Blog Archive

Thursday, August 14, 2014

Wall drug^s story.ஓரு கடையின் கதை. South Dakota tour 4

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Wall                                                                        வால் என்னும் இடத்தில் ஆரம்பிக்க ப்  பட்ட                                          இந்தக்  கடையை ஆரம்பிக்கக் காரணம்  வியாபாரம் செழிக்க வேண்டும் என்ற பொதுவான எண்ணம் தான். அதிலென்ன அதிசயம். ஒன்றும் இல்லை. இந்தக் கடையை ஆரம்பித்தவர்  ஹஸ்டட்  தேர்ந்தெடுத்த இடம் தான். ஒரு அத்துவானக் காடு.                                                                             கண்ணுக்கெட்டிய தூரம் வரை புல்வெளியும் எப்பவாவது கண்ணில் படும் மரங்களும் தான். சௌத் டகோடா  என்பது  சஹாராவைவிடப் பெரிதாக இருக்குமோ என்று நான் நினைத்தேன். அவ்வளவு விஸ்தீரணம்.                                                                                     கனோவா   என்னும் இடத்தில்  குடும்பத்துடன் இருந்த    டெட் ஹல்ஸ்டடும்  கேதியும்  மருந்துக்கடை  வைப்பதற்கான  படிப்பை  முடித்திருந்தனர். டெட்டின்  அப்பா இறந்த போது  3000 டாலர்கள் வைத்துவிட்டுப் போயிருந்தார். அதை வைத்துக் கொண்டு  வேறு இடம் சென்று பிழைக்க நினைத்தனர்.    அதற்கு   அவர்கள்   தேர்ந்திடத்த இடம் பாட்லாண்ட்ஸ்  முடியும் இடத்திலிருந்த வால்   என்னும்  கிராமம். அங்கே ஒரு கோவில்,ஒருஸ்கூல்,பத்து குடும்பங்கள்  இருந்தன.  வீட்டில்   இருந்த மற்றவர்கள் முதலில்  வெகுவாக யோசித்தனர். இந்தச் சிறு குடும்பம் இவ்வளவு  பெரிய      சோதனையைத் தாங்குமா என்று.                         கடைசியில்   கடவுள்   கிருபையை நாடியாபடி வால்  கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கே   மருந்துக் கடையும் ஆரம்பித்து நடந்துவந்தது. கொஞ்சமே மருந்துகள் விற்றன. இருவருக்கும்                                                  வேறு ஏதாவது செய்தால் தான் பிழைக்க   முடியும்.இல்லாவிட்டால் இந்த அத்துவானத்தில் இருப்பதே சிரமம் என்று   உணர்ந்தனர். ஒரு வருடத்தில்                                           ஒரு பையனும் அடுத்த வருடம் இன்னோரு பெண்ணும் பிறந்த நிலையில்                                       கடையில்  ஈக்களை ஓட்டியபடி  கணவனும் மனைவியும் உட்கார்ந்திருந்தனர்,                                                                                                                                        தொலைதூரத்தில்  வீடுமுறையை  ஒட்டி  வெளியூர் செல்லும் குடும்பங்கள் தங்கள் வண்டிகளில் விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒருவரும் இந்தக் கடையைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.                                                                கேதி    தான்    கொஞ்ச  நேரம்  போய்ப் படுத்துக் கொள்வதாக மறைவில்  சென்று ஓய்வு எடுத்துக் கொண்டால்.  வெய்யில்  தகித்துக் கொண்டிருந்தது.  சட்டென்று கேதி திரும்பி வரும் சத்தம்   கேட்டு  டெட்  பார்த்தார்.  என்னம்மா    தூக்கம் வரவில்லையா என்றார்.  இல்லை  அங்கே  செல்லும்  வாகனங்கள் என்னைத் தூங்க விடவில்லை  என்றாள்  கேதி.  சத்தமாகச் செல்கின்றன. உன் ஓய்வு  பாதிக்கப் பட்டது குறித்து வருந்துகிறேன்.                                                                 நாம் இங்கிருந்து கிளம்பலாமா.ஊருக்கே போய்விடலாம். இங்கே மிகவும் தனிமையாக உணர்கிறேன்  என்று யோசித்தவாறு  வார்த்தைகளை உதிர்த்தார் டெட்.                                                     உடனே மறுத்தாள் கேட்டி. நான் அதைச் சொல்லவில்லை. இந்த வெய்யில் காலத்தில் சாலையில் செல்பவர்களை இங்கே வரவழைக்க எனக்கு  ஒரு வழி தெரிந்தது. இதைப் பாருங்கள் என்று ஒரு காகிதத்தில் தான் எழுதி  இருந்த வாசகங்களைக் காண்பித்தாள்.                                                                                                                                                                                                              ""   Get a soda . . . Get a root beer . . . turn next corner . . . Just as near . . . To Highway 16 & 14. . . Free Ice Water. . . Wall Drug."                                                                                                                 இது    போன்ற  வாசகங்களை எழுதிக்  கொண்டு போய் ஹைவேயில் வைத்தால்  தண்ணிர்த் தாகம் எடுப்பவர்கள் வருவார்கள்  என்ற அற்புதமான யோசனையைச் சொன்னாள்.  ஒரு பள்ளிக்கூடப் பையனை அழைத்துக் கொண்டு  டெட்டும்  ஹைவே யில் கண்படும் இட்ங்களில்   ஃப்ரீ ஐஸ் வாட்டர்   போர்ட்களை வைத்தார்.                                                                                                                                                                                                                                   ஒருவர் இருவராக மக்கள் தண்ணீர் குடிக்கவந்தார்கள். சிலபேர்  பக்கேட்டுக்களில் வாங்கிப் போனார்கள். மருந்துகளும் விற்பனையாகின.   புதிய விளம்பரங்களும் கிடைத்தன.    தண்ணீர் குடிக்க வந்தவரகள்   ஐஸ்க்ரீம் வாங்கினார்கள். தம்பதியர் இருவரும் சலிப்பில்லாமல் வேலை செய்தனர். மனமெங்கும் மகிழ்ச்சி. மனிதர்களின் தோழமைக்காக ஏங்கியவர்களுக்கு இந்த டூரிஸ்டுகளின் வருகை  தெய்வப்ரசாதமாக் அமைந்தது. டெட்  காலத்திலிய்யே மகன் பில்  வியாபாரத்தைக் கவனிக்கத் துவங்கினான்.ஒரு வீதி நிறைய  மக்களுக்குத் தேவையான பொருட்கள் உணவகம்,சலூன்,உடைகள்     கௌபாய்ஸ்க்குத் தேவையான உபகரணங்கள்,     விடுதிகள் என்று விரிவடைந்தது.   எங்கள்   அனுபவம் இந்த ஊரில் மறக்க முடியாத 5 செண்ட்ஸ் காஃபியாக அமைந்தது. இன்னும் ஐஸ் வாட்டர்  ஃப்ரீதான்.   உண்மையான உழைப்பு வெற்றி பெற்ற ஊர்    வால்  WALL. ஒரு நாளைக்கு 25   ஆயிரம் மக்களுக்கு மேல்                                  வருவதாகக் குறிப்பிட்டார்கள்.                                                                                                      உண்மையான நற்சிந்தனை வெற்றி பெற்ற இடம்.                                                                                                                                                                                               

