எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
அப்பா என்ற அற்புத மனிதருக்கான திதி கொடுத்து முடித்தாகிவிட்டது. அவர் தன் தந்தை தாய்க்கு எப்படி ஈடுபாடு காட்டி சிரத்தையாக சிராத்தம் செய்தாரோ அதைப் போலவே தம்பியும் செய்கிறான். வாழ்க அவன் குடும்பம். நாங்கள் திண்டுக்கல்லில் இருக்கையில் சேதி வந்து தாத்தாவின் அந்திம கிரியைகளைப் பழங்கானத்தத்தில் முடித்துவிட்டு மீண்டுவந்தோம். குல வழக்கப்படி 12மாதங்களுக்கு திதி கொடுக்கவேண்டும். மாசிகம் என்று பெயர். அப்பா அந்த நாட்களில் மதுரையிலிருந்து வைதிகரை வரச் சொல்லிக் காத்திருப்பார். உள்ளூரில் நாகல் நகரில் இருந்த ஒரு பள்ளி ஆசிரியரை சாப்பாட்டுக்கு வரச சொல்லி முதல் நாள் போய் அழைத்துவிட்டு வருவார். அம்மா விறகடுப்பில் முழு சிராத்த சமையலையும் முடித்துவிடுவார். எங்களுக்கு பள்ளிக்குப் போகும் முன் உடுப்பி ஓட்டலில் இருந்து இட்லி சட்டினி வந்துவிடும். கையில் பழையது தயிர் கலந்த அமிர்தம். டிபன் டப்பியை அம்மா கொடுக்கும் பொதே சாயந்திரம் வந்து பட்சணங்கள் சாப்பிடலாம் சரியா என்று சொல்வதே அருமையாக இருக்கும். அந்த நாட்களில் அவர்கள் காட்டிய சிரத்தை தான் எங்களைக் கரையேற்றியது என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. அந்தப் பெற்றோர்களுக்குத் திதி கொடுக்கும் பேறு பெற்றவனாகிறான் தம்பி. அப்பா நீ ஊட்டிய பருப்பு சாதத்துக்கும், உழைத்து எங்களுக்குச் சேர்த்து வைத்த செல்வம்,புண்ணியம் இவைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இரண்டு சொட்டுக் கண்ணீர் முடியும். எங்கே இருந்தாலும் எங்களைக் காக்கும் வலிமை உனக்கு உண்டு அப்பா.
12 comments:
எங்கள் வணக்கங்களும் அப்பாவுக்கு!
”// சாயந்திரம் வந்து பட்சணங்கள் சாப்பிடலாம் சரியா என்று சொல்வதே அருமையாக இருக்கும்.//
ஆஹா.. எனக்கும் இந்த அனுபவம் உண்டு மேடம்.
அப்பாவின் நினைவில் அருமையான பதிவு.
/
அப்பா என்னும் அருமருந்து தலைப்பே அருமை.
அப்பா என்று சொல்லும் போதே மனதில் வந்து நிற்கும் கனிவு நிறைந்த முகம். சஞ்சலங்களை போக்கி மனதுக்கு உற்சாகம், பலம், அன்பை தரும் அருமருந்து தான்.
அருமையான நினைவலைகள்.
பெரியோர்களின் ஆசீர்வாதம் என்றும் நம்மோடு இந்த வகையில்தான் வருகின்றது.
தந்தையின் நினைவுகள் நெஞ்சில் நிற்பவை
மகள்கள் மனதில் அப்பாக்களுக்கென்று இருக்கும் தனியிடத்தை யாராலும் நிரப்ப முடிவதில்லை..
அருமையான நினைவுகள். பகிர்வுக்கு நன்றி. அப்பாவின் ஆசீர்வாதம் என்றும் கிடைக்கும்.
படித்து முடித்து என் அப்பாவின் நினைவில் ஆழ்ந்துவிட்டேன்.
தந்தையின் நினைவுகள் என்றென்றும்
மனதில் தேங்கி நிற்பவை அல்லவா
அவர்களின் ஆசீர்வாதம் என்றும் நம்மை வழிநடத்தும் அம்மா...
அருமையான பதிவு.அப்பாவின் ஆசீர்வாதம் என்றும் கிடைக்கும்
நினைவுகள்.......
தொடர்ந்து அவர் ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கட்டும்....
Post a Comment