Blog Archive

Wednesday, May 18, 2016

அம்மா என்னும் உலக மஹா அதிசயம்

 June 2003
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்வான நிகழ்வுகள். பல புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய் வரும்
நன்மை  கிடைத்தது.
மகனுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. மற்றவனுக்கும்  நிச்சயம் நடக்க வேண்டும்
பெருமாளே என்று  வேண்டிக் கொண்டே இருந்தேன்.

அடுத்தவாரம் ஒரு புதன்கிழமை காலை அவசர தொலைபேசி
அழைப்பு தம்பி மனைவியிடமிருந்து.
அம்மாவுக்கு  மார்பு வலி. உங்களைப் பார்க்கவேண்டும் என்கிறார்
என்றதும் நானும் சிங்கமும் விரைந்தோம்.
அப்போதைய தேவகிக்கு அழைத்துவந்து சிகித்சை பயன் பெறாது, ஆஞ்சியோ செய்ய மலருக்கு விரையுங்கள் என்று ஆம்புலன்ஸும் கொடுத்தார்கள்.

ஒன்றுமே  மனதில் ஓடவில்லை.
அம்மா என் கையைத் தன்முகத்தில் வைத்துக் கொண்டார்.
காது,கைகள்,கழுத்தில் இருப்பதை எடுத்துவிடு என்று சைகை.
நான் பேச வேண்டாம் என்று சொல்லிமுடிப்பதற்குள்
மலர் வந்தது. அங்கே அவசர ஆஞ்சியோ செய்து

மியாட் செல்ல  முடிவு செய்யப் பட்டது.
எல்லா நாட்கள் இரவும் சின்னத் தம்பியும்,அவன் மனைவியும் மாறி மாறி
அம்மா இருந்த அறைக்கு வெளியே கொசுக்கடியில் படுத்துக் கொண்டு அவதியைப் பொருட்படுத்தாமல்  நாட்கள் கடத்தினார்கள்.
பகல்வேளையில் நான் இருந்தேன்.
அம்மாவுக்கு  இருதய அறுவைச் சிகித்சை பரிந்துரைக்கப்பட்டது.
தீர்மானமாக மறுத்துவிட்டார்.
எனக்கு இது  போதும் .நான் பத்திரமாக இருந்து கொள்கிறேன் என்று
சொல்லிவிட்டார்.
அங்கிருந்த இரண்டு வாரத்தில் நாங்கள் மூவரும் தவம் கிடந்தோம் அம்மாவைப் பார்க்க.
இண்டென்சிவ் கேர் லிருந்து தனி அறைக்கு மாறி நாங்கள் அருகில் வந்ததுதான் அம்மா முகத்தில் சிரிப்பு.
அம்மா பேரன்கள் கல்யாணம் பார்க்காமல் போகாதே என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
அம்மாவும் முயன்று வீட்டுக்கு வந்தார்.
அதன்பிறகு  2005 மே இருபது வரை அவள்  ஒரு துளி வார்த்தை வலி சொன்னது கிடையாது.
இளைய மகனை ஒரு நாள் தூக்கத்தில் பறி கொடுத்தாள். அதிலிருந்து
  உடல்,மனம் இரண்டும்  நொந்து திவ்ய பிரபந்தம் சேவிப்பதில் நாட்களைக் கழித்தாள்.
அமைதியாக ஒரு துவாதசி நாள் காலை நான் வந்து பார்ப்பதற்குள்
இறைவனில் அடங்கினாள்.

நானும் பெரிய தம்பியும் மௌனம் காத்து நாட்களைக் கடத்தி அவளுக்குச் செய்யவேண்டிய
கடமைகளை நிறைவேற்றினோம்.

நல்லதொரு ஆத்மா எங்கள் அன்னையாக ,நல்ல மனைவியாக ,பேரன்பு மிக்க பாட்டியாக
வாழ்ந்து மறைந்தாள்.
இறைவன் அவள் மேல் இன்னும் கொஞ்சம் கருணை வைத்திருக்கலாம்.
எங்கள் தம்பியை உயிருடன் விட்டிருக்கலாம்.
விதி வலியது.
அவள் பொறுமை எனக்கு வருமா தெரியாது. ஆனால் அவள் அன்பு என்னைக் காக்கிறது என்பது தெரியும்.


Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

3 comments:

கோமதி அரசு said...

கண்ணீர் துளிர்க்க வைக்கிறது. அம்மாவுக்கு நமஸ்காரங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அம்மா..... மறக்க முடியாத நினைவுகள் தான்....

ஸ்ரீராம். said...

வலி மிகுந்த நினைவுகள்..