Blog Archive

Thursday, March 13, 2014

பனியுடைய பங்குனி

உறைந்த தண்ணிர்க் குட்டை. அபாயகரமானது..மேலே பனித்துகள். நம்பிக்காலைவிட்டால் பனிக்குளத்தில் விழலாம்.
சுத்தப் படுத்தப் பட்ட சாலைகள்.
கோடைகாலத்துக்கான          வெளிப்புற  நாற்காலிகளும் மேஜையும் 
பள்ளிக்கூடம்    செல்லும் சாலையில்      பனி மரங்கள்.
பக்கத்துவீட்டு   ரெக்ஸுக்குப் பனியென்றால் கொண்டாட்டம்.  வேலியோரம் அதைப் பார்த்தால் விரைவில் உள்ளே  வந்துவிடுவேன்.
Add caption
வீட்டின் பின்புறம் வெள்ளைத் தோட்டம்
வீட்டின் முன்புறம் பனிவிழும் மரம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வாயிலில் பனிமலர் ஏந்தி நிற்கும் செடிகள்    சென்னையில்  வெய்யில் வந்துவிட்டதாகச் சொன்னார்கள்..  கோடையில் இளைப்பாற இந்தப் படங்கள்    துணையாக  இருக்குமோ.

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களைப் பார்த்து சிறிது சந்தோசம் கொள்கிறோம் அம்மா...

ஸ்ரீராம். said...

முதல் படம் பயமுறுத்துகிறது.
சாலையோர மரங்கள் : அத்தனைக் கஷ்டத்தையும் எதிர்த்து ஜீவிக்கின்றனவே!

ஸ்ரீராம். said...

உறைந்த மரங்கள்
உயிர்த்தெழுதலை
எதிர்பார்த்து
மௌனமாக ஒரு
வெய்யில் விடியலுக்காகக்
காத்திருக்கின்றன!

:)))

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.......

கோமதி அரசு said...

அழகான படங்கள்.

ராமலக்ஷ்மி said...

எங்கும் பனி. அருமையான படங்களுக்கு நன்றி.

ஸ்ரீராமின் கவிதையும் அருமை.

Geetha Sambasivam said...

சென்னையில் வெயில் கொளுத்துகிறது. அதை விடவும் இங்கே ஶ்ரீரங்கத்தில்! :)))) அங்கே நேர்மாறாக இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். வேடிக்கையாகத்தான் சொன்னேன். இந்தக் குளிர் உடலை முடக்கும் குளிர். அதற்கு நம் ஊர் வெயில் எவ்வளவோ தேவலை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். வீட்டுக்குப் பக்கத்தில் குட்டி ஏரி.அதில் இன்னும் பனி உருகாத நிலை. அதில் சிவப்புக் கொடிகள் கூட நட்டுவைக்கவில்லை.தெரியாதவர்கள் விழுந்துவிடமாட்டார்களா என்று மகளைக் கேட்டேன். பயம்தான்.பார்த்துக்கொள்வார்கள் என்கிறாள். கவிதை மிக அருமை மா.மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் அந்த மரங்கள் எவர் க்ரீன் வகை.எதையும் தாங்கும். பெண்வீட்டு வாசலில் இருக்கும் மரம் பனியோடு வெள்ளைக்கோலம் போட்டு ஒரு வயதான மூதாட்டியை நினைவூட்டுகிறது}

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.சாண்டில்யனின் மஞ்சளழகி போல இவள் வெள்ளை அழகி. அபாயகரமானவளூம் கூட.கவனம் வைக்காவிட்டால் வழுக்கி விழ வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். உங்கள் டெல்லி குளிர் எப்படியிருக்கிறதோ என்று நினைப்பேன். ஹோலி வந்தால் பனி போய்விடும் என்று மருமகள் சொல்வாள்.

Geetha Sambasivam said...

என்னோட கமென்டைக் காணோமே? ஆனால் ஃபாலோ அப் மட்டும் வருது! குலுக்கிப் பாருங்க வல்லி! சென்னை வெயிலைப் பத்தி எழுதி இருந்தேன்னு நினைக்கிறேன். :)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா நோன்பு நாள் நல்வாழ்த்துகள். சென்னை வெய்யில் கமெண்டைக் கண்டுபிடிக்கிறேன்}}}

துளசி கோபால் said...

பனி ஒரு அழகு! சும்மா பார்த்துக்கிட்டே இருக்கலாம்!

என்றாலும் பனிகாலத்தை நினைச்சால் பகீர்தான்:(

வீட்டுவேலைகளும் வெளி வேலைகளுக்கும் தடங்கல். பொதுவா வேலை செய்யவே உடம்பு வணங்காது.

இந்த வருசம் எங்களுக்கும் கடுமையான பனி வரப்போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருங்காங்க.

உண்மைதான் போல........ இப்பவே குளிர் ஆரம்பிச்சுருக்கு:(

நீங்க கவனமா இருங்க.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துளசி. இன்ச் இன்சா உடம்பு வலிக்கிறது. காற்று சுழற்றி அடிக்கிறது. வீட்டுக்குள் ஒன்றும் தெரியவில்லை. நாளைக்கு மழையாம்...... உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து விண்டர் வந்திருக்கலாம்....சினிமாக்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்>}}}

மாதேவி said...

நமதுகோடைக்கு பனிமலை பார்ப்பதில் சுகம்தருகிறது. ஆனால் விறைக்கும்குளிருக்கு மனம் சூரியனை தேடும்...

நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. உடனே பதில் போடாததற்கு மன்னிக்கணும். உடல்வலி குளிரில் அதிகமாகிறது.சரியாகிவிடும் உடல்தானே.