4th February 1967. |
ஒரு தை மாத நிலவு.
ஒரு கணவன் மனைவி. இருவருக்கும் மிக இளவயது.
திருமணமாகி ஒரு வருட பூர்த்தியைக் கொண்டாட
ஒரு திரைப்படத்தையும் பார்த்துவிட்டு வீட்டுக்கு
நடந்தே வந்து கொண்டு இருந்தார்கள்.
அதிக அரவற்றமற்ற சாலை. கடந்து போகும் பஸ்களின் வெளிச்சமும். திட்டு திட்டான
டீக்கடைகளும் அவற்றிலிருந்து வரும் வெளிச்சங்களுமெ
வழிகாட்டி.
நிறையப் பேச அவர்களது முதல் வருட வாழ்க்கையில் நேரமில்லை.
திருமணம் முடிந்த முதல் மாதமே கருத்தரித்ததாலும்,
பெண்ணின் பிறந்தகம் ,புக்ககம் மாற்றி மாற்றி அழைத்ததாலும்
எப்பொழுதும் இருக்க வேண்டிய பாசப் பரிமாறல்கள் குறைவே.
அந்த வாலிபனது பணியும் அவரை இறுக்கக் கட்டிப் போட்டதின் விளைவு.
பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை.
ஆனால் அந்த ஒரு நல்லிரவு நிலா வெளிச்சத்தின் நடையில் கைகள் பின்னிக் கொண்டு நடந்த போது ஒரு அரிய புரிதல் இருவருக்கும் உண்டானது.
உதடுகள் பேசாததை உள்ளங்கள் பேசியது அப்போதுதான் புரிந்தது.
அன்றிலிருந்து நிலவு அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியானது.
இந்த நொடி வரை அப்படித்தான்.
Add caption |
10 comments:
அருமை வல்லிம்மா.......
புரிந்து கொள்ள முடிந்தது.
மிக நன்றி வெங்கட். வந்து கருத்து சொன்னது தங்கள் அன்பைக் காட்டுகிறது.
புரியாமல் இருக்குமா உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஸ்ரீராம்..
நன்றி ராஜா.
மெளன மொழி...அருமை..
நிலவு ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் பயணிப்பது சிறப்பு!
நிலா...
அந்த இரவு...
புரிந்து கொண்டேன் அம்மா...
அருமை.
அன்பு அனுராதா ப்ரேம். மிக நன்றி மா. புரிதல் நன்மை தரும்.
உண்மைதான் சுரேஷ். கடவுள் அருளால் நன்மையான நிகழ்ச்சிகள் நினைவில் தங்கி இருப்பதும் ஒரு ஆசியே.
அன்பு பரிவை குமார்,
பெயரிலியே பரிவு இருக்கிறது. வார்த்தைகளிலும் தான். நன்றி மா.
Post a Comment