Blog Archive

Wednesday, March 02, 2016

Independance

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்




ஒருவர்தான் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வைத்தவர்.
அவருக்கு சுதந்திரம் பிடிக்கும். அதனால் என் சுதந்திரத்தை மதித்தார்.

மற்றவர்கள் பாதுகாப்பு என்ற  அன்பின்
வட்டத்தில்   என்னை வைத்துவிட்டார்கள்.

நான் அவர்கள் இஷ்டம் போல்
இருக்க விட்ட நாட்கள்
நினைவுக்கு வருகிறது. தடை விதித்ததில்லை.

அவர்கள் பொறுப்புகளைச் சுமந்து
பாதிப்புகளையும் தாங்கிக் கொண்டார்கள்.
எங்களுக்கும் ஆதரவு தந்தார்கள்.

இப்பவும் சுதந்திரம் வேண்டும்.
தங்கக் கூடு பாதுகாப்பு தான்.
என் மாமரமும் மகிழமரமும்,
பாரிஜாதப் பூக்களும் ,செம்பருத்தியும் இல்லையே .

ஒரு நன்றி இல்லாத   அம்மாவின் புலம்பல்.

18 comments:

ஸ்ரீராம். said...

நெகிழ்ச்சி. சென்ற காலங்கள் இனி வாரா. இனி நடப்பது உங்கள் நலன் கருதியே.. Be cheerful வல்லிமா...

வெங்கட் நாகராஜ் said...

சில சமயங்களில் இப்படி இருப்பதும் உங்களின் நல்லதற்கே வல்லிம்மா.... As Sriram said, "Be cheerful and enjoy life as it comes...."

sury siva said...

அடையாறு ஆலயத்தில் அந்த அனந்த சயனப் பெருமாள்
பாற்கடலில் ஆதி சேஷன் தரும் மெத்தையிலே
ஆனந்தமாக உறங்குகிறாரே !!

சுதந்திரமா?
பாதுகாப்பா ?

சுப்பு தாத்தா.

ராமலக்ஷ்மி said...

அதீத அக்கறை அன்பினால் ஆன கூடு. தங்கள் பாதுகாப்பு குறித்த கவலையால் அமைந்த வளையம். ஸ்ரீராம், வெங்கட் சொல்லியிருப்பதையே வழிமொழிகிறேன்.

ஹுஸைனம்மா said...

மூத்தோர்கள் இளையவர்களைச் சுதந்திரமாக விடுவதன்/விட்டதன் நன்றிக்கடனாகத்தான், தங்களது பொறுப்பில் இருக்கும் மூத்தோர்களைப் பாதுகாப்பாகத் தங்கக்கூட்டினுள் வைத்திருக்கிறார்கள்.
இளையவர்களைச் சுதந்திரமாகத் தன்னந்தனியாகப் பறக்க விட்டதுபோல, நாம் குழந்தைகளை விடுவதில்லையே? முதுமையும் இன்னோர் குழந்தைப் பருவமே!! :-)

Anuprem said...

என்ன செய்வது அம்மா ...பாதுகாப்பு முக்கியம் அல்லவா ..

Ranjani Narayanan said...

நானும் அந்த அம்மாவின் நிலையில் இருப்பதால் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. சுதந்திரமாக இருந்தது ஒரு காலம். இப்போது கட்டுண்டு கிடப்பதும் காலத்தின் கோலம். இரண்டையுமே ஒன்று போல எடுத்துக்கொள்ள முயல்வோம். அப்போதுதான் நம் மனநிலை ஒரே சமமாக இருக்கும்.
கூண்டிலிருந்தாலும் நமக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்
பணம் எண்ண வேண்டாம்.
பில் கட்ட வேண்டாம்,
எது எப்ப டியுன்னு கணக்குப் போடவேண்டாம்.
ஏடிஎம் போய் வரும்போது கைப்பையைப் பிடித்துக் கொண்டு காரில் ஏறும் வரை
பயப்பட வேண்டாம்..
எத்தனையோ நன்மை. நான் அதனால தான் சொன்னேன் புலம்பல் என்று.
நீங்க எல்லோரும் எங்க பசங்க வயசில 40ல இருந்து 50க்குள்ள இருக்கிறதனால் தெளிவா அவர்கள் பக்கம் பேசுகிறீர்கள். ஸ்மைலி போட்டுக்கணும் இந்த மடிக்கணினி
அதெல்லாம் செய்யாது.ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஏன் என் பதிவு அப்டேட் ஆகலை எங்கள் ப்ளாகில்.]]]
உங்க ப்லாக் வழியாகத்தான் மற்றவர்கள் வலைப்பூவைப் படிக்கிறேன் .நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நிஜம்தான் வெங்கட். சென்னைக் கனவை மறக்கப் பார்க்கிறேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி. உங்கள் அம்மாவை அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
சென்னையிலேயே இவர்கள் யாராவது இருந்திருந்தால் இத்தனை
கவலை இல்லை. பரவாயில்லை. நீங்கள் எல்லோரும் பேச்சுத் துணைக்கு இருக்கிறீர்கள்.
குறை ஒன்றும் இல்லை அம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹ்ஹ்ஹா .ஹுசைனம்மா. வரணும் அம்மா. ஒரு நல்லமகளிற்கான லட்சணம்
உங்களிடம் இருக்கிறது.
என் பெண்ணும் இதையே சொல்கிறாள். உன்னை ஒரு நிமிடம் தனியா விடமுடியாது அம்மா. கவலையில் நானே அங்கே வந்துவிடுவேன்.நீங்கள் சொல்லும் அத்தனையும் யதார்த்தம்.
ஒருவேளை தனியாக இருந்தால் இவர்களை மனதில் திட்டி இருப்பேனோ என்னவோ. நன்றி டா,.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா ப்ரேம். , மிக நன்றி மா. புடரிகிறது ஒத்துக் கொள்ளத்தான் மனசில்லை.

