இந்தக் கதைக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தம் இல்லை |
தாமிரபரணி என்னும் பொருனை |
அதென்ன நெல்லைக் குசும்பு என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே என் கேள்வி.
நெல்லை என்பதில் எத்தனையோ ஊர்கள் அடக்கம்.
நத்தங்கள் ,பட்டிகள்,கோட்டைகள்,பேட்டைகள்,புரங்கள்,நாடுகள் என்று வேறு வேறு
இடங்கள் நதிதீரங்கள் என்று பல்வேறு வசிக்கும் இடங்கள்.அந்தந்த
ஊருக்கான வாசங்கள்,வசனங்கள் ,கேலிகள், சொலவடைகள்,பழமொழிகள்
என்று திருநெல்வேலிக்குள்ளேயே எத்தனையோ பிரிவுகள்.
அந்த மாவட்டத்திலியே இவ்வளவு பேச்சு இருக்குமானல், பொத்தாம் பொதுவாக
திருநெல்வேலிக்காரர்களுக்கே குசும்பு ஜாஸ்தி என்று ,ஒரு அரட்டை ஆரம்பித்தது.
சொன்னவர் எந்த ஊர் என்று சொல்ல நான் ஆசைப்படவில்லை:)
சமீபத்தில் ஒரு திருமணம்..
எங்க ஊர்க்காரர் வீட்டுப் பெண்ணுக்கும் இன்னும் வேறு ஜில்லாக்காரரின் பையனுக்கும் மணம் பேசி முடித்து அழகாகத் திருமணம்
நடந்து முடிந்தது.
சாயந்திரம் திருமண வரவேற்பு. அதற்குள் சுகமாகத் தாம்பூலம் போட்டுக் கொண்டு சுற்றத்தாருடன் பழங்கதைகள் ஆரம்பித்தது.
என் வயதொத்தவர்கள், என்னை விட வயதான மாமாக்கள்,மாமிகள்
என்று அன்பான உறவினர்கள்.
சீர்வரிசைகள் நன்றக வைத்திருந்தார்கள் இல்லையா.
ஆமாம் சாமர்த்தியம் ,சமத்து இரண்டும் கலந்த தம்பதிகள் .
வெகு அழகாக வரிசைப் படுத்திப் பெண்ணைக் கவரும் வகையில் இருந்தது.
காவேரி தீரம் சாமர்த்தியத்திற்கு கேட்பானேன்.கலை நுணுக்கத்தோடு பிறந்தவர்கள்.!!!
என்னது காவேரி தீரமா.அவர்கள் அமெரிக்கா போய் செட்டில் ஆகி 35 வருடங்கள் ஆகிவிட்டதாமே.
அதனால என்ன மண்வாசனை போகுமா. காவேரி காவேரிதான்.
அதனால் என்ன எங்க தாமிரபரணியில் இல்லாத கோவில்களா.
அங்கே பிறக்காத இசையா, தமிழ் வளமா,அதுக்கும் தனி வாசனை இல்லையா.
அல்வாவை விட்டுட்டியே:)என் சின்ன அறிவுக்கு எட்டினதை எல்லாம் சொன்னேன்.
குசும்பை விட்டுட்டியே என்று ஒரு குரல்.
அது என் பெரியப்பா பெண்ணின் குரல்தான். அவளுக்கு பெண் வீட்டிலும்
உறவு உண்டு போலிருக்கு.
என்ன நீ, நம்ம ஊரையே விட்டுக் கொடுக்கிறியே?
எப்போ நாஆன் ன்ன்ன்ன்னு ப்ரு காஃபி காஜல் அகர்வால் மாதிரி இழுத்தாள்.
கும்பகோணத்துக்காரரைக் கல்யாணம் செய்தேனோ அப்பவே
மாறிட்டேன்.
அடப்பாவி என்ன குசும்பைக் கண்ட நீ.
வாயில்லா ஜீவன்கள் திருநெல்வேலிக்காரர்கள்.வெகுளிகள்.
ஆங்க் !அசடுன்னு கூடச் சொல்லலாம்.
