Blog Archive

Wednesday, May 11, 2016

#அமெரிக்க அனுபவம் 3


நாளை  சின்னப் பேரன் பள்ளியில்  
உயிர்க்காட்சி  ஒன்று.  அவரவருக்குப் பிடித்த தலைவர்களின்

வாழ்க்கை  பற்றிப் பேசி அவர்கள் போலவே நடிக்க வேண்டும்.
பேரன்  அவர்கள் ஊர்த் தலைவர் ஜான் எஃப் கென்னடி  யாகப்
பேசப போகிறான்.
அதற்கான தலை முடிக் கோதல், நீல நிற சூட் ,கையில் சிறுபெட்டி
என்று வேடம் தயார்.
அவரது வாழ்க்கையை  மனப்பாடமாக   செய்து கொண்டுவிட்டான்.
அடே அப்பா என்ன என்ன தயாரிப்பு. நூலக  விசிட்கள்.

அவரைப் போலவே  நடை,பேச்சு,புன்முறுவல் எல்லாம் செய்து பார்த்துக் கொண்டுவிட்டான்.

இப்போ அதுவல்ல கதை.
இவனைப் போலவே இவன் தோழன்  ஜனாதிபதி லின்கன்  வேடம்.
அவனுக்கு உடை உதவிகள் பெண் செய்து கொடுத்தாள் .அம்மா வேலைக்குப் போகிறவர்.

இப்போது தொலைபேசியில் பேசி, தான் ,வரமுடியாது என்றும் தன பிள்ளையை அழைத்துப் போகச் சொல்லியும்    கேட்டுக் கொண்டார். மலர்விழி நீங்கள் போன தடவையே வரவில்லை. இத்தனை பையன் கள் பெண்களின் பெற்றோர் வரும்போது  நீங்கள் வரவேண்டாமா என்று உரிமையோடு கேட்டுக் கொண்டாள். என் பெண்.

அவரது அலுவலகத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் சௌகரியம் இருக்கிறது.

விடுமுறை சொல்லிவிட்டு வரலாம்.
 என்னங்க  செய்யறது பொழைப்பை விட்டுட்டுப்  பையனை கவனிக்க முடியவில்லை என்று சொன்னார்.

அந்தப் பிள்ளை மகா சுட்டி.
 தானே எல்லாவற்றையும்  படித்துக் கொண்டான்.
நாளை சாயந்திரம் எல்லாக் குழந்தைகளும்   தங்கள் பாத்திரங்களை திறமையாக 
 அழகாக  உயர்வாகச் செய்து காண்பிப்பார்கள்,.

அந்தக் குழந்தைக்காக இந்தத் தாய் வந்தால் நன்றாக இருக்கும்.  பார்க்கலாம் .



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

12 comments:

துளசி கோபால் said...

பாவம் அந்தத் தாய் :-( என்ன இக்கட்டில் இருக்காங்களோ....... ப்ச்

வல்லிசிம்ஹன் said...

இக்கட்டு எல்லாம் ஒன்னும் இல்ல. துளசி. அந்த நேரம்
டியூஷன் எடுக்கும் நேரம். 6.30 பிஎம்
இரண்டு பசங்க வருவாங்க.மேல சொல்லலை.

Yaathoramani.blogspot.com said...

என் பெண் தயவில் வருகிற மாதம்
நியூ ஜெர்சி வரும் வாய்ப்பு எனக்கும்
என மனைவிக்கும் வாய்த்துள்ளது

அதற்குள் கொஞ்சம் அமெரிக்கா
குறித்துத் தெரிந்து கொண்டால்
அசடாக காட்டிக்கொள்ளாது இருக்கலாமே
எனத் தோன்றுகிறது

பொதுவாக அமெரிக்கா குறித்து
பதிவுகள் எழுதி இருந்தால் லிங்க் தரவும்
அல்லது பதிவின் மாதம் தெரிவிக்கவும்
படித்துத் தெரிந்து கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...

வல்லிசிம்ஹன் said...

Ramanam ji,
அமெரிக்கா வரும்போது டிஷ்யு கல்ச்சருக்குப் பழகிக் கொள்ளணும். தும்மினால்,இருமல் வந்தால்
பிறகு வாஷ்ரூம் போனால் என்று வரிசையாக பழகிக் கொள்ளணும்.

நியுஜெர்சி தமிழர்கள் நிறையப் புழங்கும் இடம்.
பெண் இஷ்டப்படி அவர்களது தோழிகளுடனும் வந்திருக்கும் மாமிகளுடனும்
பழகவும்.

தெரிந்த பிறகு பேசலாம். மற்றதெல்லாம் பெண்ணும் மாப்பிள்ளையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஸ்ரீராம். said...

அந்தப் பையன் பாவமா, அவன் அம்மா பாவமா?

ரமணி ஸார்.. அமெரிக்கா பயணம் சிறக்க, இனிதாக வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம்,
அந்த அம்மையார்தான் வாழ்வின் இனிய கட்டங்களை இழக்கிறார்.
இந்த ஒரு மாலை அந்த டியூஷனை ஒத்திவைக்கலாம். அந்தப் பையன் ரொம்ப சமர்த்து. ஏகத்துக்கு புத்திசாலி. நான் கட்டாயம் அவன் பேசுவதைக் கூட இருந்து கேட்கப் போகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவம்.... எத்தனை விஷயங்களை இழக்க வேண்டியிருக்கிறது - அம்மாவும் மகனும்....

Ranjani Narayanan said...

இந்த மாதிரி நிறைய அம்மாக்கள். மாதக் கணக்குக் குழந்தையைக் கூட காப்பகத்தில் விட்டுவிட்டு டாலரைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். டாலர் எப்போது வேண்டுமானாலும் வரும், குழந்தையின் இந்த வயசு விளையாட்டுக்கள் திரும்ப வருமா? குழந்தையின் திறமையைப் பார்த்து மகிழக்கூட முடியாதபடி இந்த டாலர் அவர்களைக் கட்டிப் போடுகிறது என்று தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட். 9 வயதில் அது அதி புத்திசாலி.
அவன் அப்பா படி படி என்று ரொம்ப வற்புறுத்தினால். அப்பா உன் டி என் ஏ வேற .என் டிஎனே வேற. தொந்தரவு செய்யாதே என்று சிரித்தானாம்.

வல்லிசிம்ஹன் said...

ரஞ்சனி,
டாலர் மோகம் எப்படித்தான் ஆட்டி வைக்கிறது.
அவர்கள் வரவே இல்லை. அத்தனை கணீர் என்று பேசியது அந்தப் பிள்ளை.

பெரியவன் ஆன பிறகு மிகப் பிரமாதமாக வரப் போகிறான்.

மோகன்ஜி said...

அந்தப் பிள்ளை பெரியவனாகும் போது உறவுகளை எப்படிப் பேணுவான் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அவனுடைய பாட்டி, அப்பாவுடைய அம்மா தான் வீட்டில் சமையல்,மற்ற வேலைகள். அதே நிலைமைக்கு அம்மாவைக் கொண்டு வருவான். இல்லாவிட்டால் வெளியேறிவிடுவான்.
ஆனால் தங்கமான பிள்ளை. காப்பாத்தினாலும் அதிசயப் பட ஒன்றும் இல்லை.