Saturday, August 19, 2017

மெந்தியக் குழம்பு,அம்மா, நான்..3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

திருமங்கலம்  1958... அப்பாவும் வந்து விட்டார்.  அடுப்புகளும் தயார்.
 விரைவில் அரிசி களைந்து வெண் கலப்பானையில்
போட்டாச்சு. பருப்பும் போட்டாச்சு. அதாவது அப்பாவின் 
வேலைகளைச் சொல்கிறேன்.
 கரி அடுப்பில் அப்பளம் சுடும் பணி ,என்னுது.
முறையே கரிந்த அப்பளம், சிவந்த அப்பளம் ,வெள்ளை அப்பளம் என்று வரிசையாக
பெரிய சம்புடங்களில் போட்டாச்சு.
திருமங்கலத்தில் அப்போது எவர்சில்வர் பாத்திரக் கடை வரவில்லை.
எல்லாவற்றுக்கும் மதுரை போகணும்.
இல்லையானால் சென்னை வருடாந்திர  விசிட்டில் கனமான பாத்திரங்களை அம்மா வாங்கி வருவார்.
அதை அழகாத் துணிகளில் சுற்றி
அம்மா கொண்டு வரும் அழகே தனி.

ஓ..அப்பளத்தை வீட்டூ வீட்டெனே.
 வேலைகள் ஆரம்பிக்கும் போது அம்மா செய்யும் முதல் வேலை 
புளி உப்பு தண்ணீரில் ஊறப் போடுவதுதான்.
ரசத்துக்குத் தனி, குழம்புக்குத் தனி.

எல்லாருக்கும் பிடித்த உ.கிழங்கை அரிவாள் மணையில் 
நறுக்க அப்பா சொல்லிக் கொடுத்தார். 
 ஒவ்வொன்றாக நான் அரிவதற்கு நேரம் ஆயிற்று.
அம்மாவின் குரல்., எல்லாருக்கும்  பழைய சாதம் சாற்றோடு, உப்பு
போட்டு,நல்லெண்ணெய் விட்டுக் கொடும்மா.
 உ.கிழங்கை என்ன செய்யறது. நான் பதில் கத்தல்.
அதை விட்டுடு. அப்பா பாத்துப்பார் என்று சொல்லி முடிப்பதற்குள்.,
 நான் பழய சாதம் இருக்கும்  பெரிய மூடி போட்ட 
பாத்திரத்துக்குத் தாவியாச்சு.
 பிடித்த வேலை.
கை அலம்பிக்கோ..அடுத்த உத்தரவு. 
சரி ஆச்சு.
 கரைத்து அப்பா,அம்மா,நான், ,முரளி, ரங்கன் எல்லோரும் சாப்பிட்டு
நாகம்மாவுக்கும் கொடுத்தாச்சு.
பாப்பா கை தங்கக் கை என்றபடி அவளும் மெச்சிக் கொண்டாள்.
   சரி அப்பா ரசம், உ.கிழங்கு செய்வார். நீ மெந்தியக் குழம்பு செய் என்றாளே 
பார்க்கணும்.
 குழம்பு செய்யும் பாத்திரம் மஹா கனம் பொருந்திய வெங்கல உருளி.
 சரி .நாளை முடித்துவிடலாம். இன்றைய மொளகூட்டலுக்கு காய் தயார்.
என் பொறுப்பில் மகள் விட்டு இருக்கிறாள். 
 அதைச் செய்யப் போகிறேன். சரியாகச் செய்யணும். தொடரும் பணி.
..

21 comments:

Anuradha Premkumar said...

ரசுச்சு ..ரசுச்சு ..படிக்கிறேன் அம்மா...

ரொம்ப அழகா சொல்றீங்க...

அப்பறம் அது என்னமா அப்பளத்தில் வகைகள்...

பழைய சாதத்தில் ..நல்லெண்ணெய் யா...
வல்லிசிம்ஹன் said...

ஆமாம். சாப்பாடு விஷயத்தை ருசிக்கத்தான் வேண்டும்.
நான் அப்பளம் சுட்ட அழகைச் சொல்கிறேன். அப்பளத்தை அப்படியே தணலில் போட்டால் கருகிவிடும். கொஞ்சம் ஜாக்கிரதையாகச் செய்தால் சிவப்போடு நிற்கும். இன்னும் ஜாக்கிரதையாகச் செய்தால் சரியான அளவில் செய்து முடிக்கலாம். அதைத்தான் உங்களுக்குச் சிரிக்கும்படி சொன்.னேன் அம்மா அனு

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்..... அப்பளம் சுடுவது ஒரு கலை! கொஞ்சம் விட்டால் கருகிவிடும். முன்பு குமுட்டி அடுப்பில், இப்போது காஸ் ஸ்டவ்-இல்.

