Add caption |
அவ்வளவு கொண்டாடுகிறார்கள் இந்த மேட்டர்ஹார்ன் சிகரத்தை.
நாங்கள் இந்த மலைப்பக்கம் 2002ல் போனோம்.
ஒரு மாதம் இங்கெ இருக்கும்படி வந்தோம்.
மகன் இங்கே வந்து ஆறு வருடங்கள் ஆனபிறகுதான் எங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வாய்த்ததுஅதுவரை நான் ஸ்விட்சர்லாண்ட் வருவேன், சுற்றிப்பார்ப்போம் என்றெல்லாம் நினைத்தது கூட கிடையாது.
வேலைபார்த்துக்கொண்டிருந்த நிறுவனம் இங்கே அவர்களது கிளையில்
ஆட்கள் தேவைப்பட்டதால் இங்கே மகன் வந்தபோது கூட,
மொழி தெரியாத ஊரு,சாப்பாடு கிடைக்காதே என்றுதான் நினைத்தேன்.
எங்களைத் தனிக்குடித்தனம் வைத்தபோது என் பெற்றோர் பட்ட கவலைதான்!!!!
எப்படியாவது பிழைத்துக்கொள்ளும் இந்தக்காலத்துப் பிள்ளைகள்.
இது இங்கே வந்தபிறகுதான் தெரிந்தது.எங்க வீட்டைவிட இங்கே சுத்தம் அதிகம். வைத்தபொருள் வைத்த இடத்தில் இருந்தது,.
வாரம் ஒரு முறை சுத்தம் செய்து வெளியேறும் பத்திரிகைகள்.
இரண்டு நாளைக்கு ஒருதடவை சுத்தம் செய்தால் போதுமான சின்ன அபார்ட்மெண்ட்.
அப்போது பேச்சு இலராக இவர் இருந்த நாட்கள்!
நல்லாவே சமைக்கக் கத்துக்கிட்டாங்க.:)
இங்கே என்ன திரும்பினால் சரவணபவன்,
ஓடினால் முருகன் இட்லிகடைன்னு இருக்கா:(
ஓடினால் முருகன் இட்லிகடைன்னு இருக்கா:(
இருக்கிற ஒரே ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டும் ஈ அடிச்சுட்டு இருந்தாங்க.
பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு முக்கியப்பட்ட இடங்களுக்குப் போய் விட்டு வரலாம்னு திட்டம்.
எல்லாம் காலைலே கிளம்பி இரவு திரும்பி வர மாதிரி.
டிக்கெட்டுகளும் வாங்கியாச்சு,.
ஒரே டிக்கெட்டில்,
பஸ்,ட்ராம், ட்ரெயின்,போட் எல்லா வாகனங்களில் போகலாம்.
கேபிள் காருக்குத் தனியாக வாங்கவேண்டும்.
இப்படித்தான்
ZERMAT எனும் மலைச் சிகரத்துக்குப் போகலாம் என்று தீர்மானம் செய்தோம்.
அங்கேருந்து இன்னொரு வண்டி கிளம்பத் தயாரா இருக்கும்.:)
எல்லாம் சரியான டைமிங்ல தான் செய்து வைத்து இருக்காங்க.
என்ன ,,,,,ஒரு நாலு தண்டவாளத்தைத் தாண்டிப் போகணும்.இறங்கின
தடத்திலிருந்து படிகள் மேல போகும்.
அங்கேயிருந்து நாலு வாயில்களைத் தாண்டி அந்த இன்னோரு வண்டி நிக்குமே அங்க இறங்கணும். சாமி!!
கையில் சோத்து மூட்டை.
வரும்போது எனக்கு கைவீசி வரலாம்னு நினைப்பு.
ஆனாப் போகும்போதே நம்மளை ஒரு வழியாக்கி விட்டது.
முழங்கால் கெஞ்ச ஆரம்பித்தது.
அது கம்ப்ளெயின் செய்ய ஆரம்பித்துவிட்டது.
