எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
ஆடி வெள்ளி
அதிலும் பூர நட்சத்திரம்.
கோதையின் அவதார நாள். பத்து நாட்களாக நடைபெறும் திருவிழா. அன்னையும் அப்பனுமாக வெவ்வேறு வாகனங்களில் ,
அரசன் அரசியாக வில்லிபுத்தூரை வலம் வருகிறார்கள்.
கண் நிறையும் காட்சி.
திருமஞ்சனம் முடிந்ததும் கையில் ஏறும் கிளிக்குத் தான் எத்தனை தாபம்.
அதை உணர்ந்தது போல இருவர் முகத்தில் பளபளக்கும் குறு முறுவல்.
தெய்வ அனுபவம் .மகன் ஏற்பாடு செய்திருக்கும் இணைப்பில்
காலையில் பார்த்துக் களித்த காட்சிகள். இன்னும் தேர் உலா வரவில்லை. அது நாளைக்கோ என்னவோ.
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் அழகைக் கண்டுதான் உணர வேண்டும்.
வலையில் தேடிய போது கிடைத்தக் காட்சியைப் பதிந்திருக்கிறேன்.
8 comments:
தெய்வ அனுபவம்...
அருமை... படங்கள்...
அருமையான பதிவு.
தேர்திருவிழா கண்டேன்.
நன்றி.
அன்பு குமார். படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி மா.
அன்பு கோமதி, தேர் காண்பித்தார்களா. எனக்கு அந்தத் தேர் மேல்
ஒரே பைத்தியம். இந்தத் தடவை வரும்போது மதுரையையும்,கோதையையும் தரிசித்து மகிழ மீனாட்சி,ஆண்டாள் இருபவரும் அருள வேண்டும் அம்மா. வாழ்க வளமுடன்.
ஆண்டாளும் வடபத்ர சாயியும் நம்மை எப்போதும் ஆண்டு அருளட்டும்.
ஆமாம். அந்த தெய்வீகம் நம்மை எப்பவும் சூழ்ந்திருக்கணும்.
அருமை.
நன்றி வெங்கட்.
Post a Comment