இப்போதும் வீட்டில் அப்பளம் சுடும் வேலை எனக்குத் தான்! :)

நெல்லைத் தமிழன் said...

ரசிக்கும்படி எழுதுகிறீர்கள். அப்பளம் சுட்ட அழகைவைத்து மூன்றாகப் பிரித்துவிட்டீர்கள். கருகினதை என்ன செய்வீர்கள்?

ரொம்ப எதிர்பார்ப்புகள் இல்லாத, சாதாரண பழைய வாழ்க்கையைக் கண்முன் கொண்டுவருகிறீர்கள். அந்த வாழ்க்கை, எப்போதாவது வரும் பத்திரிகைகளைத் தவிர, தினப்படி தொந்தரவு (தொலைக்காட்சி போன்று) இல்லாத வாழ்க்கை. நிச்சயம் குளிர்சாதனப் பெட்டிக்கும் அங்கு வேலை இல்லை.

ராஜி said...

சுட்ட அப்பளம்...ஐ லைக் இட்

Geetha Sambasivam said...

அப்பளம் தணலில் வாட்டுவது எனக்குப் பிடித்த ஒன்று. இப்போது எரிவாயு அடுப்பிலேயே வாட்டி விடுகிறேன். அந்த ருசியே தனிதான். அதுவும் வெந்தயக் குழம்போடு அப்பளம். எங்க வீட்டில் வெந்தயக் குழம்பு எனில் குழம்புப் பொடி மிஷினில் திரிச்சு வைச்சிருப்பது போட மாட்டாங்க. மி.வத்தல், துபருப்பு, வெந்தயம் வெறும் வாணலியில் அல்லது கொஞ்சம் போல் நல்லெண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துக் குழம்பு தாளித்து இறக்கும்போது சேர்ப்பார்கள். இதைத் தான் நாங்க வெந்தய/மெந்தியக் குழம்பு என்போம். இப்போல்லாம் வெந்தயம் தாளித்தாலே வெந்தயக் குழம்பு என்கிறார்கள்! :) அதே போல் வற்றல் போட்டால் தான் வற்றல்/வத்தல் குழம்பு! :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்,
உண்மைதான் நிதானமாக நகரும் வாழ்வு.
எல்லா வேலையும் முடிந்து தணல் அணையும் வேளையில்
அப்பளம் காய்ச்சுவோம். இப்பவும் முன் பசிக்கு அப்பளம் காய்ச்சிக் கொள்வேன்.
அப்பள மன்னரா நீங்கள் சந்தோஷம் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க நெல்லைத்தமிழன்.
கருகினது சம்படத்தோட அடியில் இருக்கும். அம்மா மீண்டும் உள்ளே வரும் வரை.
சீனிம்மா பாட்டி கையால செய்யும் 500 அப்பளம் கோடையில்
எங்களுடன் ஊருக்கு வரும்.
வருஷம் பூரா உபயோகிச்சுக்கலாம்.
அம்மா கிட்ட ரெண்டு திட்டு வாங்கிண்ட பிறகு அந்தக் கருகினது வெளியே போகும்.
ஆமாம் மா. அமைதின்னா அப்படியொரு அமைதி.
அலட்டல்,கத்தல் ஒன்றும் அம்மவிடம்,அப்பாவிடம் கிடையாது.
வேலைகள் செய்து கொண்டே எங்களுக்கு ஒரு பாடமாக நடந்து
கொள்வார்கள். தம்பியுடன் கடைசி வாட்ஸப் பேசும் , எழுதும் போது,
எவ்வளவு உதவி செய்திருக்கிறாய் டா நீ என்றேன். எல்லாத்துக்கும் நம் அம்மா அப்பாதான் காரணம். நம்மால் இப்படித்தான் இருக்க முடியும்.நு சொன்னான்.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொல்வது சரியே கீதா.
அம்மா செய்வதும் அது போலத்தான். கறியமுது பொடி இருக்கும்.
மெந்தியக் குழம்பு செய்யும் போது,
எல்லாப் பருப்பும் ,புளி ,உப்பு சேர்ந்து கொதித்துக் கடைசியில் கருவேப்பிலையும்
இந்தப் பொடியும் போட்டு இறக்குவார்கள்.
அப்பளம் பொரித்து சேர்ப்பதும் உண்டு. உங்கள் குழம்பு பதிவு எனக்குக் கிடைக்கவில்லை.
உங்கள் பதிவுகளில் ஆகஸ்டு மாதம் தேடிப் பார்த்தேன்.

