ஆதிமூலமே |
பாதங்களில் சேவை செய்ய அருள் |
அமிர்தம் கொடுத்தவனே |
த்ரௌபதி மானம் காத்தாய் |
குசேலனுக்குத் தோழன் |
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்
*********************************************************
கோடானு கோடி தேவர்கள். அத்தனை பேர் , கவலை என்று ஒன்று வரும்போது அழைக்கப் படுபவன் கண்ணன் என்கிறாள் கோதை.
நினைத்த கணத்தில் கூர்மாவதாரம் எடுத்து மந்திரமலையைதாங்கி அதன் பாரம் சுமந்தவன்,. குழந்தை துருவனுக்கு அருள் செய்தவன். துரௌபதியின் மானம் காக்க காத்து நின்றவன்.
அழைக்கின்ற யானையின் துயர் தீர ,கருடனையும் தூக்கிக் கொண்டு ஓடோடி வந்தவன்.
பூபாரத்தை ஒழிக்க பாபம் புரிந்தவர்களின் பாபங்களை நீக்க
அவதாரங்கள் செய்தவன்.
அம்மா நப்பின்னைப் பிராட்டியே அவன் பாதம் பணிந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம். நீயும் அவனை மாயத்துயி லிலிருந்து எழுப்பி
அவனுக் கு வேண்டிய உபசாரங்களைச் செய்து எங்களை மகிழ்விப்பாய் பாவாய்..
மாதா கோதா எங்கள் துயர் தீரப் பாடல்கள் இசைத்து எம்பெருமானைச் சென்றடந்தவளே.
உனக்கு ஒரு பல்லாயிரம் பாடுகிறோம். எங்களைக் காப்பாய்.
உன் தாள் சரணம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
14 comments:
பறந்து வந்து 'யானையின் துயர்' தீர்த்தவனே!!!!!
க்ரேட்!
சரணமடைந்து விட்டால் சகலத்தையும் அவனே பார்த்துக்குவான், இல்லையா ?
அப்படித்தான் நம்புகிறேன்.துளசி.
சரணாகதி அடைந்த பிறகு கவலையை விடவேண்டும். கஷ்டம் தான்.:)
மங்கையவள் குரல்கொடுத்தாள்
அவள் மானம் காத்தாய்
போதகம் கதறுகையிலே
வானின்று தோன்றி
புகழுயிர் காத்தாய்- கண்ணா மாதவா
என்னுடனே இருப்பாயென
என் செயலை உன் துணையுடன்
செயலாற்ற முயல்கிறேன்....
அருமையான பதிவு அம்மா...
இன்று என் தளத்தில்...
http://ilavenirkaalam.blogspot.com/2013/01/blog-post.html
நல்வரவு மகேந்திரன்.அவனில்லாமல் நம்மால் எதைச் சாதிக்க முடியும்.அதை வெகு அழகாக் எடுத்தியம்பி இருக்கிறீர்கள்.நல்ல தமிழ். நன்றி மா.
உனக்கு ஒரு பல்லாயிரம் பாடுகிறோம். எங்களைக் காப்பாய்.
உன் தாள் சரணம். //
அருமை.
சரணாகதி அடைந்தவர்களை காப்பது அவன் பொறுப்புதான்.
சித்திரங்களும் விளக்கமும் அருமை வல்லிம்மா.
/உனக்கு ஒரு பல்லாயிரம் பாடுகிறோம். எங்களைக் காப்பாய்.
உன் தாள் சரணம்./
சரணம்.
"அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்..."
கஜேந்திரனைக் காத்தவர், அப்புறம் முதலையின் பசி தீர்க்க என்ன செய்திருப்பார்?!
முதலைக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டியே கஜேந்திரனைக் காக்க வந்தார். ஒரே சமயத்தில் இரண்டும் நடந்தது. கஜேந்திரனையும் காத்தாச்சு, முதலைக்கும் மோக்ஷம் கொடுத்தாச்சு! :))))
இங்கே ஸ்ரீரங்கத்தில் சித்திரா பெளர்ணமி அன்று கஜேந்திர மோக்ஷம் நடைபெறும் முடிஞ்சால் இந்த வருஷம் கிட்டப்போய்ப் படம் எடுக்கணும். பார்ப்போம்.
ஸ்ரீராம்,
உங்கள் கேள்விக்குக் கீதா பதில் சொல்லியச்சுமா.
இல்லாட்டால் நாம் அந்த முதலையை க்ரோகடைல் ஃபார்ம்ல சேர்க்கலாம்னு நினைச்சேன்:)
நன்றிமா கீதா.
சித்ரா பவுர்ணமிக்குப் பார்த்துப் படமும் எடுத்து விடலாம்.
வல்லிம்மா... நீங்கள் சொல்ல நினைத்த பதில் படித்து சிரித்து விட்டேன்!
அன்பு கோமதி,மிக நல்ல பாசுரம் இது
கடவுளின்பாதங்களின் மகிமை தான் நம்மைக் காப்பாற்றி வருகின்றன.
அவன் சரணங்கள் நம்மைக் காக்கும் எப்போதும்.
அன்பு ராமலக்ஷ்மி,நன்றிமா.
அருமையான பதிவு நன்றி சகோதரியாரே
Post a Comment