Add caption |
Rameswaram |
yugaathi Balaji |
2003 மார்ச் 23 யுகாதி
++++++++++++++++++++++++++++++++
2003 ஆரம்பத்திலிருந்து ஒரே கோவில் மயம் தான். ஜனவரி மாதம் ராமேஸ்வரம், ஸேதுக்கரை,
நவபாஷணம் என்று வேண்டுதல் பிரார்த்தனைகள். பிள்ளைகள் இருவரின் திருமணம் சீக்கிரம் வர அனைத்துக் கடவுள்களிடமும் அப்ப்ளிகேஷன்கள்.
தம்பி ரங்கன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அருமையாக அழைத்துச் சென்றான்.
இறைவன் ஒரே வருடத்தில் இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறானே.
என்று என் மேலேயே கண் பட்டுக் கொண்டென்.
அடுத்து திருச்சி,ஸ்ரீரங்கம், சமயபுரம்,கும்பகோணம் என்று மாப்பிள்ளை பெண் முதல் பேரனோடு
ஒரு சுற்றுலா.
என் பிறந்த நாளன்று சென்னை வந்து சேர்ந்தோம். சம்பந்தி வீட்டி ல் அருமையான சாப்பாடு அள்ளிக் கொடுத்தார்கள்.
அப்பொழுதும் அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
ஏதோ வேலை விஷயமாக வெளியே இருந்தவன், தாமதாக வாழ்த்து சொல்வதாக வருத்தப் பட்டான். எங்கள் வீட்டுக் கடைக்குட்டி என்பதால் எல்லோரும் அவன் மேல் உரிமை எடுத்துக்கொள்வோம்.
மீண்டும் யுகாதிக்கு திருப்பதி போவதாகத் திட்டம். அனைவரும் திருப்பதி கூட்டம் பற்றி பயமுறுத்தினார்கள்.
அன்று கூட்டமே இல்லை.
சுகமே சென்று சுகமே வந்தோம். தனியாக நின்று கோவிந்தனிடம் இரண்டு நிமிடம் ஒன்றும் பேசாமல்
கண்ணீர் அர்ச்சித்து. ,உண்டியலை சேவித்து மகிழ்வுடன் திரும்பினோம்.
மனம் கொள்ளா மகிழ்ச்சி.
அம்மா சொன்ன ஜாக்கிரதையெல்லாம் கேட்டுக் கொண்டேன்.
விழாமல் திரும்பவா. அன்னிக்கு உன் ஜன்ம நட்சத்திரம். என்னுடன் நீ இல்லையே ந்னு நினைக்கவில்லை. பகவானுடன் நீ இருந்தது மகிழ்ச்சி என்று தொலைபேசியில் வாழ்த்தினாள்.
வாழ்க்கையின் அன்புகளையும் ஆதரவுகளையும் நினைக்கிறேன்.
எல்லோருக்கும் இனிய உகாதி வாழ்த்துகள்.
5 comments:
Recollecting the past is always pleasant.
subbu thatha.
YES Anna, that too only good memories. Thank you. my humble greetings on this Yugathi day.
my Pranams to you and Meenakshi Manni.
நிறைந்த சந்தோஷங்கள் வாழ்வின் தித்திப்பு.
வாழ்த்துக்கள் அம்மா.
வாழ்க்கையில் அன்புகளும்,ஆதரவுகளும் இல்லையென்றால் வாழ்க்கை பாலைவனம்.
யுகாதி நினைவுகள் மிக அருமை.
அம்மா என்றும் குழந்தைகளின் நலனுக்காக வாழும் ஜீவன்.
ஆமாம் கோமதி.
எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் நாம் எல்லோரும்.வாழ்க வளமுடன் அம்மா.
Post a Comment