வேகமாக நடக்காதேன்னு கட்டளை போடுகிறது.
மேலே இருக்கிற க்ளேசியர் எக்ஸ்ப்ரஸ் வா வா நேரமாச்சுனு'' கூப்பிடுகிறது.
அப்பாடி அம்மாடின்னு ஏறியாச்சு.
சுத்துமுத்தும் பார்த்தால் ஸ்கியிங் கம்புகளோடும்,சைக்கிள்களோடும் ஜோடிகள் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரே கலகலா.
உடம்பு சிக்குனு இருக்கு. உலகமே எங்கள் காலடியில்னு ஒரு சந்தோஷம்.
நமக்கோ நம் காலும் பூமியும் ஒட்டி இருந்தாலே போதும்னு நினைப்பு:)
இது ஒருபக்கம்.
வண்டி கிளம்பியது. பையனுக்குப் பசி.
அம்மா இட்லி சாப்பிடலாமா என்றான்.
பேப்பர்,தட்டுகள் ஸ்பூன்கள் சகிதம்
சிப்லாக்கில் தனிதனியாக இட்லிகளும் ,தேங்காய்ச் சட்னியும்.
அதே போல சப்பாத்தியும், தாலும் இன்னோருலன்ச் பொட்டியில்.
அதை எடுத்துவைப்பதற்குள் அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது.
நாங்க தட்டுக்களை எடுப்பதற்கும் ஸ்பீக்கரில் அடுத்த ஸ்டாப்
நிற்கும் இடத்தில் உணவுவிடுதி மழையினால் மூடிவிட்டதால்,
மதிய உணவு வேண்டும் என்பவர்கள்
வண்டியில் இருக்கும்
டைனிங் காரை பயன்படுத்திக் கொள்ள சொன்னார்கள்.
அத்தனைகூட்டமும் மேல்மாடிக்குப் படையெடுக்க
வெளியே மழை ஆரம்பித்தது.
அழகான மழை.
அந்த மழையில் பக்கத்தில் இருக்கும் சாலையில் வழுக்கிச் செல்லும் கார்கள்
Add caption |
Add caption |
.
,.
.
.
இந்த இடம் காலியாகி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை:)
.
25 comments:
பழைய தொந்தரவு மீண்டும் வந்துவிட்டது .
படங்கள் நிறைய பதித்தால் இப்படி
ஆகுமோ, தெரியவில்லை.
பொறுமை தேவை:-)))
படங்கள் அருமை :)
வெகு வெகு அருமை!
நீங்க கீழே விழுந்த கதையைப் படிச்சு நான் தனியாச் சிரிச்சதை இங்கே என்னோட மறுபாதி சந்தேகமாப் பார்த்துட்டு இருக்கார்.
பார்மேட் பிரச்சனைதானா? நான் என்னவோ எனக்கே 'வெள்ளெழுத்து' வந்திருச்சோன்னு கவலையாகிட்டேன். :))
நல்ல அனுபவம்தான் போங்க. :)
இடைவெளி கூடினாலும் மேட்டர்ஹார்னின் மேட்டர் கெடாம வந்துருக்கு பதிவு.
நானும் ஒரு 'டூப்ளிகெட் மேட்டர்ஹார்ன் ரைடு' டிஸ்னியில் போனேன்:-)))))
இதான் விழுந்தடிச்சுப் பார்க்கறதுன்றது:-))))
பத்திரம். டேக் கேர்.
ரொம்ப பெரிய பதிவு போடனும் என்று ரொம்ப நாளாக ஆசையா?
ஃயர் பாக்ஸில் பார்க்கும் போது ஒவ்வொரு பத்திக்கும் இடையில் ஏகப்பட்ட இடம்.:-))
சரி,இனி என் பையனை அங்கு போக சொல்லிட்டுத்தான்,நான் அங்கு போய் பார்க்கவேண்டும்.
