Blog Archive

Friday, April 29, 2016

இலை உதிர் காலம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

              அன்பு, முயற்சி, பொறுமை,அஞ்சாமை எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டு என் தாய் மாமா  ஸ்ரீ. கீழ நத்தம் வீரராகவன் ராமஸ்வாமி.
   படிக்காத புத்தகங்கள் இல்லை.
அறியாத ஆங்கிலம் இல்லை.  நட்புகள்  அனேகம்.
இசை ரசிகர். பாடவும் பாடுவார். என்னைத் தூளியில் போட்டு சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடினதை என் அறுபது வயதில் சொல்லி சிரிக்கவைத்தவர்.
  குடும்பத்தில் அத்தனை நபர்களுடைய பிறந்த நாள்,தலைமுறை விவரம் எல்லாம் பதிந்து வைத்திருந்தார்.
இந்த எண்பது வயதுக்காரர் குடி இருந்தது மூன்றாவது மாடியில். எனக்கோ
மாடியேறத்தடை. தொலைபேசியில் முடிந்தவரை பேசி இருந்தேன். கால மாற்றத்தில் வெளி நாடு வந்ததில் அதிகத் தொடர்பில்லை.
வாய்த்த மனைவியோ சொக்கத்தங்கம்.   அயராமல் உழைப்பவர்.
பெற்ற பிள்ளைகள்  விளையாட்டுத்துறை வல்லுனர்கள்.
விமர்சகர்கள். பத்திரிகைகளில்  எழுதுபவர்கள்.
இந்த நல்ல குடும்பத்தை விட்டு
 புதன் இரவு இறைவனடி ஏகினார்.
அனாயச மரணம்.  மூச்சு விடமுடியவில்லை என்று சொல்லி , ஆம்புலன்ஸ் வருமுன்
மறைந்துவிட்டார்.  நாங்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
 அஞ்சலிகள் அன்பு மாமா.


8 comments:

அப்பாதுரை said...

இரங்கல்கள்.

ஸ்ரீராம். said...

அன்பாய்ப் பழகியவர்களின் மறைவு மனதில் சட்டென்று ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது உண்மை. எங்கள் அஞ்சலிகள்.

துளசி கோபால் said...

RIP

'பரிவை' சே.குமார் said...

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அப்பாதுரை said...

தலைப்பை இப்பத்தான் கவனித்தேன்..:-)

ராமலக்ஷ்மி said...

அஞ்சலிகள்.

கோமதி அரசு said...

நிறை வாழ்வு வாழ்ந்த மாமாவிற்கு வணக்கங்கள்.
மாமாவை பிரிந்து வாடும் உங்களுக்கும், அவர் அன்பான குடும்பத்தினர்களுக்கும் இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் நன்றி. ஆறுதல் வார்த்தைகள் எப்பொழுதும் தரும் நெகிழ்ச்சியை இப்போதும் உணருகிறேன். மிக மிக நன்றி மா.