Blog Archive

Thursday, April 21, 2016

ஏதோ நினைவுகள்....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பாராட்டு, மனதாரப் பாராட்டப் படுவது சில உயிர்களுக்கே   வாய்க்கும்.

அதில் யாரும் என் எங்கள் சிங்கத்துக்குக் குறை வைக்கவில்லை.

1983 லிருந்து தோட்டம் போட ,மண்ணைக் கிளறி,
கடப்பாறையால் தோண்டி,
நீர் பாய்ச்சி  வீட்டுமுன் இருந்த  கட்டாந்தரையைப் பசுமையாக்கினார்.
வித விதமான பூக்களின் விதைகளை வாங்கித் தூவி

பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக
அமைந்த தோட்டம் விரிவடைந்தது.
 இரண்டு மாமரங்கள். தென்னை,வாழை என்று மரங்கள்.
செம்பருத்தி வகைவகையாக.
கருவேப்பிலை வானளவு உயர்ந்தது,.
அதைத்தவிர கள்ளி வகையறா.
பொன்சாயில் எலுமிச்சை, சப்போட்டா,ஆலமரம் எல்லாம் வளர்ந்தன. அதில் பழுத்த
சப்போட்டா அவ்வளவு இனிமை,.
மனம் கொள்ளாப் பெருமையுடன் அந்த செடிகளைப் பார்த்த வண்ணம் இருப்பார்.

ஏதாவது வெளி நாடுகள். போவது அவ்வளவு  இஷ்டமில்லை. செடிகள் வாடிப் போகும். இல்லை மழையில்  அழுகிவிடும் என்று பயம். தகுந்த ஆட்களைக் கண்காணிக்க வைத்துவிட்டுத்தான் அதுவும் எனக்காகக் கிளம்புவார்.
  சினேகிதர்கள் யாராவது வந்தால் ,எல்லாம் இவளுக்காகத் தான் நான் கிளம்பறேன் பா.
இதெல்லாம் என் குழந்தைகள். வேறு யாரும் பார்த்துக் கொள்ள முடியாது என்று மனமில்லாமல் தான்  கிளம்புவார்..

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

பசுமையான நினைவுகள்.... செடி வளர்ப்பது அதை பராமரிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம். அதில் மனம் லயித்து விட்டால் கவலைகளே இல்லை.

ராமலக்ஷ்மி said...

நீங்காத நினைவுகள்.

ஸ்ரீராம். said...

மலரும் நினைவுகள். சிங்கம் அயராத உழைப்பாளி. கற்பனை மிகுந்தவர் என்பது அவர் செய்யும் மரப் பொருட்களைப் பார்த்தபோது தெரிந்தது. அவர் ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைத்ததில் சந்தோஷம், நெகிழ்ச்சி.