9 comments:

ஸ்ரீராம். said...

ஒரு உழைப்பு வெற்றியடைந்த கதை என்று தெரிகிறது. இரட்டைக் குதிரை வண்டி ஜோர்!

RajalakshmiParamasivam said...

தன்னம்பிக்கைத் தரும் நிகழ்வு. அருமையான கதை. நன்றி வல்லி மேடம் ,.
வாழ்த்துக்கள்....

கோமதி அரசு said...

அழகான படங்கள்.
உண்மையான உழைப்பும், நற்சிந்தனையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை எடுத்துக் காட்டும் கதை அருமை.

Geetha Sambasivam said...

வால்மார்ட்டுக்கு அண்ணனா வால் ட்ரக்??? அருமையான தகவல் பதிவு. படங்கள் அருமை.

ராமலக்ஷ்மி said...

வெற்றிக் கதை. பகிர்வுக்கு நன்றி. படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். நம் முன்னோர்கள் எவ்வளவு உழைப்பாளிகள் என்று ஸ்ரீ ராஜநாராயணன் கதைகளின் மூலம் தெரிய வரும். இந்த ஊரில் ஒவ்வொரு இடத்துக்கும் கதை இருக்கு. இந்தக் கதைக்கு இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் விவரம் ஆச்சரியமாக இருக்கிறது.அந்த சைன்ஸ் எல்லாம் அப்படியே இருக்கிறது. விளம்பரம் செய்வதே இப்படித்தான் ஆரம்பித்ததோ என்னவோ.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜலக்ஷ்மி சிவம். உழைப்பு முயற்சி உள்ள வாழ்க்கை முன்னேற தடையே இல்லை. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வால் மார்ட் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரமாட்டர்கள் கீதா. தர்மம் துளியும் கிடையாது. இது வால் என்னும் ஊர்.இந்தமக்கள் எளிமையிலிருந்து வெளி வந்தவர்கள். கடவுள் பக்தியும் விடா முயற்சியும் நல்ல பயன் கொடுத்திருக்கிறது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. படங்களை ரசித்ததிற்கு மிக நன்றி. இனிதான் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். இந்த ஊரில் குளிர்நாட்கள் வந்திருக்கின்றன.