Blog Archive

Tuesday, July 11, 2017

சென்னை நகரிடம் விடை பெறுகிறோம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்த நான்கு  வருடங்களில்  நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
இந்த நான்கு  வருடங்களில்  நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
அப்போதெல்லாம்  அனுபவிக்காத  தண்ணீர் கஷ்டம் இந்தத் தடவை முறுக்கி
விட்டுவிட்டது இயல்பான வாழ்க்கையை.

 கிணறு தூர் வாரியும் மஞ்சள் வண்ணத்தில் தான் 
தண்ணீர். சென்னை  மெட்ரோ  உதவியில் சில நாட்கள் ஓடின.
இந்தத்த் தொந்தரவு பொறுக்க முடியாமல் குடும்பத்தில் சில பேற் பிறந்தகலம் சென்றனர். குழந்தைகள் மட்டும் என்னுடன் தங்கினர்.
அவர்களுக்கு எல்லாமே  உத்சாகம்தான்.
குழந்தைகள்  கபடில்லாத அன்பை மனம் கொண்ட அளவு அனுபவித்தேன்.
 பழைய படங்களைச் சேமித்தேன்.

நல்ல நிகழ்வுகள் அல்லாத நிகழ்வுகள் எல்லாம் மனதைப் பக்குவப் படுத்தும் என்றே 
நினைக்கிறேன்.

ஒரு சில நண்பர்களைத் தவிர மற்றவர்களிடம் அளவளாவ முடியவில்லை.
கொடுப்பினை இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்.
இறைவன்  அனைவரையும் காக்கட்டும்.

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி பெருகட்டும் அம்மா...

ராமலக்ஷ்மி said...

எல்லாம் இனிதே நடக்கும். பதிவுகள் மூலம் தொடர்பில் இருங்கள் வல்லிம்மா.

நெல்லைத் தமிழன் said...

பத்திரமாகப் போய்வாருங்கள் அம்மா. தூர தேசமாக இருந்தாலும் தற்போதைய சென்னை நிலைமையைப் பார்த்தபிறகு, அந்தத் தேசங்கள், பாலைவனச் சோலையாகக் காட்சியளிக்கும். வாய்ப்பு இருந்தால் அடுத்தமுறை வரும்போது சந்திப்போம்.

Unknown said...

எங்கே போகிறீர் !சொல்லவில்லையே!

Unknown said...

போகும் ஊரை சொல்ல வில்லையே!

நெல்லைத் தமிழன் said...

மேலே போட்டுள்ள படம், லண்டனில், பக்கிங்காம் அரண்மனைக்குப் போகும் வழியில் உள்ள நீரூற்றின் முன்னால் எடுத்த படம் என்று நினைக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

மீண்டும் சந்திப்போம் அம்மா. இந்தமுறை சென்னை தண்ணீர்க் கஷ்டத்தில் மிகவும் அல்லாடுகிறது. நண்பர்கள் வேறு யாரை எல்லாம் சந்தித்தீர்கள் அம்மா?

கோமதி அரசு said...

கிளம்பி விட்டீர்க்ளா அக்கா?
பழைய படங்களை சேமித்து விட்டீர்களா? அது போல் மகிழ்ச்சியான செய்திகளை மனதுக்குள் சேமியுங்கள்.
உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.

Geetha Sambasivam said...

சிகாகோ தானே போகிறீர்கள்? உங்கள் பயணம் இனிமையாக நடக்கவும், சிகாகோவில் மகள் வீட்டில் பொழுது அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் கழியவும் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராமனுசம அய்யா. பெண் தன் ஊருக்கு அழைக்கிறாள. அது சிகாகோ நகரம். வருகைக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன. மிக நன்றி ராஜா.எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் நெருங்கிய தோழிகள்மூவரைச் சந்தித்தேன்.
மற்றபடி இருவரிடம் பேசினேன். பாக்டீரியா தஒற்று வந்து 10 நாட்களாக வதை. கடுமையான் காய்ச்சல். புறப்படுவது நிறுத்தப் பட்டது.
இன்னும் வைத்தியர் சரி என்று சொன்ன பிறகே இந்த இரண்டு மூன்று நாட்களில் கிளம்னபுவோம்.
@அன்பு கீதா நன்றி மா.
@அன்பு நெல்லத்தமிழன் ஆமாம் அவர் லண்டனில் ட்ரெயினிங்க் எடுத்தபோது எடுத்தா பட. சரியாகக் கண்டுபிடித்தீர்கள்.
@ அன்பு கோமதி நன்றி மா. இறை அருள் நீடிக்கட்டும்.