ஏன் இந்தக் கொலவெறி உனக்குனு நான் அவளைத் திருப்பிக் கேட்க
அப்டிக்கேளு சொல்றேன்னு ஆரம்பித்தாள்.உனக்குப் பெண்ணின் அம்மா என்ன உறவு.
அத்தையின் பெண். அவள் வீட்டுக்காரர்? அவரும் பக்கத்து ஊர்தான் மேலசேவல்.
உங்களுக்கும் தாமிரபரணி வாய்க்கால் சம்பந்தம் உண்டு இல்லையா.
ஆஹா அமோகமா உண்டு.
அதுதான் உங்களுக்குக் குசும்பும் உண்டு என்றேன்.
என்ன நடந்தது. சுத்திவளைக்காத........ உங்க காவிரி மாதிரி.!!!!!!!!!
அவ வளைச்சாலும் ஸ்ரீரங்கனைத்தான் வளைச்சுப் போட்டு இருக்கா.
ஓ,அவனை வளைக்க எங்க பக்கத்து ஊர் ஆண்டாள் இருக்காள்.
சரி பெரிய தலைகளை விடு.
இன்னிக்குக் காலை என்ன நடந்தது தெரியுமா
என்ன? நான் ஊஞ்சல் போதுதான் வந்தேன்.
அதுக்கு முன்னாடி அப்பக் கூடை கொண்டுபோய் வைத்து மாப்பிள்ளையை ஊஞ்சலுக்கு அழைக்கணுமா இல்லையா.
ஆமாம்.எங்களுக்கும் அதெல்லாம் தெரியும்.
எத்தனை பேர் வந்தார்கள் தெரியுமா
எத்தனை?
12 பேரு.!!
அத்தனை பேருக்கும் ரவிக்கைத் துணி,தாம்பூலம் எல்லாம் கொடுத்து முடிக்கவே நேரமாச்சு,. இதற்குள்ள உங்க அத்தை பெண் நாணிக் கோணி
மாப்பிள்ளையின் கண்ணில் மை இடறேன் பேர்வழின்னு ஒரு முகமூடித் திருடன் மாதிரி அவர் கண்ணில கரியாத் தீட்டிவிட்டாள்.
அவருக்கோ சொல்லமுடியாத கோபம்.
வாட் இஸ் திஸ் மா. இந்த முகத்தோட எப்படி நான் ஃபன்க்ஷனை அட்டெண்ட்
பண்றது?
என்று படபடத்தான்..உங்கள் கல்யாணப் பெண்ணாவது சும்மா
இருந்திருக்கலாம்.
தன் கூட நிற்கிற தோழியிடம்
ஏதோ சொல்லிச் சிரிக்கிறாள்.
அவன் முகம் இன்னும் சிவந்துவிட்டது.
என்ன இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்னால்தான்
வந்து இறங்கி இருக்கான். இந்த சென்னை வெய்யிலே ஒத்துக்கவில்லை.
சிம்பிளா ஒரே நேரத்தில் ரிசப்ஷன் கல்யாணம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டானாம்.
உங்க அத்தைபொண்ணு அதெல்லம் வேண்டாம் ,இதென்ன
டெல்லிக்கல்யாணமா எல்லாம் வேற வேறயாத்தான் நடக்கணும். விவாஹாவோட ஏழு புடவையும் அவ கட்டிக்க வேண்டாமான்னு
சொல்லிட்டாளாம்.
பார்த்தியா, இங்க யாரு ஆட்சி நடந்திருக்குன்னு. இவர்கள் அவள் சொன்னதுக்கெல்லாம் சரின்னுட்டாளாம். எல்லாம் பெரிய மனுஷத்தனம் தான்.
இதில் குசும்பு எங்க இருக்குனு நான் யோசிக்க,
இன்னோரு பக்கம் ஒரேசிரிப்புச் சத்தம் காதில் விழுந்தது.
மாப்பிள்ளை பெண் இன்னும் அவர்கள் தோழர்கள் தோழிகள் என்று ஒரே அட்டகாசம்.
