எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
****************************************************
கதம்பம் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.
தஞ்சாவூர்க் கதம்பம் சொல்லுவாங்க
அது இப்போ என்ன மாதிரி இருக்கோ தெரியாது.
எங்க மதுரை மல்லி சேர்த்துக் கட்டிய கதம்பம்ம்ம்ம்ம்ம்ம்
அப்படியே மனசை உள்ள இழுத்துவிடும்.கதிர் பச்சை, மருக்கொழுந்து,கனகாம்பரம்,தாழம்பூமல்லிப்பூஎல்லாம் சேர்ந்து கனமாக் கட்டி
ஸ்பெஷலாக் கொண்டு வரவங்க பாடவரம் அம்மா.
*******************************
பாப்பானு கூப்பிட்டுக் கொண்டே உள்ள வருவாங்க.
அவங்க வர முன்னாடியே எங்க திருமங்கலம் வீட்டு வாசலே மணக்க ஆரம்பித்துவிடும்.
கூடவெ மருதாணி இலைகளையும் அழகா ஒரு சின்னத் துண்டில் கட்டி எடுத்து வருவாங்க.ரோஜாக்கள் தனியா வரும்.
அந்த ஊரு மண்ணுக்கு அப்படியொரு மணம்.அப்படி ஒரு நேர்த்தி.
காலையில் பள்ளிக்கூடம் போகும் முன்னரேதலையில் வைக்கப் பூ கட்டி கொண்டு வருவாங்க.
பதினோரு மணிக்குத் தயிர், வெண்ணை
கூடைல வித்துக் கிட்டு இருப்பாங்க.
சாயந்திரமானா அங்குவிலாஸ் வீட்டுக்கு எதிர்த்தாப்பில
பிள்ளையார் மரத்தடிலே வேர்க்கடலை கூறு கட்டி வச்சு இருப்பாங்க.ராத்திரி எட்டு மணீக்கு மாட்டு வண்டியில்
உருளைக் கிழங்கு மசலா கொண்டு வருவாங்க..
இது போல ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை.55 வருடங்களுக்குப் பிறகும் என் நினைவில் நிற்கும் மங்கை}}}
9 comments:
அருமை
வெள்ளந்தி மனிதர்கள்.
எங்க ஊர் அங்குவிலாஸ் தானே...?
நம்ம மதுரை மல்லி.......) காதுல தேன் பாய்ஞ்ச மாதிரி இருக்கு... நீங்க பசுமலை எங்க அம்மா டி.வி.எஸ் நகர் புரியுதாம்மா.? நான் இருப்பது????
நன்றி பாரதி.
ஸ்ரீராம், உண்மையாகவே அப்படித்தான் இருந்தார்கள்..இன்னும் இருக்கலாம்.
உங்க ஊர் அங்குவிலாஸ் கோடவுன் எங்க பக்கத்துவீடு.
அவர்கள் எங்களுக்கு அத்தனை பெரிய வீட்டைக் கொடுத்திருந்தார்கள் தனபாலன்.
அவர்கள் வீடும் அவர்கள் கட்டிய பிள்ளையார் கோவிலும்
தெருமுனையில் இருந்தது. Dhanabalan.
உங்க ஊர் அங்குவிலாஸ் கோடவுன் எங்க பக்கத்துவீடு.
அவர்கள் எங்களுக்கு அத்தனை பெரிய வீட்டைக் கொடுத்திருந்தார்கள் தனபாலன்.
அவர்கள் வீடும் அவர்கள் கட்டிய பிள்ளையார் கோவிலும்
தெருமுனையில் இருந்தது. Dhanabalan.
அன்பு அபி நயா.டிவிஎஸ் நகடரிலா இருக்கிறீர்கள். உங்கள் தந்தை டிவிஎஸ் இல் இருக்கிறாரா. மதுரை வந்தால் வருகிறேன் மா.
Post a Comment