எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வாகையும், சுறுசுறுப்பையும் தான்.
வயசு என்ன என்றே சொல்ல முடியாது. முதுகு வளைந்த வயதான அம்மாவும் ...90 ஆவது இருக்கும் தனியே வண்டியைத் தள்ளிக் கொண்டு எதிர் வரிசையில் இருக்கும் கோ ஆபரேடிவ்க்கு வருவார் .நிதானமாக விலை பார்த்துப் பழங்கள், காய்கறி, வைன், ப்ரெட், SPINACH ,முட்டைகள் என்று ஒருவருக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு அளவான பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வெளியே வருவார். அங்கே ஏற்கனவே காத்திருக்கும் இன்னொரு பாட்டியோடு வரிசையாகக் கிடக்கும் BENCH ஒன்றில் உட்கார்ந்து ஒரு பானத்தை அருந்தியபடி நேரம் செலவழிப்பார். தனக்கான TRAM வந்ததும் CIYAO சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்.
இரண்டாவது விஷயமாக ஆச்சரியப்பட்டது, இந்த ஒல்லியான ஸ்லிம் தேகக் கட்டு. இதோ இப்பொழுது நான் மகனுடன் நடை ப் பயிற்சிக்குப் போய் வரும்போது இன்னொரு 60 வயது அம்மா தன மகனுடன் சைக்கிளில் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் போக்குவரத்து அவ்வளவாக இருக்காது. தேகப் பயிற்ச்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் வெய்யில் வந்த அடுத்தகணம் வீ தியில் இருப்பார்கள்.
மூன்றாவது அதிசயம். இந்த இளம்பெண்களின் தேகவலிமை.. அழகு.
முகத்துக்குப் போட்டுக் கொள்ளும் அளவான அழகான அலங்காரம்.
டிப் டு TOE கச்சிதமாக இருக்கிறார்கள்.
முதல்வாரம் பக்கத்திலிருக்கும் பூங்கா ஒன்றுக்கு போயிருக்கும்போது பிறந்து மூன்று நான்கு நாட்கள் இருக்கும் குட்டிப் பாப்பாவை அப்பாக்காரர் தன உடம்போடு கட்டிய துணியில் புதைந்தபடிக் கொஞ்சிக் கொண்டே வர,பக்கத்தில் அந்தக் குழநியைப் பெற்ற அம்மா தன ஒன்னரை வயசுக் குழந்தையைத் தளிர் நடையோடு அழைத்துவருகிறாள்.!!!!
பெண்களில் 75% வேலைக்குப் போகிறார்கள். ஐந்து நாட்கள் நல்ல உழைப்பு. மற்ற இரண்டு நாட்கள் வெளியில் சாப்பாடு. நடை. தோழர்களோடு சந்திப்பு, பியர் பார்ட்டி என்று போகிறது.
ஒன்றே ஒன்று பிடிக்கவில்லை. சகட்டுமேனிக்கு எல்லோரும் புகை பிடிக்கிறார்கள் . ஒரு சில பெண்களைத் தவிர,. TRAM ஏறுவதற்கு முன் பார்த்தால் அந்தத் தண்டவாளமே தெரியாத அளவு சிகரெட் துண்டுகள் இருக்கும்.:(
நல்ல உயர்தரக் கவனிப்பு எல்லோருக்கும் அரசாங்கம் தருகிறது பள்ளிப் படிப்பு இலவசம்.
படிக்கும் குழந்தைகள் படிக்கின்றன. படிக்காதவை வேலைக்குப் போகின்றன. 16 வயதுக்கு மேல் சுதந்திரம் தான்.
அம்மா அப்பாவை அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்
கிறார்கள்.
கிறார்கள்.
பெண்கள் அறுபது 70 வயதிலும் திருமணம் செய்து கொள்
கிறார்கள். விவாகரத்தும் செய்கிறார்கள்
கிறார்கள். விவாகரத்தும் செய்கிறார்கள்
மூத்த தாரத்தின் பையனும் வீட்டோடு இருந்து தன சித்தியின் குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறான். அந்தச் சித்தியும் அவனைக் கவனித்துக் கொள்கிறாள் .
மொத்தத்தில் சுவிஸ் மங்கையர். அழகு,வலிமை ,திடம் கொண்டவர்கள் மற்ற ஊர்க்காரர்களோடு ஜாக்கிரதையாகப் பழகுவார்கள்.