மாப்பிள்ளை முகத்தைப் பார்த்தேன்.
பாதி கறுப்பு பாதி வெள்ளையாகத்தான் இருந்தான். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கல்யாணப் பெண், தன் கையிலிருந்த ஈர டிஷ்யுக்களை வைத்து அவன் முகத்தைச் சீர் செய்து விட்டாள்.
ஓ,எனக்கு அந்த வேஷமும் பிடித்திருந்தது. ஆஃப்டர் ஆல்
ஒரு நாள் கொண்டாட்டம். இதில் கோபிக்க என்ன இருக்கு
இல்லை டார்லிங் என்று அந்தப் பெண்ணிடம் சொல்ல அவளும்
அப்சல்யூட்லி'' என்று சொல்லிவிட்டுத் தன் குஞ்சலம் முடிந்த
கூந்தலைக் கழற்றிவிட்டு அந்தச் சின்ன முடியில் ஒரு ரோஜாப்பூவை மட்டும் வைத்துக் கொண்டாள்!!!!!
முதல்படம் ஒரு சாது மாப்பிள்ளையின் போஸ்:) மை தெரிகிறதா. இது என் குசும்பு:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
31 comments:
//ஆஃப்டர் ஆல் ஒரு நாள் கொண்டாட்டம். இதில் கோபிக்க என்ன இருக்கு//
அதானே.. காலத்துக்கும் நினைவில் நிக்கப்போற இனிமையான நிகழ்வு இல்லையோ :-))
ரஸமான அனுபவம். கோயமுத்தூர்காரர்களுக்குத் தான் குசும்பு ஜாஸ்தின்னு கேள்விப்பட்ருக்கேன். நெல்லைக் குசும்புன்னு உண்டா என்ன?
எல்லா ஊர் பேர் சொல்லியும் குசும்பை இணைப்பார்கள்! அதுவே தனிக் குசும்பு! பட்டுக்கோட்டை வேலை என்று ஒன்று விசேஷமாகச் சொல்வார்கள். மற்றபடி மதுரைக் குசும்பும் பிரபலம்தான்!
/ஆஃப்டர் ஆல்
ஒரு நாள் கொண்டாட்டம். இதில் கோபிக்க என்ன இருக்கு
இல்லை டார்லிங்/
புரிதலில் தொடங்கியிருக்கும் வாழ்க்கைப் பயணம் என்றென்றும் இனிக்கட்டும்:)!
காட்சி கண் முன் விரிகிற மாதிரி அழகாக எழுதியுள்ளீர்கள்.
---
சொல்லிட்டுப் போகட்டும் விடுங்கள்:)! நையாண்டியில் நம்மை மிஞ்ச முடியாது என்றே இருக்கட்டும். எனக்கு அத்தனை வராது என்றாலும் ரசிப்பேன். அதெப்படி சொல்லியே கொடுக்காம சின்னஞ்சிறுவர்களும் அதில் வல்லாள கண்டர்களாக இருக்கிறார்களோ தெரியாது:))!
ஹாஹா ஹா ஹா..
அப்ப கோயமுத்தூர் குசும்பு மதுரைக் குசும்பு, நியூஸி குசும்பு எல்லாம் கூட உண்டா:-))))))
கல்யாண அரட்டை பிரமாதம்.....
Cute couple...:) People say "Kovai kusumbu" about me... I didn't know about "nellai kusumbu"...:)
Just kidding amma... Nice post
hope your eye treatment is done and you're fine... Take care
வரணும் சாரல். நல்ல அனுபவம் அந்தக் கலாய்த்தல் கல்யாணம்
வரணூம்கணேஷ். குசும்பு மனிதர்களின் பொது சொத்து:)
நெல்லைக் குசும்புக்கூ நம்ம கி.ரா சார் பேசுவதைக் கேட்டால் புரியும்:)
ஆமாம் ஸ்ரீராம். நானும் பட்டுக்கோட்டை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன் பாட்டி அந்த மாதிரி ஒரு குடித்தனக்காரரிடம்
நில சம்பந்தமாக அனுபவப் பட்டு இரூக்கிறார்;0)
ஆமாம் ராமலக்ஷ்மி.சின்னக் குழந்தை ஒண்ணு
என் பெண் வேலை செய்யும் பள்ளியில் சொல்கிறதாம்.
day by day the school is getting worse. Oh I did not mean you mum''
என்று சொல்கிறதாம்:))))
நூசிக் குசும்பு இல்லாம குசும்பு அகராதி முடியுமா துளசி.????????
