எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்.
ஆண்டா, இங்க வா.
என்னம்மா குழம்பெல்லாம்பண்ணச் சொல்றே. கசகசன்னு புளி ஒட்டிக்கும்.
கத்துக்க வேண்டாமா. உனக்குத்தான் குழம்பு பிடிக்குமே.
ஒண்ணுமே பெரிய காரியம் இல்ல.
சரியா வர்லைன்னால் என்னை ஒன்னும் சொல்லக் கூடாது .
யாரும் சொல்லப் போவதில்லை.
நீ முதலில் குமுட்டி அடுப்பில் இன்னும் கொஞ்சம் கரி போடு சொல்றேன்.
கொஞ்சம் விசிறிக்கொடு.
தணல் மேலே உருளி யை வைம்மா.
வைத்து சூடாவதற்கு முன்னால்
வேண்டும்கற சாமான்களை எடுத்து வச்சுக்கோ.
சரி,
அஞ்சறைப் பொட்டில என்ன எல்லாம் இருக்கு.
கடுகு, மேந்தியம், மிளகாய் வத்தல்,கடலைப் பருப்பு ,உளுத்தம் பருப்பு, மஞ்சள் பொ டி .
அது அந்தக்கால மர அஞ்சரைப் பொட்டி .
எல்லாம் ஒரு ஆழாக்கு சமாச்சாரம் கொள்ளும்.
அப்பா புளி கரைத்துவைத்திருக்கிறார் இல்லையா
ஆமாம்.
இப்ப நான் சொல்றதை அப்படியே பண்ணனும் சரியா.
சரி சொல்லு.
உருளில நாலு முட்டைக் கரண்டி நல்லெண்ணெய் விடு.
ஆவி வரதுமா.
முதல்ல மெந்தியம் போடு.
பொறுமையா இரு. சிவந்தவுடன் கடுகு போடு.
கடுகு வெடிக்கணும்.
ஒண்ணொண்ணா வெடிக்கிறது,
அதுக்குள்ள மிளகாய் வத்தல் அஞ்சு எடுத்துக் கிள்ளிப்போட்டு , துவரம்பருப்பு, கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு எல்லாம் ரெண்டு ரெண்டு ஸ்பூன் போடு.
பின்னால் இருந்து சின்னவன் பெரியவன் கிட்ட, முரளி,, ஆண்டாள் மிளகாயைக் கிள்ளறாளாம் ம் என்று சிரிக்கிறான்.
எனக்கு கோவிக்கக் கூட நேரம் இல்லை.
உடனே மஞ்ச பொடி போட்டு, புளி ஜலம் விடு.
நன்னா கரைத்துக் கோது இல்லாம விடணும்.
கையை சுட்டுக்காதே.
இரண்டு தரம் கரைச்சு விட்டியாம்மா.
விட்டாச்சு மா.
தான் ஒன்னும் வேண்டாமா.
வேண்டாம்.
நீ போய் கருவேப்பிலை பறிச்சுண்டு வா.
அடில இருக்கிறதை பறி .
முகத்தைக் கடுகடுன்னு வச்சிக்காதேம்மா.
சந்தோஷமா தளிகை பண்ணினால்தான் வயித்து வலி வராது.
ம்ம்.சரி.
கொதிக்கறதான்னு பாரு.
கொஞ்சமா கொதிக்கிறது. அப்பாவை அரிசிமாவு எடுத்துத்தரச் சொல்லு.
பக்கத்தில் பேப்பர் படித்தபடி முகத்தில் புன்னகையோடு
பார்த்துக் கொண்டிருந்த அப்பா மேல் தட்டிலிருந்து மாவு எடுத்துக் கொடுத்தார்.
கொஞ்சம் கரைத்துக் கொடுத்துடுங்கோ. இது அப்பாவுக்கு.
பார்த்துக்கொண்டிடுக்கும் போதே குழம்பு ரெடி. மரவையில் இருக்கிற பெருங்காய ஜலம் விட்டுட்டு கருவேப்பிலை போடும்மா. அப்படியே அப்பா கொடுக்கும் அரிசி மாவுக் கரைசலையும் விடு . ஆச்ச்சு போ.
சமத்து.......
அப்பா அந்தக் குழம்பை இறக்கினார்.
