கோதைத் தாயார் |
வென்று பகை கெடுப்பாய் கிருஷ்ணா |
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி |
கன்று குணிலா எறிந்தாய் |
பொன்றச் சகடம் உதைத்தாய் |
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் |
அன்று இவ்வுலகம் அளந்தாய் |
பூமா கோதை ஆண்டாள் சரணங்களுக்கு போற்றி பாடுகிறோம்.
கழல் போற்றி |
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.//
******************************************************
இதோ வந்துவிட்டான் கிருஷ்ணன். சீரிய சிங்காதனத்திலும்
அமர்ந்து விட்டான்.
கண்கள் நிறைய கண்ணனைக் காண்கிறாள் ஆண்டாள்.
தன் தந்தை திருத்தந்தை பெரியாழ்வார் திருமாலைக்
கண்ட மறுகணம் கைத்தாளங்களைக் கொட்டிக்கொண்டு பல்லாண்டு பாடியது
நினைவுக்கு வந்துவிட்டது அவளுக்கு.
மனக் குகையிலிருந்து பிரவகிக்கும் பக்தி மேலீட்டில் கண்ணனைப் போற்ற ஆரம்பிக்கிறாள்.
வாமன அவதாரத்தில் ஆரம்பித்து மூவுலகம் ஈரடியால் முறைதிறம்பா வகை முடிய, மஹாபலிக்கு அருளீய அடிகள் அல்லவா. அந்தசரணங்களுக்குப்
போற்றி சொல்கிறாள்.
உடனே கானகம் எங்கும் தன் அருமைச் சீதையைத் தேடிக் கல்லிலும் முள்ளிலும் நடந்த அடிகள். சேதுபந்தனம் முடித்து இராவணன் தலைகளைக் கொய்து வென்ற அடிகளைப் போற்றுகிறாள்.
வெற்றி கொண்ட வீரராகவனே போற்றி.!!!
கண்ணன் குட்டிக் குழந்தை. அவனை அழிக்க அனுப்பப் பட்ட அசுரர்களில்
ஒருவன் சகடாசுரன்
கோபர்கள் இடம்பெயர்ந்து பிருந்தாவனத்தை அடைந்துகொண்டிருக்கும் போது யசோதை குழந்தையைப் பத்திரமாக வண்டிக்கடியில்
படுக்கவைத்திருக்கிறாள்.
அந்தவண்டியே அசுரனாக மாறும் என்று கண்டாளா.
கண்ணன் கண்டான். தன் பாதங்களால் உதைத்தான்.
உருண்டான் அசுரன் .உயிர் இழந்தான். மோக்ஷம் அடைந்தான்.
கண்ணன் பாதம் பட்டபிறகு வேறு புண்ணியம் வேண்டுமா என்ன.
அடுத்தாற்போல வந்தவன் கன்று ரூபத்தில் வந்து
அனைவரையும் மிரட்ட ஆரம்பிக்கிறான்.
கோகுலமே அல்லோலகல்லப் படுகிறது.
வந்தான் கண்ணன். கன்றின் காலைப் பிடித்தான் சுழற்றினான்
வீசினான். மாண்டான் அந்த அசுரன்.உன் பாதங்களை அகற்றி வைத்து நீ நின்ற கோலம்தான் என்ன அழகு கண்ணா. இடுப்பில் கைகளை வைத்த அழகுதான் என்ன.
நாங்கள் உடுப்பியில் பார்க்கிறோம் அந்த அழகைபண்டரிபுரத்தில் பார்க்கிறோம் விட்டலனாக.
இந்திரனைப் பகைத்ததில் வந்தது மாமழை.
குன்றம் ஏந்திக் குளிர் மழையிலிருந்து
தன் மக்களைக் காத்தான் .கழலைப் போற்றத்தானே வேண்டும்.
கோவர்த்தன கிரிதாரி நீ வாழி.!!
தன்னைப் பகையோடு பார்ப்பவர்களை வெல்வதற்கு
வேலும் வைத்திருக்கிறான். மாலின் ஆயுதங்கள்
கோடானுகோடி. வேலை எறிந்துதான் குவலயாபீடத்தை
வீழ்த்தினான்.
மாமனுக்கும் மருமகனுக்கும் வேல் நல்ல துணை
வினையைத் தீர்க்கிறதல்லவா.
இவ்வளவு பகைவர்களையும் வெற்றிகொண்டவனே. ஒன்றும் அறியாச் சிறுமியர் நாங்கள்.
எங்களையும் காக்க வேண்டும் நீ. உன் சேவகம் வேண்டி வந்திருக்கிறோம்.
உன் பாதங்களுக்குச் சேவை செய்ய அருள்வாய் பெருமானே
என்று வேண்டி நிற்கிறாள் நம் கோதை.
கழல்கள் சரணம் சரணம் சரணம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
12 comments:
கழல்கள் (கடைசிப்படம்) கண்ணில் ஒற்றிக்கணும் போலிருக்கு!
அடடா..... என்ன அழகு!!!!!
வழக்கம்போல் பதிவு அருமை!
இதோ வந்துவிட்டான் கிருஷ்ணன். சீரிய சிங்காதனத்திலும்
அமர்ந்து விட்டான்.
சிறப்பாய் கண் எதிரே கண்ணன் காட்சிக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்..
படங்கள் அருமை.
நல்ல பாடல்....
ஆமாம் கழல்கள்னு கூகிளில் போட்டதுமிந்தப் படம்தான் கண்ணில் பட்டது.
நன்றிப்பா.
வரணும் இராஜராஜேஸ்வரி. நாமும் அங்கே போய்த் தரிசிக்க ஆசையாக இருக்கிறது. நல்ல பாசுரம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி சமுத்ரா.
கண்கள் நிறைய கண்ணனைக் காண்கிறாள் ஆண்டாள்.//
நாங்களும் கண்கள் குளிர நீங்கள் பகிர்ந்த கண்ணனை கண்டு மகிழ்ந்தோம்.
நன்றி அக்கா.
அழகான பாடலுக்கு அருமையான விளக்கம். ‘பொன்றச் சகடம் உதைத்தாய்’ படம் எப்படிதான் தேடிப் பிடித்தீர்களோ:)? சிறப்பு. நன்றி.
/அறியாச் சிறுமியர் நாங்கள்.
எங்களையும் காக்க வேண்டும் நீ./
வேண்டிக் கொள்வோம் நாமும்.
அன்பு கோமதி, இன்னும் எத்தனையோ எழுத வேண்டும்.
வருகைக்கு மிக நன்றிமா.
பல அர்த்தங்கள் மறந்தவிட்டன:)
அன்பு ராமலக்ஷ்மி, கூகிளில் பாடலின் வரியை அளித்தாலும்,
ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் படங்கள் மிக மிக அற்புதம்.அவர்களுக்குத்தான்
என் நன்றிகள் செல்லவேண்டும்.
கடைசி படம் மனதை மிகவும் கவர்ந்தது அம்மா...
KaNNan saraname saranam Dhanabalan. thanks ma.
Post a Comment