எல்லா ஊர்க் குசும்பும் பற்றி ஒரு செயின் ஆரம்பித்து விடலாமா:)
வாங்க ஆதி. அரட்டையை ரசித்ததற்கு மிகவும் நன்றி. கல்யாண விருந்தினராகப் போவது எவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கிறது இல்லையா.
வாங்கப்பா புவன். கண்கள் வெளிச்சம் பெற்று வருகிறன.
நியூ லவ் அண்ட் நியூலி மாரீட் எல்லாமே இனிமை.
நெல்லைக் குசும்பு ? புதுசா இருக்கே !
என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்
தனபாலன்.:0)
தமிழில் நல்ல வார்த்தை குசும்பு.நெல்லைக்காரர்கள் வார்த்தை விளையாட்டில் வல்லவர்கள் நல்லவர்கள்!!
ஆகா! செயின் ஒன்று ஆரம்பித்துவிடுங்கள் :)))
சரிமாதேவி. எவ்வளவு மாகாணம் ,அதில எத்தனை ஜில்லா எல்லாவற்றையும் பட்டியல் போட்டு அவங்க அவங்க பகடிச் சொற்களை
எல்லோரும் எழுதினால் நல்லாத்தான் இருக்கும்.:)
Kumbakonam kusumbudhan kelvi patirilen. Tjanjavur coffee tumbler, madhurai cofee tumblernu vachu pesaradhu ketta gypagam.
நெல்லைக் குசும்பு கேட்டதில்லை. கும்பகோணம் குசும்பு என்பார்கள். நம்ம ரங்க்ஸை நிறையப் பேர் கும்பகோணம் குசும்பு எனக் கலாய்த்திருக்கின்றனர். :)
அதுக்குள்ளே பதிவுக்கு இவ்வளவு பேர் கமென்டி இருக்காங்களே! :))))
என் கண்ணு படப் போகுது! :)
ஆமாம். ஆட்களைக் குறிக்க குறி மொழிகள் உண்டு. பெரிய லோட்டா சின்ன லோட்டா என்றேல்லாம் மனிதர்கள் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு பெயர் வைத்துவிடுவார்கள்.
வரணும் கலா. புதுக்கோட்டைக் குசும்பு இருக்கா பார்க்கப் போறேன் மா.:)
புக்ககம் கும்பகோணம் கீதா. அவர்களுக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. நெல்லைக்காரர்களைப் பார்த்தால் வெல்லம் சாப்பிடுகிறமாதிரி.அதைத்தான் சொன்னேன். எங்க மாமியாரும் நானும் நெல்லை.:)
அதில பாதி பழைய கமெண்ட்ஸ். கீதாமா. கண்ணு படப் போகுதா. எந்த அசட்டைப் பார்த்து.:)
மீள்பதிவுகள்...
:)))
நெல்லைக் குசும்பு ? புதிதாகத்தான்இருக்கிறது
ஆமாம் மீண்டு வருகிற பதிவுகள் ஸ்ரீராம். எந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் கம்மியோ அதைப் பதிவிடுகிறேன்.கைகளுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி கொடுக்க.
நன்றி ஜெயக்குமார். நீங்கள் என் அப்பா வழிப் பாட்டிகளைப் பார்க்கவில்லையே என்றிருக்கிறது.தமிழ் அரசிகள் வாய்ஜாலத்தில்.:)
குசும்பு செய்பவர்கள் எல்லா ஊரிலும் இருப்பார்கள், இல்லையா?
Post a Comment