Blog Archive

Thursday, May 28, 2015

Remembering Appa. May 30.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அப்பா 1921- மே  30  பிறந்த நாள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அப்பா  என் முகம் வாடப் பொறுக்காத  ராமலிங்க ஸ்வாமிகள்.
எங்கள் வீட்டிற்கு  என்  டெபாசிட்  பேப்பர்களில் என் கையெழுத்தை வாங்க அந்தத் தள்ளாத வயசிலும் பஸ்ஸில்
வந்துவிடும்  திடம்.
நான் மனம் பொறுக்காமல் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு விட்டு வருவேன். 
ஏம்மா உன்னை  நான் கொண்டு வந்து விடட்டுமா  என்று நையாண்டி செய்வார்.

எனக்கு மட்டும் இல்லை. என் தம்பி  ,பிகாம்  படிக்கும் போது  எதையெல்லாம் நினைவில் வைக்க வேண்டும் என்பதை  கோடிட்டுக் காண்பித்து ,அவன் நடு இரவில் படித்தாலும் தானும் வராந்தாவில் உலவிக் கொண்டிருப்பார்.
அம்மா  சொல்வார். அப்பாவையே  போய் எழுதச் சொன்னால் எழுதிவிடுவார்  .எனக்குச் சிரிப்பே வரும்.

அவரும் அம்மாவும் பின்னிய வலையில் நாங்கள்   பாதுகாப்பாக
சுகமாக  உலவிக் கொண்டிருந்தோம்..

அப்பா என்கிற அசைக்க முடியாத தூணுக்கு ஒன்றும் ஆகாது என்ற எண்ணத்துக்கு
வயிற்று  அலசர்  முற்றுப்புள்ளி.
வைத்தது. அதையும்  அடக்கி வைத்தார் நல்ல பழக்கங்களால்.
அம்மாவின் மேல்பார்வையில்   அப்பா நலமடைந்தார்.

அவர்களின் ராம  நாமம் அவர்களையும் ராம்னருகில் வைத்து
எங்களையும் காப்பாற்றும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  அருமை அப்பா.

Add caption
உனக்கோ அம்மாவுக்கோ  அதிகம் உதவி செய்திராத  உங்கள் பெண்..

5 comments:

ஸ்ரீராம். said...

செல்லப் பெண்ணிடமிருந்து அன்புப் பெற்றோர் பாசத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்த்திருக்கப் போகிறார்கள்? அது உங்களிடம் நிறையவே இருக்கும்.

அப்பாவுக்கு நமஸ்காரங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் தந்தைக்கு அன்பு வணக்கங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

தந்தைக்கு வணக்கங்கள்...

Rathnavel Natarajan said...

வணங்குகிறோம்.

Thenammai Lakshmanan said...

மிகப் பரிவான பகிர்வு.இதைத்தவிர அவர்களுக்கு வேறென்ன வேண்டும் தங்கள் பெண்ணிடமிருந்து :)