மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி.
நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி.
25 பூவர் சோலை மயில்ஆடப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகுஅசைய நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய நடந்த எல்லாம் நின்கணவன் நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி. 26
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
21 comments:
காவேரியையும் அது பொங்கிப் பிரவகிக்கும் அழகையும்,
வெள்ளத்தில் தாவும் சிறுவர்களையும்,
காவேரித்தாயை வணங்கவரும் அன்னையர்,கன்னிப் பெண்கள்
அனைவரின் பசுமை அழகையும்
வளையல்கள் செய்யும்,சொல்லும் ரகசியங்களையும்
ஒரு சிறு ஓலையில் காதணி,மங்கலநாண்,மலர்கள்,
வெற்றிலை,மஞ்சள்,குங்குமம்,ஒரு சிறு தீபம்
இத்தோடு காவேரி அன்னைக்கு மரியாதை
செய்யும் அழகு ஒரு அற்புதம்.
அம்மா காவேரி,
நலிந்த விவசாயிகளுக்கு,
குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கும்
அமுதமாக ஒவ்வொரு ஆண்டும் வந்துடுகிறாய்.
யார் தடுத்தால் என்ன,
ஆடிக்கு நான் ஸ்ரீரங்கம் வந்தே தீருவேன் என்று வந்துவிடுகிறாயே
அம்மா நீ வாழி.
தலைமுறை தலைமுறையாக வணங்குகிறோம்,
வான்பொய்த்தாலும் தான் பொய்க்காதவளே!
நீ வாழி.
உன்னை நம்பி இருக்கும் நாங்களும் வாழி.
நல்லாருக்கு உங்க வாழ்த்துப்பா! படங்கள் அழகு!! :-)
பதினெட்டாம் பெருக்குன்னு ஆத்தங்கரையில் பிக்னிக் சாப்புட்டது எல்லாம் இப்போ கனவா இருக்குப்பா.
படங்கள் அருமை.
ஆண்டவர் அருளியதுதானே? :-)))))
இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்கப்பா முல்லை. பதிவி இருப்பது சிலப்பதிகாரம் கானல் வரி.
உங்களுக்கே தெரியும்.
பின்னூட்டத்தில் இருப்பது நம்ம மனசு(ப்)பா.
அதைப் பாரட்டியதற்கு நன்றி..
இன்று உங்கள் வீட்டிலும் கலந்த சாத வகையறா உண்டா:)
ஆமாம், ஒண்ணு செய்யலாமே. நாம பீச்சாங்கரையோரம் போய்ச் சாப்பிடலாமா:)
துளசி?
ம்ம். வேணாம்.
தேங்காய் கூடாது,புளி கூடாது.
அப்புறம் என்ன செய்யறது.
ஸ்கிம்ம்ட் மில்க் சாதம் சாப்பிடலாம்:)
இளங்கோஅடிகளின் சிலப்பதிகாரத்திலிருந்து அவர் காவேரியை போற்றும் பாடலையும் ,
அற்புதமான படங்களையும்,அனுப்பி
உங்களுடன் எங்களையும் காவேரியை
வணங்க செய்து விட்டீர்கள்.
நன்றி.
வாழ்க பல்லாண்டு!.
பீச்சாங்கரையா? yuck(-:
அற்புதமான படங்களோடு கூடிய காவிரி வாழ்த்துக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றியும். பீச்சாங்கரைக்குப் போய்ச் சாப்பிட்டு வந்தாச்சா?? :))))))
வாங்க கோமதி அரசு.
சென்னையிலயும் அடையாறு இருக்கு. போய்க் கொண்டாடணும்னால் போட் க்ளப் மெம்பரா இருக்கணும்:)
சரி பீச் வேணாம்.
அமைதியான கோவளம் போகலாமா:)
நீங்க சொன்ன மாதிரி படங்கள் ஆண்டவர் கொடுத்ததுதான்.
அதுவும் ஒரு படம் பாம்பே ஜயஸ்ரீ எடுத்ததாம்.
பர்மிஷன் கேக்காமலியே போட்டுட்டேன்.
இல்லப்பா கீதா பீச்சாங்கரை போகலை. நம்ம கிணத்தாங்கரைதான் நமக்கு லாயக்கு:))
ஆடிப் பெருக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும்...
அருமையும் எளிமையும் எப்போதும் உங்கள் பதிவுகளில், ஆனால் இப்பதிவில் அடிஷனலாக இளமையும் வந்திருக்கு. :)
இது ஒரு மீள் பதிவு.
ஆடிப் பெருக்கு வாழ்த்துக்கள்
ஆடிப்பெருக்கு படங்களுடன் அழகிய பகிர்வு.
ரொம்பப் பழைய பதிவாயிருக்கணும். என்னோட கமெண்ட் இல்லையே...
ஆடி 18 என்றால் கலந்த சாதங்கள் நினைவுக்கு வருகின்றன! (நான் சாப்பாடு ராமன். கடவுள், ஆறு, பெருகி வரும் நீர் எல்லாம் அப்புறம்தான் நினைவுக்கு வரும்!)
நதிகள் பெண்களாக மதிக்கப்படுவதே ஒரு இலக்கிய தரவு. மாங்கு மாங்கு என்றோடும் அன்னை செயலில் திறன், எண்ணத்தில் உயர்வு, அன்பின் உறைவிடம், மனத்தளவில் சிரஞ்சீவி. காவிரி அன்னையும் அவ்வாறே. காலியில் எழுந்தவுடன்
தாயாரின் தரிசனம்.
அன்புடன், இன்னம்பூரான்
amam. old post. Mouli comment potirukare! avar inaiyam vanthe 3 yearskku meele achu!:)
நன்றி இராஜராஜேஸ்வரி.
நன்றி மா கீதா.ஆமாம் 3 வருஷத்துக்கு மேலதான் ஆச்சு. பழங்கணக்குப் பார்த்துக் கொண்டுவரும்போது கண்ணில் பட்டது.
சக்தி கொடுப்பவள் அன்னை. அரவணைப்பவள் அன்னை. தாகம் தீர்ப்பவள் அன்னை. எல்லாமாக் இருப்பவளான காவிரித்தாய்க்கும் பெண் வடிவம் கொடுத்து அடிகளாரும் பாடிவிட்டார். இ சார். அந்தக் காவிரிக்குச் சிரஞ்சீவி பட்டமும் கொடுத்துவிட்டீர்கள்.அவளும் அவளால் வளம் பெறும் எல்லா மக்களும் நலமுடன் இருக்கட்டும்.
Post a Comment