Blog Archive

Tuesday, August 19, 2014

கண்ணனைப் பற்றி ஒரு கதை.

வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எல்லாம் உனக்கு கண்ணா.                



கண்ணன் பிறந்து  மூன்று நாட்கள் கழித்து அவனைப் பற்றின  பாட்டி ஒருத்தியின் கதை கிடைத்தது. அனுப்பினது என் குட்டித் தங்கை.       கண்ணனையே தியானம் செய்து அவனுக்கே  எல்லாம் என்று சொல்லும் வழக்கம்  கொண்ட  வயதான மாது வாழ்ந்துவந்தாள்.  குருவாயூரப்பன்  அவள்   நினைத்துவந்த வந்த தெய்வம். எதை எடுத்தாலும் கிருணார்ப்பணம் என்று சொல்லி அனுபவிப்பது அவள் வழக்கமாம்.   ஒரு நாள்  பழைய காலத்து வீட்டு வாயில்படிகள் கொண்ட ஒரு வீட்டுக்குள் நுழையும்போது நிலைவாசல் அவள் தலையில்  தட்டிவிட்டு வலித்ததாம். வலியின் கொடுமையிலும் கிருஷ்ணார்ப்பணம்   சொல்லிக் கொண்டாள் பாட்டி.    இப்படியே  இருந்தவள் வாழ்விலும்  தனம்  வந்து சேர்ந்தது தங்கங்களாக. அவளுடைய பகதர்கள் செல்வந்தர்கள்.அவளுக்குச் சமர்ப்பித்த செல்வமாகப் பெற்றுக் கொண்ட பாட்டி  அதைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டாள். கண்ணனுக்கு என்று சொல்ல மனம் வரவில்லையோ இல்லை மறந்தாளோ தெரியாது.                                                                                                             ஒருநாள்  பவதி பிக்ஷாந்தேஹி என்று கேட்டவண்ணம்   ஒரு அந்தணர்   வாயிலில் வந்து நின்றார். அவர் எத்தனை முறை கூவியும் பாட்டி வெளியில் வந்து பிக்ஷை கொடுக்கவில்லை.  கோபம் கொண்ட அந்தணன்   கிருஷ்ணன்,    படி இடிச்சா  எனக்கு. பதக்கம் கிடைத்தால் உனக்கா  என்று உரக்கச்   சொன்னாராம்.  பகீர் என்றது பாட்டிக்கு.  ஓடிவந்து கண்ணனில் பாதங்களில் விழுந்தாள். அவனுக்கு உபசாரம் செய்து தன்னிடமிருந்த அத்தனையும்  அவன் காலடியில் சமர்ப்பித்து       எல்லாம் உனக்கே கண்ணா. உன் அருள் ஒன்று போதும் எனக்கு என்றாளாம்.  கண்ணன் அவளையும் பொருளையும் ஏற்றுக் கொண்டானாம்.   இணைய வழியில் தங்கை அனுப்பிய கதையை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

14 comments:

Geetha Sambasivam said...

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா.கண்ணன் நம்மையும் காணவந்தால் நன்றாக இருக்கும்.

RajalakshmiParamasivam said...

வெண்ணெய் திருடன் ஆட்டம் படு ஜோர். சொன்னது சின்ன கதையானாலும், அதிலுள்ள தத்துவம் மிகப் பெரிது . அந்த அம்மா மாதிரி தானே நாமும், கஷ்டம் வந்தால் கடவுள் கொடுத்தது, நல்லது நடந்தால் நம்முடைய பிரயத்தனம் என்கிற நினைப்பும் .......

ஸ்ரீராம். said...

நாம் எவ்வளவு மறந்தாலும் நம்மை வந்து பார்ப்பதில்லை கண்ணன்! கலியுகக் கண்ணன் படம் பார்த்திருக்கிறீர்களோ? தேங்காய் சீனிவாசன் அமர்க்களப் படுத்தி இருப்பார் இதே போன்ற ஒரு கேரக்டரில்.

துளசி கோபால் said...

க்ரிஷ்ணார்ப்'பணம்' !!!

Unknown said...

கண்ணனின் முகம் அவ்வளவு அழகு கொஞ்சுகிறது . கையில் வெண்ணையுடன் என்ன ஒரு சந்தோசம் முகத்தில் .

துளசியின் கமெண்ட் சூப்பர் !!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராஜி சிவம்.இந்தத் தத்துவம் புரிந்துவிட்டால் வாழ்வு எவ்வளவோ மேம்படும். புரியத்தான் மாட்டேன் என்கிறது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கலியுகக் கண்ணன் படம் லேசாக ஞாபகம் இருக்கிறது ஸ்ரீராம். கொஞ்சம் சிவாஜி சாயல் அடிக்குமோ.யூ டியூபில் தேடுகிறேன்.உங்களுக்குத் தேங்காய் நடிப்பு பிடிக்கும்னு தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா துளசி அத்தனையும் கண்ணன் செய்யும் மாயம் தான்.

அப்பாதுரை said...

நல்லது நடந்தால் கடவுளருள் கெட்டது நடந்தால் ப்ராரப்தம்னு தான் சொல்லுவோம்.. for a change.. கதை நல்லா இருக்கு.

க்ருஷ்ணர் விக்ரகம் நல்ல களை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. அப்பப்போ இது போலக் கதைகள் காதில் விழும்போது கடவுளின் அருகில் வரச் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சசி கலா. கண்ணன் எப்பவுமே அழ்கு. வெண்ணெய் வேணும்னால் இந்த முகபாவம் மட்டுமா. இன்னும் என்னென்னவோ கூத்தாடுவான். நன்றி மா.

மாதேவி said...

கண்ணன் லீலைகள் அற்புதம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.நலமாப்பா.