உ.கிழங்கு கரேமது ஆரம்பமாச்சு.
வாசனை பிடித்தவாறே பழைய கதை புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.
சாப்பிடும்போது கொஞ்சம் ஆவலாக மற்றவர்கள் முகம் பார்த்தேன் . முரளி ஒருத்தன்தான் நன்னா இருக்குடின்னான்.
ரங்கன் எனக்குப் பசிக்கவே இல்லை, பருப்புப் பொடி , சாதம் நெய் வி ட்டுக் கொடுப்பா என்று விட்டான்.
பெரிய யாகம் செய்த திருப்தி எனக்கு.
அடுத்த மூன்று நாட்கள் கழித்து பக்கத்தகத்து மாமியிடம்
அம்மா எங்க ஆண்டா நன்னா சமைக்கக் கத்துகொண்டு விட்டாள் என்று சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டார் .
இப்படியாகத்தானே என் சமையல் அறைப் பிரவேசம் ஆரம்பித்தது.

17 comments:
ப்ளாகர் தமிழ் மஹா தகராறு செய்தது. காலையில் சரி செய்து விடுகிறேன் மன்னிக்கவும்.
இப்போ சமையல் ராணி ஆகி விட்டீர்கள் தானே அம்மா...
சமத்து...
திரும்பவும் அதை..ரொம்ப சுவாரஸ்யம் மா சொல்றீங்க மா..
நாங்க இதுபோல் செய்தது இல்ல மா...
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா செய்து பார்க்கிறேன்...
குழம்பு எப்படி இருந்துச்சுன்னு சொல்லவே இல்லியேம்மா
ரசித்துப் படிக்க முடிகிறது. அந்தக் காலத்தில் (இப்போ எல்லா சௌகரியங்களும், Gas அடுப்பு, Mixie, பாத்திரம் அலம்ப குழாய்த்தண்ணீர் போன்று எல்லாம் இருக்கும்போதே, கத்துக்க ஆள் வரமாட்டேங்குது. இதெல்லாம் அப்புறம் கூகிள்ல பார்த்துக்கறேன்னு சொல்லிடறாங்க) நீங்கள் மெந்தியக் குழம்பு வைக்கக் கற்றுக்கொண்டது சுவாரசியமாத்தான் இருக்கு. 'முட்டை'-இது எங்கள் மொழி, ஸ்பூனுக்கு.
"சாப்பிடும்போது கொஞ்சம் ஆவலாக மற்றவர்கள் முகம் பார்த்தேன்" - எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் உங்க அம்மாட்ட (அல்லது அப்பாகிட்ட) இன்னைக்கு ரொம்ப நல்லா இருந்தது, இது பெட்டர் என்றெல்லாம் பாராட்டியிருக்கீங்களோ அந்த வயதுல?
வல்லிம்மா வெந்தயக் குழம்பு இங்கு வரை மணக்கிறது...சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. இதே போலத்தான் துவரம் பருப்பு மட்டும் போடாமல் என் பாட்டி செய்வார். துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு போட்டு தானும் போட்டு மாமியார் குழம்புப் பொடி போட்டுச் செய்வார். ஆனால் என் பிறந்தவீட்டில் பாட்டிகள் நீங்கள் உங்கள் அம்மா சொல்லிக் கொடுத்தது போல...நான் து பருப்பும் போட்டுச் செய்து பார்த்து விடுகிறேன்...இதையே தான் வெந்தாசார்/ மிளகாய் கிள்ளிப் போட்ட குழம்பு என்றும் எங்கள் வீட்டில் சொல்வார்கள்...
நாவில் நீர்..வல்லிம்மா நாளை இந்தக் குழம்புதான் செய்யப் போகிறேன்...
நானும் கும்முட்டி அடுப்பில் அதுவும் 6 வருடங்கள் முன் தானே புயல் வந்த போது பாண்டிச்சேரியில் வீட்டில் கரன்ட் இல்லை,கேஸ் இல்லை மகனுக்காக அங்கு சிறு வீட்டில்ல் தந்தியிருந்ததால்...அப்புறம் தோட்டத்தில் மூன்று கல் போட்டு, சுள்ளிகள், கதம்பை, ஓலைகள் பக்கத்து வீட்டில் காய வைத்து வைத்திருந்தார்கள் அதை அவர்கள் கொடுக்க அதை எல்லா வைத்து முழுச் சமையலும் 5 நாட்கள் செய்தேன்...மண் சட்டிகள் வைத்து, மண் வாணலி வைத்து ..சிறிய வயதில் செய்தது மீண்டும் செய்ய நேர்ந்ததில் அது ஒரு அனுபவம்...மகனும் ரசித்துச் சாப்பிட்டான்..அவன் தோழர்கள் உட்பட..மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது...
