கண்ணிலே என்ன கண்ணே சிவகாமி |
Add caption |
Add caption |
Add caption |
Add caption |
Add caption |
திரு கல்கியின்
சிவகாமி என்னில் புகுந்தது என் பதினான்கு வயதில்.பாட்டி வீட்டுப் பரணில் இருந்த புத்தகம் மணியம் அவர்களின் கைவண்ண ஓவியங்களோடு அருமையாக இருக்கும்.
அட்டையில் மாமல்லரும்,சிவகாமியும் எதிர்மறை உணர்ச்சிகளோடு ஒருவரை ஒருவரைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் நாகநந்தி
கொடூரமான தோற்றத்தோடு கையில் குறு வாளோடு இருப்பார். ஒரு பட்டத்து
யானையும் அதன் அம்பாரியில் மாமல்லரின் குழந்தைகளும் சித்தரிக்கப் பட்டு இருக்கும்.
பின் அட்டையில் சிவகாமி வாதாபி வீதிகளில் ஆடும் நடனமும் பின்புலத்தில் வாதாபி பற்றி எறிவது போலவும் மணியம் வரைந்திருப்பார்.
மிகச் சின்ன எழுத்தில் இருக்கும் புத்தகம். எத்தனை பக்கங்கள் என்று கூட மறந்துவிட்டது.
பிற்காலத்தில் பல்லவ சாம்ராஜ்ய சேனாதிபதி ஆகப் போகும் பரஞ்சோதியும் ஒரு புத்த துறவியும் மகேந்திர தடாகத்தின் கரையில் நடந்து,காஞ்சியை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள்.
பரஞ்சோதிக்கு நாகநந்தியைப் பார்க்கும் போது ஏதோ ஒரு விஷ நாகத்தைப் பார்க்கும் உணர்வே வரும்.
இந்த மாதிரி எழுத்துக்கள் அந்த வயதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிப்பது கடினம்.
இந்தப் புத்தகத்துக்கு முன்னால் திரு கல்கி, பார்த்திபன் கனவு தொடரை கல்கியில் எழுதி முடித்திருந்தார்.
அவரே மாமல்லபுரக் கடற்கரையில் தனக்கு நேர்ந்த அபூர்வ அனுபவத்தை
ஒரு உத்தம எழுத்தாளனின் உணர்வுகளோடு வர்ணித்திருப்பார்.
அப்போது பிடித்தது பைத்தியம்.எதிலெல்லாம் என்று கேட்டால்
1, மஹாபலிபுரம் போக ஆசை,
2,உண்மையாகவே திரு கல்கி உட்கார்ந்திருந்த இடம்,
3,மானும் மயிலும் செதுக்கப் பட்ட பாறை,
ஆயனச் சிற்பி இருந்ததாகச் சொல்லப்படும் காட்டு வீடு
இப்படி போனது கற்பனை.
பார்த்திபன் கனவு கதையில் தந்தையாக இருந்த நரசிம்ம பல்லவர், சின்னவயதில் எப்படி இருந்திருப்பார்.
ஏன் இந்தக் கதையைக் கல்கி அவர்கள் சோகமாக , முடித்தார்.
சிவகாமி ஏன் இப்படி ஒரு வெறி கொண்ட சபதத்தைச் செய்தாள்,
ஏன் இவர்கள் ஒரு அற்புதக் காதல் காவியத்தைப் படைக்க முடியாமல் போயிற்று.
அந்த வயதில் புரிந்து கொள்ள முடிந்தது அவ்வளவுதான்.
சோகமாக முடிந்ததால் தான் இது காவியமாகிற்று என்பது புரிய வெகு நாட்கள் ஆகிற்று:)இந்தச் சிவகாமியும் நரசிம்ம பல்லவனும் என் வாழ்வில்
ஏற்படுத்திய மாற்றம் தான் எங்கள் திருமணத்தில் வந்து முடிந்தது.
20 comments:
//இந்தச் சிவகாமியும் நரசிம்ம பல்லவனும் என் வாழ்வில்
ஏற்படுத்திய மாற்றம் தான் எங்கள் திருமணத்தில் வந்து முடிந்தது.
//
appa first antha kathaya sollunga :D
சிவகாமியின் சபதம் படிச்சதில்லை. உங்க கதை எழுதினா படிக்கறேன் :)
எல்.கே.
நன்றிம்மா.
http://naachiyaar.blogspot.com/2007/06/180.html
இங்க போய் பாருங்க.அடுத்துவரும் மூன்று பதிவுகளிலும் திருமணம் சுபமாக முடியும்:0)
இந்தப் பதிவு அதாவது 485 ஆவது முன்கதை, இல்லாட்ட முன்னுரை.
அம்மிணி , கட்டாயம் சிவகாமியின் சபதம் படிக்கணும்.
என் கதை தான் ஏற்கனவே வந்துட்டதே.
அந்தக் கதை எப்படி நடந்தது அதற்கு ஒரிஜினல் காரணம் என்னன்னு அடுத்தாப்பில எழுதறேன்.
