எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
#வாழ்வெனும்சக்கரம்
++++++++++++++++++++++++++++++++
பத்து வருடங்கள் மேலே
பத்துவருடங்கள் மெல்ல மெல்ல
கீழே வருவதும் போவதும் தெரியவில்லை.
ஆனாலும் பெரியவர்கள் அனுபவித்தது எல்லாம் எனக்கும்
நடப்பது போலத் தோன்றுகிறது.
அவர்களுக்கு அளவிட முடியாத பொறுமை இருந்தது.
சஹஸ்ர நாமம், பாதுகா சஹஸ்ரம், ரகுவீர கத்யம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம் எல்லாம் கரதலைப் பாடமாக இருந்தது.
நானோ காலையின் இரண்டு மணி நேரம்
கடவுளுக்கு ஒதுக்கிவைத்துவிட்ட திருப்தியில்
முக நூல்.வாட்ஸாப், வலைப்பதிவு என்று வந்துவிடுகிறேன்.
பெண் தன் குழந்தைகளையும் ,கணவரையும் கவனித்து அனுப்பிவிட்டு,தனக்கான
வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
யாராவது கண்டிக்க ஆளில்லை என்றால் கிழங்கள் இப்படித்தான் போல இருக்கிறது.
#வாழ்வெனும்சக்கரம்
++++++++++++++++++++++++++++++++
பத்து வருடங்கள் மேலே
பத்துவருடங்கள் மெல்ல மெல்ல
கீழே வருவதும் போவதும் தெரியவில்லை.
ஆனாலும் பெரியவர்கள் அனுபவித்தது எல்லாம் எனக்கும்
நடப்பது போலத் தோன்றுகிறது.
அவர்களுக்கு அளவிட முடியாத பொறுமை இருந்தது.
சஹஸ்ர நாமம், பாதுகா சஹஸ்ரம், ரகுவீர கத்யம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம் எல்லாம் கரதலைப் பாடமாக இருந்தது.
நானோ காலையின் இரண்டு மணி நேரம்
கடவுளுக்கு ஒதுக்கிவைத்துவிட்ட திருப்தியில்
முக நூல்.வாட்ஸாப், வலைப்பதிவு என்று வந்துவிடுகிறேன்.
பெண் தன் குழந்தைகளையும் ,கணவரையும் கவனித்து அனுப்பிவிட்டு,தனக்கான
வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
யாராவது கண்டிக்க ஆளில்லை என்றால் கிழங்கள் இப்படித்தான் போல இருக்கிறது.
10 comments:
'ஹா..... ஹா... ஹா... அம்மாவுக்குத் தெரியாததா என்ன?' என்று நினைத்திருக்கக் கூடும்.
ஆமாம் ஸ்ரீராம்.
அவர்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.
அதற்கு பகவத் த்யானமே தேவலை.
பகவத் தியானமே கூட அவர்களுக்காகத் தானே?
அதுவும் உண்மைதான் மோகன் ஜி.
எல்லோரும் நலமாக வாழத்தான் பிரார்த்தனையே.
அது சரி....
அதனால் என்ன?
அது சரிதான் .பரிவை.குமார். எத்தனையோ பெண்கள் கோவிந்தா,சிவசிவா என்று இருக்கும்போது, நான் முகனூலில் அலைகிறேனே என்ற அங்கலாய்ப்பு தான்.
ஒண்ணுமே இல்லை துரை. கில்டி காம்ப்ளெக்ஸ். ஹா ஹா. நான் கொஞ்சம் பழைய தலைமுறை இல்லையா. என்னையே கேள்வி கேட்டுக் கொள்கிறேன்.
காலையில் வாக்கிங் போகும்போது எல்லாவற்றையும் சேவித்துவிடுவேன். இல்லையென்றால் தளிகை செய்யும்போது. சாயங்காலமும் அப்படியே செய்வேன். அம்மா வந்தால் அம்மாவுடன் சேர்ந்து திவ்யப்பிரபந்தம் சேவிப்பேன். எனக்குத் தெரியாதவற்றை அம்மாவுடன் சேர்ந்து சேவிப்பதால் கற்றுக்கொண்ட மாதிரியும் இருக்கும். அம்மாவிற்கும் கம்பனி கொடுத்தாற்போல இருக்கும். அம்மா குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களை ராகம் போட்டு சேவிப்பாள். மிகமிக இனிமையாக இருக்கும். என் அம்மாவிற்கும் பெண் தன்னுடன் நேரம் செலவழிக்கிறாள் என்று சந்தோஷமாக இருக்கும்.
நீங்களும் உங்கள் பெண்ணுடன் சேர்ந்து இப்படிச் செய்யலாம். இருவருக்குமே மனதிற்கு இதமாக இருக்கும். இரண்டு பேராகச் சேவிக்கும் போது நன்றாக இருக்கும். இது ஒரு சின்ன யோசனை தான். தவறாக நினைக்க வேண்டாம்.
அன்பு ரஞ்சனி, இதில் தவறக நினைக்க என்ன நினைக்கிறது. நானும் அவளும் சேவிப்பது நாமராமாயணமும் ஹனுமான் சாலிசாவும். அவ்ளுக்குத் தமிழ் படிப்பது சிரமம்.
மற்றபடி கண்ணினுண் சிறுத்தாம்பும் ,மற்ற சில மனப்பாடப் பாசுரங்களும், எழுந்தவுடன்
சொல்லிக் கொண்டிருப்பேன்.
ஆதித்யஹ்ருதயம்,மற்ற ஸ்லோகங்களும் தினசரி வழிபாடோடு சேர்த்தி மா.
நன்றி ரஞ்சனி நீங்கள் சொல்வதைத் தனியாகவே செய்கிறேன்.
Post a Comment