உங்கள் அனுபவம் மனதில் அப்படியே காட்சியாக விரிகிறது...ரசித்து வாசித்தேன்..வல்லிம்மா
கீதா
பரவாயில்லைம்மா பிழைகள் வாசிக்கக் கடினமாக ஒன்றும் இல்லை. புரிந்து கொள்ள முடிந்தது.
கீதா
அன்பு நெல்லைத் தமிழன், அந்த முட்டைக் கரண்டி இன்னும் அம்மா அகத்தில் ஜாடியோடு இருக்கிறது. அம்மா புழங்கும் அத்தனை இடமும் அவ்வளவு சுத்தமாக இருக்கும்.
அப்பா சமைக்கும் போது உடனே சொல்லி விடுவேன் . அம்மா விடம் கொஞ்ச நேரம் கழித்தே சொல்வேன் .இன்னும் கொஞ்சம் வேணும் நன்னா இருக்குமா என்று:)
அன்பு தனபாலன், அம்மா சமிப்பது குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
அவ்வளவுதான். நான் பிழை பல செய்து கற்றுக் கொண்டேன்.
எங்க வீட்டுக்காரர் சோதனை எலி. இரண்டு வருடங்களில் தேறிவிட்டேன்.
ராணி எல்லாம் இல்லை ம்மா. செய்வதைப் பக்குவமா செய்யப் பழகிக் கொண்டேன்.
சென்னைக்கு ஒரு நாள் சாப்பிட வாருங்கள் ராஜா.
அன்பு ராஜி, அதை நான் சாப்பிடவே இல்லை.
ஆளைவிடு. அம்மா சமையலுக்கு முன் இதெல்லாம் கசக்கும். பாதுகாப்பா, புளிக்காயச்சல் விட்டுப் பிசிந்த சாதம் அன்று சாப்பிட்டேன். ஹாஹா
ஆமாம். அம்மா சொன்ன பாராட்டு மறக்காது
நானும் அதைப் பேரக்குழந்தைகளிடம் அடிக்கடி சொல்வேன்.Anu ma.
// சந்தோஷமா தளிகை பண்ணினால்தான் வயித்து வலி வராது.
:-)
என் பாட்டி சொல்வார்: சிரிச்சுண்டே சமையல் செஞ்சாத்தான் ருசிக்கும்.
என் தங்கை: லூசு தான் எல்லாத்துக்கும் சிரிச்சுண்டே இருக்கும் பாட்டி.
அது சரி, வெந்தயம் எத்தனை ஸ்பூன் போட வேண்டும்.
லூசா. சரி சரி. உங்க தங்கை கிட்ட சொல்றேன்.
நானெல்லாம் சிரித்தால் மாமியார் பயந்தே போயிருப்பார் துரை.
ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் மா.
அம்மா எப்பொழுதும் கை அளவுதான் சொல்வார். என் சின்னக்கைக்கு அந்த மெந்தியம் கொஞ்சமாகத்தான் வந்திருக்கும்.
கட்டாயம் கசக்கவில்லை.அம்மா சொல்லி இருப்பார்.
உங்க பாட்டியை ரொம்பப் பிடிக்கிறது.
குழம்பு சாப்பிட்டவர்கள் நிலை எப்படியோ?))) நலம் தானே அம்மா?
வாங்க வாங்க தனிமரம் நேசன்,நலமாப்பா. நல்லாதான் இருந்தாங்க. :)
மெந்தயக்குழம்பும் ரசனையும் கமெண்ட்ஸ்களும் கலக்கல்.
வாங்கப்பா மாதேவி.
உங்க பக்குவம் இன்னும் நல்லா இருக்கும்.
ரசித்ததற்கு மிக நன்றி மா.
Post a Comment