நிறைவுடன் கிளம்புகிறேன்
|
Add caption |
வாழ்க்கை தரும் பாடங்களில் ஒன்று நிலையாமை.
உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா பழைய
பாடல்..
மேலும் மேலும் ஒளி தேடுவதுதான் குறிக்கோள்.
முடிவில்லாத ஒளியை அடையும் வரை தேடுதல் உயிர் ஆதாரம்..
துணைவரும் ஆசிரியர்கள் அன்பர்கள் நமக்கு வழிகாட்டுவது
சஞ்சலமில்லாத பாதையை.
அதை ஏற்கும் பக்குவத்தை மட்டும்
அடைய முரண்டு பிடிக்கும் மனம்.
நான் நான் தேடும் வாழ்க்கை மட்டும் நல்லது என்று
எண்ணி ஏமாந்திருக்கிறேன்.
இருந்தும் அகம் என்பது அழியவில்லை.
இனித் தணிய வேண்டிய நேரம்..
அகத்தில் மூளும் சினம்,இயலாமை,சோகம் அனைத்தும் தீயாக
என்னை மட்டும் உருக்குவதில்லை. என்னைச் சேர்ந்து எனக்காக
கவலை கொள்ளும் மற்ற சிறு உள்ளங்களையும் உலுக்குகிறது..
இதோ மீண்டும் பயணம். விமானங்கள். ஏர்போர்ட்டுகள்,
இடம் மாற்றம், மீண்டும் சென்னை.
இறைவன் காப்பார்.
பார்க்கலாம்..
இனிதாக வாழ வேண்டும்
9 comments:
அருமை
சென்னைப் பயணம் தொடங்கி விட்டதா?
அருமை
இனிதாய் வாழ்வீர் சகோதரியாரே
நீ என்றுமே எதையும் செய்வதில்லை.
நீ என்று எதை நீ நினைக்கிறாயோ அது உண்மையிலே நான்தான்.
நான் இயக்குகிறேன். நீ இயங்கும் கருவி.
நீ எதைச் செய்தாலும் என்னையே நினைத்துச் செய்.
அறவழி யில் சொல்லப்பட்ட எல்லா கருமங்களையும்
அதன் பலன் எனக்கு உகந்ததா எனக் கருதாது தொடர்ந்து
செய்க. உனது மகிழ்ச்சி உனது க்ஷேமம் எனது நிர்வாகம்.
சொன்னது நீ தானே கண்ணா ?
பின் மனதில் என்ன இருள் ??
சுப்பு தாத்தா.
எல்லாம் நன்றே நடக்கும் வல்லிம்மா.
ம்ம்ம்ம். நல்லதே நடக்கும். பயணம் இனிதாய் அமைந்திடட்டும்....
நல்வரவு! இந்தியாவுக்கு வருவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றனவா?
இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும். பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் மிக நன்றி. யாரையாவது பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
Post a Comment