படங்கள் மட்டுமா.பாலா குசும்புக்கு எல்லை இல்லை:-))))
பொறுமையா பார்த்ததற்கு நன்றி:-)))
நான் அன்னிக்கு விழுந்ததற்கு இன்னிக்குச் சிரிப்பு வரதா.
இந்த மாதிரி அறைக்குள்ளேயே
விழற அனுபவம் புதுமைதான்.:-)
இன்னொண்ணு விட்டுப் போச்சே.
அந்த கர்ட்டன் கையோட வந்துடுத்து.!!!
அதுவும் என் கையோட.
ஒரு அதிசயம் திருப்பி வச்சதும் ஒட்டிக்கொண்டு விட்டது. :_)))நிஜமாப்பா.
அது ஒண்ணும் இல்லை கொத்ஸ்.
இந்தக் கானமயிலாட....கதைதான்.
உங்களைமாதிரியே எழுதணும்னு முயற்சி செய்தேனா.,..அப்படியே அச்சு பிறழாமல் வந்து விட்டது.
இந்தப் பதிவுகளுக்குப் படம்னு வந்தாலே ஆகறதில்லை.
டிஸ்னில மேடர்ஹார்னா.
அட.
விழுவதும் பின்பு எழுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே துளசி:-0)))))))
ஒரு ஐந்து வருடங்கள் முன்னாடி நம்மா வீட்டில ஒரு தாயீ வீட்டோட இருந்தாங்க.
சுளுக்கு மன்னி அவங்க.
நான் இந்த ஊருக்கு வந்து திரும்பியபாது கேட்ட கேள்வி சூப்பர்.
"சின்னம்மா! விளாம வந்தியா":-)))
அட்டகாசமா இருக்கு படங்கள்!!
எங்க போனாலும் இட்லி சட்னிய மறப்பதில்லை....தமிழர் மரப நல்லா காபாத்தரீங்க.....:):)
ஐய்யோ ஆசையோ ஆசை.
நாகேஷ் சொல்ற மாதிரி கொட்டோ கொட்டோனு கொட்டி,கட்டோ கட்டுனு அள்ள
நினைப்பு.
சாரிப்பா ஒவரா பில்மு காட்டறதனாலே வர வேதனை.:-))
நாந்தான் சொல்லிட்டேனெ.
நீங்க வடுவூர் ராமன் படத்தையும் பர்சில வைத்துக்கொண்டு இங்கே வரத்தான் போறிங்க.
வல்லிம்மா ஆசீர்வாதம் வேணும்!
ராதா ,
வரணும்.
தமிழர் மரபா. சாப்பாடுப்பா.
இந்த மாதிரி மீன் என்னைப் பார்க்கும்னு தெரிந்து இருந்தா
முழு சாப்பாடும் எடுத்துப் போய் இருப்பேன்:-)))
குமார் உங்க பேர் போடாமப் பதில் போட்டுட்டேன்..-((
மீள் பதிவா? எங்கேப்பா, விழுந்த கதையைக் காணோமேனு நினைச்சேன். :))))
படங்கள் அருமை... இனிய பயணம்... வாழ்த்துக்கள் அம்மா...
காலி இடங்களை டெலிட் செய்து விடலாமே... ஒரு போட்டோ வேற கோச்சுண்டு ஒரு பக்கமா ஒதுங்கி இருக்கு!
பயணங்கள் இனியவை. :))
பயண அனுபவம், படங்கள், நீங்கள் நகைச்சுவையாக எழுதிய விதம் எல்லாம் அழகு.
மீள் பதிவு என்று என் பின்னூட்டம் பார்த்தபின் தெரிகிறது.
அருமையான பகிர்வு.
என்ன ஒரு அழகான ஊர்!
அருமையான பயணப்பதிவு. படங்களுடன் அற்புதம். நன்றி.
ஆமாம். ஏற்கனவெ பதிந்ததுதான் கோமதி. பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல.நன்றி மா.
வருகைக்கு நன்றி ஸ்ரீரத்னவேல் சார்.உங்களது அன்புக்கு நன்றி.
Post a Comment