Blog Archive

Wednesday, May 10, 2017

அழகர் ஆற்றில் இறங்க ........

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்..
அழகர் மலை மன்னர் வந்தார்
ஆற்றில் இறங்க அண்ணல் வந்தார்.
 கள்ளர் மலை கள்ளர் வந்தார்//  கோதை மனம் மகிழ்  மன்னர் வந்தார்.
பச்சை ப்   பட்டுடுத்தி  சுந்தரன் வந்தார்
பசும்பொன்னால் ஆன பெருமாள் வந்தார்.
மதுரை மனம் மகிழ அரசர் வந்தார்
ஆண்டாள் கைமாலை அணிந்த காளை  வந்தார்.
தங்கப் பரியேறி விமலன் வந்தார்
அழகுத்  தோளுடை   அழகர் வந்தார் .
வையம் செழிக்க,
பொன் பயிர் விளைய
அழகா நீ அருள் புரி .

10 comments:

நெல்லைத் தமிழன் said...

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் உங்கள் வரவேற்புப் பாவும் ,நல்லா இருக்கு. அழகர் கோவில் சேவிப்பதும் தோசை பிரசாதம் சாப்பிடுவதும் Pendingல இருக்கு

ஸ்ரீராம். said...

என்ன பச்சைப் பட்டாடை உடுத்தி ஆற்றில் இறங்கினாலும் மழையைக் காணோம்!

நெல்லைத் தமிழன் said...

மேல போட்டிருக்கிற நீச்சல் குளமும் அட்டஹாசமா இருக்கு. எந்த ரிசார்ட்னுதான் தெரியலை.

வல்லிசிம்ஹன் said...

அழகர் கோயில் தோசை எழுதி விட்டீர்களா நெல்லைத்தமிழன்.
இந்த வைபவம் சன் நியூஸ் சானலில் பார்த்தேன். பாட்டியுடன் சென்ற நினைவுகளுடன்.
வைகையில் தண்ணீர் ஓடிய காலம்.

வல்லிசிம்ஹன் said...

மிகப்பல வருடங்களாகப் பச்சைதான் உடுத்துகிறார்.
ஸ்ரீராம். மதுரையில் முதல் நாள் மழை பெய்ததாகச் சொல்கிறார்கள்.

கோடையிடி என்னமா சத்தம் போடும். அம்மாடி.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி நாகேந்திர பாரதி.

கோமதி அரசு said...

பாடல் அருமை அக்கா, மழை தூறி சென்றது. நேற்று இடி மிரட்டியது ஆனால் மழை இல்லை. நல்ல மழை பெய்தால் தான் தண்ணீர் கஷ்டம் தீரும். அழகர் மனம் இறங்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நெல்லைத் தமிழன், இது நாங்கள்
தங்கியிருந்த கான்ராட்/ஹில்டன் ரிசார்ட்.
வெகு அழகான இடம். சமுத்திரக்கரை.
நிம்மதியாக இருந்துவிட்டு வந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, நல்ல மழை பெய்ய என் பிரார்த்தனைகள். மழை வரும்மா

Geetha Sambasivam said...

முன்னெல்லாம் பட்டாசாரியார்கள் கண்களை மூடிக் கொண்டு அழகரின் பட்டைத் தேர்வு செய்வார்கள். இப்போதெல்லாம் பச்சை தவிர வேறே எடுப்பதில்லை போல! :( நல்ல பாடல்!