போல இருக்கு.
என்றபடிக் குழந்தைகளைக் கவனித்தாள். மாதவனும் கேசவனும் ஹலோ மாமி என்று அழைத்தார்கள்.
என்னடா இப்படி உசந்துவிட்டீர்கள் என்று பிரமித்தாள்.
சரி சரி ராகு காலத்துக்கு முனாடி எங்களை சேவி என்று உத்தரவு போட்டாள் ரங்கம்..
காஃபி ஏதாவது கொடுக்கிறேனே.
எல்லாம் ஆச்சு. வரவழியில் நாங்களே பாலும் வாங்கி வந்து விட்டோம்.
சொன்னதைச் செய் என்றதும்
இருவரும் தங்கள் சீரை இரு தட்டுகளில் வைத்து அக்கா அத்திம்பேரிடம் கொடுத்து வணங்கினார்கள்.
வாங்கோ அக்கா, உள்ள வேலை இருக்கு
இதோ நாற்காலி போடுகிறேன் என்று நகரப் போனவளை,
நில்லுடி பொண்ணே, என்றபடிக் கணவரை விளித்தாள்.
கை நிறையப் பைகளோடு ,வண்டியிலிருந்து எடுத்து வந்த
பட்டாசுக் கட்டுகள் எல்லாவற்றுடனும் அவரும் வந்தார்.
மைதிலி,குழந்தைகள் எல்லோரும் பிரமிப்போடு பார்க்க
ஆலிவ் க்ரீன் மைசூர் சில்க் புடவை, மயில்கண் வேஷ்டி, பெண்குழந்தைகளுக்கு நீலமும்,
சிகப்புமாக புதுவிதமான ஃப்ராக், பையன்களுக்கு கச்சிதமான ரெடிமேட் பாண்ட் ,ஷர்ட்
என்று அசத்திவிட்டார்கள்.
கிருஷ்ணனும் ருக்மிணியும் வந்து கருணை செய்கிறார்களோ என்று கண்ணில்
கலக்கம் தோன்றியது. ரங்கம் மீண்டும் அணைத்துக் கொண்டாள்.
பைறகென்ன , வெளியே பட்டாசு, உள்ளே லேகிய மணம், உக்கோரை,
மருதாணி அரைக்கும் மணம் பரவியது. சமைத்துச் சாப்பிட்டு,வெற்றிலை போட்டுக் கொள்ளும்போது இட்லி அரைக்கும் நினைவு வர எழுந்தாள்.
அலுப்பில் சற்றே உறங்கிய ரங்கமும் வந்து சேர்ந்து
சுலபமாக வேலை நிறை வேறியது.
கனவு போல இந்தத் தீபாவளி நடப்பதை நம்ப முடியாமல் மகிழ்ச்சியில் திளைத்தது மைதிலியின் குடும்பம் ரங்க நாயகியின் அன்பால்.
12 comments:
அருமையான உறவுகள். நல்ல நட்பும் அன்பான உறவும் அமைவது கடவுளின் கருணை. நெகிழ்ந்தது மனம்.
நல்ல நினைவுகள் மனதை வருடிச் செல்வதுபோல், நல்லன அல்லாதவைகளும் மனதில் தோன்றுமா? சிந்தாமணி என்று சொல்லும்போது, கோயமுத்தூரில் நிகழ்ந்ததா?
அருமையான நினைவுகள்.
தித்திக்கும் நெகிழவைக்கும் நினைவுகளின் வரிசை
ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் ருசிக்க ருசிக்க அருமை! மருதாணியின் மணம் இங்கே வரை வந்தது. சிந்தாமணி முதல்லே திருச்சியில் அல்லவோ வந்தது?
அன்பு ஸ்ரீராம், நல்ல கதை மனசுக்கு இதம் இல்லையா.
நன்றி மா.
அன்பு நெல்லைத்தமிழன், நல்லன, அல்லாதன எல்லாமே நிறைந்த என்னுடைய
மனதைத் திருப்பும் முயற்சியே என் எழுத்து.
ஏதோ நிம்மதி.
சிந்தாமணி கோவையில் இருப்பதுதான்.
ஏற்கனவே 3 பாகம் 2012 இல் எழுதினது. இந்தப் பகுதி நேற்று
எழுதினேன் மா.
இந்தக் கதையும் கோவைதான் நெல்லைத்தமிழன்.
நன்றி மா பூவிழி. தீபாவளியே தித்திப்பு தான்.
கீதாமா, இது நேத்திக்கு தான் எழுதினேன்.
மற்ற மூன்று பாகங்களும் முக நூலில் போட்டிருந்தேன்.
பத்மான்னு மகளோட தோழி. படிக்க விரும்பினாள்.
மிக நன்றி மா.
அருமை அம்மா....
வல்லிம்மா என்ன ஒரு அழகான உறவுகள். அன்பு மணம் கமழும் உறவுகள். இப்படியான உறவுகள் அமைந்துவிட்டால் வாழ்வே சொர்கம்தான். அமைவதற்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். பசுமாயான, அன்பு குன்றா நினைவுகள். மனதை நெகிழ்த்திவிட்டது ம்மா
துளசிதரன், கீதா
Post a Comment