Blog Archive

Wednesday, September 09, 2015

நான்கு நாட்கள் விடுமுறை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  அருமையான  பொழுதுகளை   இந்த லேபர்  வார இறுதியில்  சந்தித்தோம்..

பேரனின் தோழர்கள் ஒரு  உற்சாகக் கும்பல். . ஐஸ்க்ரீம் கேக், அந்தப் பதின்ம வயதுக்கான ஆர்வத்தோடு  நொடியில் காலியானது.
பிறகு பாட்டியிடம் விசாரணை.

நீங்க இங்கயே வந்துடலாமே  என்று சொல்லும் கரிசனம்..
படிகள் எதிரொலிக்க கீழே இறங்கி  பேஸ்மெண்டில்  விளையாட்டு. 
பிறகு ஒரே  வண்டியில் அத்தனை நண்பர்களும்  வீட்டுக்குத் திரும்பிய கண்ணியம்.

 இரண்டு  நாள்  கழித்து பெண்ணின் தோழிகள் ஒன்றாகச் சேர்ந்து ,அவரவர் வீட்டில்
  சமைத்த பண்டங்களைப் பகிர்ந்து கொண்ட அருமை. கணவன்மார்களும்
உதவி செய்ய எனக்கு மீண்டும் நல்ல தோழி  கிடைத்தார்.

திருச்சியில் வடக்கு ஆண்டார் வீதியில் இருக்கும் சாவித்திரி..
சகோதர சகோதரிகளைக் கரையேற்றிவிட்டுத் தனியே இருந்தாலும் ,லண்டன், அமெரிக்கா சிங்கப்பூர் என்ரறு பயணம் செய்து கொண்டிருப்பவர்..
நம் வை கோபாலகிருஷ்ணனைத் தெரியுமா என்றும் கேட்டேன். யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அருமையான பெண்மணி. குறையென்று எதையும் நினைக்காமல் 
எல்லோரையும் அன்பால் வளைத்துக் கொண்டவர்.
வாழ்க்கையின் இன்னோரு கோணத்தை நேற்று சந்தித்தேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு வார்த்தை விளையாட்டுக் களும், சிரிப்புமாக
இனிய நேரங்கள் கழிந்தன.

மாலையில் வட இந்திய சகோதரி வீட்டில்  ருத்ர ஹோமம்..

அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைச் சொல்லி முடியாது. வந்திருந்தவர்கள் அனைவருக்கும் 
பிரசாதங்களே இரவு உணவாக அமைந்துவிட்டன.
அண்மையில்  மானசரோவர்,கைலாஷ் மலை என்று பயணம் மேற்கொண்டு திரும்பியவர்
ஆடிப் பௌர்ணமி அன்று தான் பார்த்த அதிசய ஒளி நட்சத்திரப் பொலிவையும்,
அவைகள்  மானசரோவர் ஏரியில்  வந்து குதித்த  ஆச்சரியத்தையும் சொல்லிச் சொல்லி எங்களை
மகிழ்ச்சியில் வீழ்த்தினார்.

https://youtu.be/16gZ-KBesCU   இது அவர் கொடுத்த லிங்க் 

நான்கு  நாட்கள் பூர்த்தி. இன்று  பிள்ளைகள் பள்ளி திரும்பியாகிவிட்டது..

இறைவனுக்கு நன்றி.

10 comments:

ஸ்ரீராம். said...

இனிமையான அனுபவங்கள் என்று தெரிகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சியான சந்திப்பு அம்மா...

Geetha Sambasivam said...

அருமையான பகிர்வு நற்பயனாகக் கழிந்த விடுமுறை

”தளிர் சுரேஷ்” said...

இனிய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

Abi Raja said...

இனிய நினைவுகள் அம்மா!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். சிறியவர்களின் உற்சாகம் எத்தனை நம்மையும் பற்றிக் கொள்கிறது.

ஆறு தம்பதிகளும் அவர்களின் குழந்தைகளும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக நண்பர்கள்.

ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு, டம்ப் ஷராட் விளையாடி
நேரத்தைக் கலகலக்க வைத்துவிட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே தனபாலன். பதிவர்கள் மா நாட்டு வேலைகளுக்கு நடுவில் இங்கேயும் கருத்தை எழுத அன்பிற்கு என் வந்தனங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. எல்லோரும் தமிழர்கள். கொஞ்சம் கூடத் தோழமையைக் குறைத்துக் கொள்ளாமல்
அன்பு கெடாமல் ஒற்றுமையின் பெருமையை அறிந்த குழு. நன்றாக இருந்ததுமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுரேஷ், கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அபி நயா,
நன்றி மா. முதலில் வரவில்லை என்று சொன்னேன். வந்து அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். அன்பில் திளைத்துப் போய்விட்டேன்.
நன்றி கண்ணா.