எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
இராமன் ஜடாயுவைக் கண்டு பதைக்கும் நேரம்.
சீதையைத்தேடி ராமனும் லக்ஷ்மணனும் வரும் பாதையில் குற்றுயிராகக் கிடக்கும் ஜடாயுவைக் கண்டு வருந்திக் கைகளில் ஏந்திக் கொள்கிறார்கள். அப்போது இவாறு நடப்பதற்கு க் காரணமான வானவர் ராக்கதர் அனைவரையும் அழிக்கிறேன் என்று கோபாவேசப் படுகிறான் ராமன்.
அவன் சினத்தைத் தணிக்க ஜடாயு கைகொள்ளும் வசனங்கள் இவை."ராமா நீயும் இலக்குவனும் சீதையைத் தனியே விட்டு மான் பின்னே போனதல்லவா தவறு. அது அவ்வாறு இருக்க மற்றவர்களை நோவதில் என்ன பயன் என்று பெரியவன் ஸ்தானத்திலிருந்து ராமனைக் கேட்கிறான்.
ராமனுக்கு இந்த வார்த்தைகள் சுருக்கென்று தைத்தாலும் தன நிலை அடைகிறான்.
"வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைத்துக்
கொம்பிழை மானின் பின் போய்க் குலப பழி கூட்டிக் கொண்டீர்
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயுங்காலை
உம்பிழை என்பதல்லால்
உலகம்செய் பிழையும் உண்டோ ??
திரு டிகேசி அவர்களின் "சொல்லமுடியாதல்லவா போய்விட்டது" கட்டுரையில் ஒரு பகுதி.
இவ்வாறு உரைத்த களைப்பில் ஜடாயுவின் உயிர் பிரிகிறது.
|
7 comments:
அருமை. சிறுவயதில் கல்கியில் என்று ஞாபகம், ஓவியத்துடன் இந்தக் காட்சி விளக்கப் பட்டிருக்கும். சித்திர ராமாயணமோ ஏதோ தலைப்பு. அது நினைவுக்கு வருகிறது.
வரணும் ஸ்ரீராம். இது அந்தச் சித்திர ராமாயணத்தின் பகுதியா என்னன்னு தெரியவில்லை. தீபாவளி மலரில் வந்த கட்டுரை. தலைப்பும் ஜடாயு,சீதையை ராவணன்தான் தூக்கிப் போனான் என்று சொல்வதற்குள் உயிர் விடுவதனால் சொல்லாமலேயே போய்விட்டதல்லவா என்கிற தலைப்பு வேற.!!
நன்றி சகோதரியாரே
சரியான கேள்வி தான்...
ஆமாம் தனபாலன். சினம் கொண்டால் காரியம் கெடும் என்று அறிந்த பெரியவர் .தந்தை இடத்திலிருந்து ராமனை வழிப்படுத்துகிறார். அருமையாக இருந்தது படிக்க.
அருமை. நல்ல கேள்வி......
Thanks Venkat.
Post a Comment