இந்த வருடத்தின் கடைசி நாள் நாயகனுக்கு அர்ப்பணம். அவன் கோவில் காப்பானை
விளிக்கிறாள் ஆண்டாள். வாயில் காப்பா னைத் தயவாய்க் கேட்டுக் கொள்கிறாள். நேற்றே எம்மைப் பார்த்து பேட்டி அருளுவதாய்ச் சொல்லி இருக்கிறான். ஐயா எங்களை உள்ளே விடு. தூயோமாய் வந்தோம். அவனைத் துயி லெழுப்பி வணங்கித் தாள் சரணடைந்து அவனருள் பெற நீங்கள் தான் வழி அருளவேண்டும்.
அன்பான உங்கள் காக்கும் கரங்களால் வாயில் கதவுகளைத் திறவுங்கள் என்று பிரார்த்திக்கிறாள். அடைய வேண்டியது பெரிய பரிசல்லவா. அதற்கு அடியார்களின் அருளிருந்தால் தானே அவனை அடைய முடியும். வில்லிபுத்தூர் திருவே எம் ஆண்டாளே உன் அடக்கமும் மாபக்தியும் எங்களையும் வந்தடைய வேண்டும் தாயே..
15 comments:
அருமையான பாசுரம். என் அம்மா பாடுவது போல சட்டென்று வந்து போனது.
புது வருடத்தில் நலமும் அமைதியும் ஓங்கட்டும்.
ஆஹா அக்காரவடிசில்!
அர்ப்பணம் சிறப்பு அம்மா...
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
அருமை வல்லிம்மா
புத்தாண்டு வாழ்த்துகள். :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.
அன்பு துரை,
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
ஆமாம் ஸ்ரீராம் இன்று அக்காரவடிசல் செய்து பகவானுக்குச் சமர்ப்பிக்கணும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பு தனபாலன்,நன்றிமா. நல்ல புத்தாண்டாக அமையட்டும்.
அன்பு தேனம்மா நன்றி கண்ணா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பு கரந்தை ஜெயக்குமார்,நன்றிமா. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அன்பு கோமதி, சாரும் நீங்களும் குழந்தைகளும் அவர்கள் குடும்பமும் நல்ல ஆரோக்கியத்தோடு செழிப்புடன் இருக்க வேண்டும். மெயிலில் உங்கள் தொலைபேசி எண் அனுப்ப முடியுமா.
அருமையான பாசுரம்.....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் வல்லிம்மா...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.
Post a Comment