வல்லிசிம்ஹன் said...

purikirathu enRu padikkavum Anuradha.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,
ஆமாம் சுதந்திரத்திற்கு குறைவில்லை.
வெளியிலிருக்கும் குளிர் நடையையும் தடைப் படுத்துகிறது. உங்களுக்கு எப்படி இந்தக் கட்டுப்பாடு வந்தது என்று எண்ண வருத்தமாக இருக்கிறது.புரிகிறது.
மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக் கொள்ளலாம். மனன்றி மா. மன அமைதிக்காகாகப்
பிராத்திக்கிறேன்.

ஸ்ரீராம். said...

பணியிலிருந்து ஒய்வு பெறும்போது நிறையப் பேர்களுக்கு 'தான் யாருக்கும் இனி உபயோகமில்லையோ' என்று தோன்றும். தன்னுடைய முக்கியத்துவம் சற்றுக் குறைவதாகத் தோன்றும். சில சமயம் உண்மையாகவும் இருக்கலாம்.


சில வருடங்கள் முன்பு வரை நான் வீட்டில் என்ன பிரச்னை வந்தாலும் என் அப்பாவிடம் யோசனை கேட்பது போல அவரிடம் சொல்வேன். சில சமயம் அவருக்கு அது அவசியமில்லை, சம்பந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரையும் அதில் சேர்த்துக் கொண்டு அவருடைய அனுபவ அறிவின் யோசனையைக் கேட்பேன். இதை வைத்துதான் நான் எங்கள் ப்ளாக்கில் 'சாயங்கலங்கள்' என்கிற கதையையும் எழுதி இருந்தேன்.

தான் யாருக்கும் தேவை இல்லாதவன் என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றி விடக் கூடாது என்கிற எண்ணம் காரணமாகவே அப்படிச் செய்வதுண்டு. இப்போது அவர் யார் பேச்சையும் கிரகித்துக் கொள்ளும் நிலையில் இல்லை என்பது ஒருபுறம் வேதனை. இப்போது அவருக்கு 84 வயதாகிறது.

நீங்கள் சொல்வது போல வீட்டின் நிர்வாகமே தன் கையில் இருந்த காலம் போய், எல்லாவற்றுக்கும் தான் முடிவெடுக்கும் நிலையிலிருந்து நடப்பவற்றை ஒரு பார்வையாளராகப் பார்ப்பது கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. எனக்கும் நாளை அப்படி ஒரு நேரம் வரலாம். இந்த நிலையில் உங்கள் அம்மா, மாமியார் அப்போது இருந்திருக்கக் கூடும். இல்லை, நீங்கள் அவர்களைக் கேட்டுக் கேட்டே அந்தக் காலத்தில் முடிவுகளை எடுத்திருக்கக் கூடும். உங்கள் அனுபவங்கள் எனக்குப் பாடம். நான் தயாராக இருந்து கொள்கிறேன்!

:))))

உங்கள் பதிவு எங்கள் ப்ளாக்கில் அப்டேட் ஆகிறது. அது பார்த்துதான் நானும் வந்தேன்,

வல்லிசிம்ஹன் said...

http://naachiyaar.blogspot.com/2016/03/4.htmlஇந்த லிங்க் அப்டேட் ஆகவில்லை என்று தோன்றியது ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மாமியார் இருந்தவரை மாமியார் தான் எல்லாம் முடிவு செய்வார். அப்போது காலம் வேறு. அதற்கு முன்னால் பாட்டி இருந்தார். அம்மா வீட்டுக்குப் போவதற்குக் கூட பர்மிஷன் வேண்டும்.

அதெல்லாம் கடந்தாச்சு.
இப்பொழ்து பார்வையாளராக இருப்பதில் கொஞ்சம் சிரமம். ஆனால் இதிலும் கவலைகள் குறைந்துவிட்டன.
சென்னையில் இருப்பதை மிஸ் செய்கிறேன்,. அதுதான் விஷடயம். குழந்தைகளைக் குற்றம் சொல்லக் கூடாது.
அப்பாவை நினைத்தால் மிகக் கஷ்டமாக இருக்கிறது. எதிர்காலம் சுபமாக நடக்க இறைவனை மீண்டும் மீண்டும் பிரார்த்திக்கிறேன். மிக நன்றி மா.