நல்லா இருக்கு, ஆனால் உங்க கதையைப் படிச்சு, வலைச்சரத்திலும் குறிப்பிட்டேன். :D
நானும் கிட்டத்தட்ட பதினான்கு வயதிலே தான் சிவகாமியின் சபதம் படிச்சேன், என்றாலும் நான் படிச்சது கல்கி புத்தகத்தில் அது முதல்முறை வந்தபோது எடுத்து பைண்ட் செய்யப் பட்ட தொகுப்பு. முற்றிலும் எடிட் செய்யப் படாதது. அச்சில் வந்தப்போ நிறைய எடிட் செய்திருந்தாங்க. படங்களும் முதல் முதல் கல்கியில் வந்தப்போ வரைஞ்சது ஓவியர் சந்திரா. நாகநந்தியின் கொடூரமும், பாம்பு போன்ற விஷக் கத்தியையும் அருமையா வரைஞ்சிருப்பார். மீண்டும் நினைவுகளைத் தட்டி எழுப்பிட்டீங்க. படிக்கணும் மறுபடியும்!
நேற்று புத்தக கண்காட்சில சிவகம்யின் சபதம் பார்த்தேன்.. மறுபடியும் வாங்கனும்னு ஆசை... என்ன பண்ண ஏற்கனவே நான் அதை பலமுறை படிச்சுட்டேன்.. புத்தக கண்காட்சிக்கு ஒதுக்கின நிதி ஏற்கனவே காலி பண்ணிட்டேன்(சாண்டில்யன்+ராஜாஜி+ரா.கணபதி) .. நீங்க எழுதுங்க உங்க எழுத்து மூலமா மறுபடியும் படிக்கறேன்
-LK
கீதா, அதுதான் பழைய கதையாச்சே:0)
இப்பவும் சிவகாமியைப் பற்றி மட்டும்தான் சொல்ல ஆசை.
சந்திராவைத்தான் ,மணியம் என்று நினைத்துவிட்டேனோ.
அதுதான் இணையத்திலியே கிடைக்கிறதே. இருந்தாலும் அந்தப் புத்தகம் மாதிரி வராது.
இன்று நாங்கள் புத்தகக் கண்காட்சிக்குப் போய்வந்தோம்.
தி.ஜா புத்தகம்,சிறுகதைகளின் தொகுப்பும், லாச.ராவின் அபிதாவும் இன்னும் சில புத்தகங்களும்
வாங்கி வந்தோம்.
அடுத்த பதிவு எப்படிப் போகிறது என்று பார்க்கலாம்.:)
அடடே!
படத்தில இருக்கிறதா வாதாபி?
அன்புத் தம்பி வாசுதேவன்,
இந்தப் பாட்டுக்கு ஒரு ஹாண்டிங் மெலடி.
மனசை இழுக்கும் சக்தி. என்னமாப் பாடியிருப்பார்கள் இருவரும்.!
அன்புத் தம்பி வாசுதேவனுக்கு, இந்த வாதாபி,பாதாமி என்கிற பேரில இருக்கு.
''அடுத்தவீடு'' திவாகருக்குத் தெரிஞ்சு இருக்கும்னு நம்புகிறேன்.
எனக்கு கூகிளார் உதவி செய்தார்.
எப்பவோ படிச்சது.
பார்த்திபன் தந்தை நரசிம்மவர்ம பல்லவனை வைத்து சாண்டில்யன் ஒரு கதை எழுதி இருப்பார். ராஜ பேரிகை என்று நினைவு. நாயகி மைவிழிச் செல்வி என்று நினைவு.
மீள் பதிவா?
அருமை.
நன்றி.
//சிவகாமியும் நரசிம்ம பல்லவனும் என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் தான் எங்கள் திருமணத்தில் வந்து முடிந்தது.///
ஆகா அற்புதம்
பொன்னியின் செல்வனையும்
சிவகாமியின் சபதத்தையும், பத்து முறைகளுக்கும் மேல் படித்திருப்பேன் சகோதரியாரே
பொன்யியின் செல்வனும்,
சிவகாமியின் சபதமும்
படிக்கப் படிக்க அலுக்காத நூல்கள்,
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிது புதிதாய் செய்திகள் தோன்றிக் கொண்டே இருக்கும்
நன்றி சகோதரியாரே
அருமை அம்மா... ரசித்தேன்...
அப்படியா ஸ்ரீராம். பார்த்திபனின் தந்தை யார்.பார்த்திப சோழனுக்கும் நரசிம்மபல்லவருக்கும் ஒரே வயது என்று நினைத்தேன். அடுத்த விசிட் போது படிக்கவேண்டும்.நன்றிமா.
நன்றி ஸ்ரீ ரத்னவேல் ஜி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ஜெயக்குமார். உங்கள் படிப்பு ஆர்வம் வியக்க வைக்கிறது.
நன்றி தனபாலன்,. நலமாப்பா. மதுரை மாநாட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Post a Comment