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.in/2014/06/blog-post.html

Thenammai Lakshmanan said...

superb amma. enakku sevappu appalathoda menthiyak kulambu venum. :) pasikuthu :)

பரிவை சே.குமார் said...

இனிய நினைவுகள்...
பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா இப்பதான் வருகிறோம் உங்கள் பக்கம். ரொம்ப நாளைக்கு முன் வந்த நினைவு...ஸாரி...ஃபாலோ பண்ண உங்க ப்ளாகை இணைச்சாச்சு...

சுட்ட அப்பளம் ஆஹா வெந்தயக் குழம்பும் உருளைக் கிழங்கும் சுட்ட அப்பளமும் செம காம்பினேஷன் அருமையா சொல்லறீங்க உங்கள் மென்மை இழையோட...

சூப்பர் இதோ முந்தைய பதிவுகளுக்கும் செல்கிறோம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா ஆமாம் உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன் வற்றல் போட்டாத்தான்வ் வற்றல் குழம்பு எல்லாரும் இப்ப சும்மா புளிக் குழம்பையே எல்லாரும் வத்தக் குழம்புனு சொல்லறாங்க அது போல த்தான் வெந்தயக் குழம்பும்...எங்கள் வீட்டில் வெந்தசார்/கிள்ளிப்போட்ட மிளகாய்க் குழம்பு/அப்பளக் குழம்பு என்று பொடி எதுவும் போடாமல் வெந்தயம் நிறைய தாளித்து, மிளகாய் வற்றலைச் சின்னசின்னதாகக் கிள்ளிப் போட்டு கடுகு, உ.பருப்பு, க பருப்பு கறிவேப்பிலை, பெருங்காயம் வெந்தயம் கொஞ்சம் தூக்கலாகத் தாளித்து புளி கரைத்துவிட்டுச் செய்வார்கள். திக் ஆக அரிசி மாவு கொஞ்சம் கரைத்துவிட்டுச் செய்வார்கள்.. அதில் அப்பளம் கூடச் சின்னச் சின்னதாக ஒடித்துக் கொண்டு எண்ணையில் பருப்பு கடுகு எல்லாம் தாளிக்கும் போதே அதையும் போட்டுப் பொரிந்ததும் புளி விட்டுச் செய்வதும் உண்டு...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார். நல்வரவு. நலமாப்பா. கருத்துக்கு மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் கீதா.
எப்ப வந்தால் என்னம்மா.
எங்கள் ப்ளாகில் உங்கள் கருத்துகளை நிறையப் படிக்கிறேன்.
அடிக்கடி கண் வறண்டு படிக்க முடியாமல் போவதால்
காலை 2 மணி நேரம் மாலை ஒரு மணி நேரம்
வலைப்பக்கம் வருகிறேன். முக நூலைத் தவிர்த்தால் நேரம் மிஞ்சும்.
எல்லா நண்பர்களும் அங்கே இருப்பதால் ஈர்க்கப் படுகிறேன்.
அம்மாவும் நீங்கள் சொல்வது போல அப்பளம்
பொரித்துக் குழம்பு செய்வார்கள். சுண்டைக்காய் வற்றலை எடுத்துவைத்துவிட்டு அப்பளம் மட்டும்
உண்போம்.
பழைய நினைவுகளில் என் குடும்பத்தோடு இணைகிறேன்.
அந்த சுகம். நீங்கள் படித்துக் கருத்து சொல்வது எனக்கு மிகக் கௌரவம் . நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேனம்மா., வரணும் .இத்தோட உங்களுக்குக் கொடுக்க வேண்டிய தின்பண்டங்கள் லிஸ்ட் நீள்கிறது.

Geetha Sambasivam said...

//எங்கள் வீட்டில் வெந்தசார்//

என்னோட மாமிகள் எல்லோரும் "புளி வெந்த சாறு" என்பார்கள்! கேட்டிருக்கேன்.:)

மாதேவி said...

இனிய நினைவுகளுடன் வெந்தயக் குழம்பு கமகமக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வெந்த சார் ஆ. கன்னடம் சவுண்ட் வரதே. எதனால இந்தப் பெயர் வந்திருக்கும்.கீதா.
புது வார்த்தை தெரிந்தது நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. ரசித்து ருசித்ததற்கு மிக நன்றி.