எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Saturday, August 22, 2015
Ricki and the Flash a movie with Merryl Streep
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
அம்மாவும் பெண்ணும்.
Add captionஅம்மா தன குடும்பத்துடன் இணைகிற நேரம்.
இந்தப் படத்தை இன்றுதான் பார்த்தேன். எப்பொழுதும் மெரில் ஸ்ட்ரீப் மிகப் பிடிக்கும்.
அவரது டெவில் வெர்ஸ் ப்ராடா ,அவுட் ஆகப் ஆப்ரிகா, கிரேமர் வெர்சஸ் படங்கள். மிகக் கவர்ந்தவை..
எப்பொழுதும் ஒரு மாறு பட்ட பாத்திரங்களில் நடிக்க அவர் அஞ்சியதே இல்லை.
இந்த ஊரில் எத்தனை வயதானாலும் சிக் வடிவத்தில் காண்பிப்பது மேக் அப்பின் மகிமை.
கதைக்கு வருவோம். முதலில் சொல்லி விடுகிறேன். சத்தமான படம். ஏனென்றால் பாட்டுப் பாடுவதற்காக குடும்பத்தை விட்டுப் போன ஒரு பெண்ணின் கதை.
சிறுவயதுக் குழந்தைகளை அப்படியே விட்டு விட்டு தன கனவைத் துரத்திக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வருகிறாள் லிண்டா.
அவள் குணம் அது. மறக்காமல் குழந்தைகளைப் பார்க்கவும் பிறந்தநாட்களுக்குப் பரிசுகளை அனுப்பவும் மறப்பதில்லை.
அதற்குள் அவள் கணவன் மறுமணம் புரிகிறான். அவனது புது மனைவியும் குழந்தைகளை நன்றாக கவனித்து முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.
திடிரென்று ரிக்கி என்கிற லின்டாவுக்கு தொலைபெசியில்ம் அழைப்பு. பெண் அவள் கணவனால் கைவிடப்பட்டதில் மனமுடைந்து இருப்பதாகவும்,லிண்டா வந்தால் நிலைமை தெளிவடையலாம் என்றும் பீட் ,லிண்டாவின் கணவன் சொல்கிறார்,.
மனம் பொறுக்காமல், கையில் பணம் குறைவாக இருந்தாலும் பயணப்பட்டு வருகிறாள் லிண்டா .
அவள் ஏன் நிறையப் பணம் சம்பாதிக்கவில்லை என்பது விளங்கவில்லை.
அவளைக் காதலிக்கும் கிரேக் என்னும் சகபாடகனையும் தன்னை அண்ட விடுவதில்லை.
ஒரு முழு சுதந்திரம் பெற்ற பெண்ணாகத் தன்னை எண்ணவில்லை.
இப்பொழுது பெற்ற பெண் சங்கடத்தில் சிக்கிக் கொண்டாள் என்றதும் பதறி வருகிறாள்..
முதலில் பெண் அவளை ஏற்பதில்லை. நீ விட்டு வீட்டுப் போனாய். இப்போது கணவன் விட்டுப் போய் விட்டான் என்று கசப்புடன் பேசுகிறாள். தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய முற்படுகிறாள் லிண்டா. பெண்ணுடன் பேசி மனதை மாற்றுகிறாள். மகன்களைச் சந்திக்கும் போது முதல் பையனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதைகே கேட்டு
அதிர்ச்சி அடைந்தாலும் காண்பித்துக் கொள்ளாமல் வாழ்த்துகிறாள். மேற்கொண்டு
குடும்பத்துடன் இருக்க வகையில்லாமல் இரண்டாவது மனைவி வந்து விடுகிறாள்.
அவளிடம் வாய்வார்த்தை சண்டையாக உருவெடுக்க மீண்டும் புறப்பட்டு விடுகிறாள். லிண்டா.
தன்னைக் காதலிக்கும் கிரேக் உடன் இணைகிறாள். இந்த சந்தர்ப்பத்தில் முதல் பையனின் திருமண அழைப்பிதழ் வருகிறது. தான் போகப் போவதில்லை என்று கிரேக் இடம் சொல்லும் லிண்டாவின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் கிரேக் தன் கிடாரை விற்று இருவருக்கும் இந்தியானா போக டிக்கெட் வாங்கிவிடுகிறான்.
கிரேகும் இசைக்காகக் குடும்பத்தை விட்டவன் தான்.
இருவரும் தங்களை யாரும் விரும்பாவிட்டாலும் தாங்கள் எல்லோரையும் விரும்பலாம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு திருமணத்துக்கு வந்து பாடி எல்லோரையும் சந்தோஷப் படுத்துகிறார்கள்.
பல இசைக் கலைஞர்களின் வாழ்வில் நடக்கும் விஷயம் தான். விவாகரத்து செய்யாதவர்கள் கிடையாது. மறுமணம் செய்யாதவர்களும் கிடையாது. அதை விரசமில்லாமல் எடுத்த திரைப் படமாக வந்திருக்கிறது. மெரில் ஸ்ட்ரீப் நடிப்பு எப்பொழுதும்போல் பழுதில்லாமல் உருவாகி இருக்கிறது . பாடல்களுடன் இணைந்த படமாக இருப்பதால் தியேட்டரே அதிரும் வண்ணம் சப்தம்.
அது ஒன்றுதான் சகிக்க முடியவில்லை. சிறுவயதினருக்குப் பிடிக்கலாம்.
பார்க்கக் கூடிய படம்தான்.
2 comments:
எந்த வருடம் வெளியான படம்? இசைக்காகக் குடும்பத்தைத் துறப்பதா?
இது ஆகஸ்ட் 7 2015 வெளியான படம் ஸ்ரீராம்
இந்தக்காலத்திய படம். அனேகமாக ராக் இசைப் பாடகர்கள் ஜாதகத்தைப் பார்த்தால்
இது போலப் கதைகள் இருக்கும். இதுவும் ரிக்கி ஸ்ப்ரிங்க்டேல் என்ற பாடகரின்
வாழ்க்கைப் பயணத்தை ஒட்டியது என்று டைட்டிலில் போட்டார்கள்.
Post a Comment