எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Saturday, March 22, 2014
சில சில் நினைவுகள் 1965
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
நயகராவின் பெரு மூச்சு வானை எட்டுமோ அக்டோபர் 31 ஆம் தேதி பெண்பார்த்தல். சம்பந்திகள் பேச்சு எல்லாம் முடிந்தது. நிச்சயம் எல்லாம் செய்ய வேண்டாம். என் சொல் தான் நிச்சயம். என்று ஆஜிப்பாட்டி சொன்னதற்கு என் பாட்டி கவலைப் பட்டார். இன்னிக்கே வெற்றிலை பாக்காவது மாற்றிக் கொள்ளலாமே என்று சொன்னார். பெற்றோருக்கு என் மாமியாரிடம் அளவு கடந்த பாசமும் மரியாதையும். கமலா சொன்னால் சரிதான். நாங்கள் இன்றே மதுரை திரும்புகிறோம் என்று சொல்லி விட்டார்கள். எனக்குச் சென்னையில் ஒரு சினிமா கூடப் பார்க்காமல் கிளம்புகிறோமே என்று வருத்தம். தை பிறந்ததும் திரும்பி வந்து புடவைகள் வாங்கலாம். மற்றதை மதுரையிலேயெ முடித்துக் கொள்ளலாம் என்று அப்பா சொல்லிவிட்டார். நானோ என் தனி உலகத்தில் இருந்தேன். திருமணமா எனக்கா. என்று ஆச்சரியம். மகா பதவிசாக எல்லோரையும் வணங்கிவிட்டு வந்த டாக்ஸியில் ஏறி அமர்ந்து எழும்பூர் வந்தோம். வழக்கம்போல் ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டேன். அம்மா வழக்கம்போல் ..எட்டிப் பார்க்காதே. கண்ணில புகை விழும். என்று சொல்லிய வண்ணம் தூங்க முயற்சி செய்தார். நான் செங்கல்பட்டு ரயில் நிலையத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று முதல் நாள் பார்த்த உருவம் என்னையே பார்த்தவண்ணம் என் ஜன்னலைக் கடப்பது போலத் தோன்றியது. குப்பென்ற கலவரம் பற்றிக் கொண்டது. அம்மாவை எழுப்பி நான் பார்த்ததைச் சொன்னேன். சூச்சூ.கனவு காணாதே. அந்தப் பிள்ளை புதுக் கோட்டைக்கு வேறரயிலில் போயிருக்கும். நீ பேசாமல் தூங்கு. அசடு............}}என்றவண்ணம் கண்ணை மூடிக்கொண்டார். நானும் அதே பாதி கண்ணை மூடிக் கொண்டேன். ஐந்து நிமிடம் கழித்து அதே உருவம் இன்னும் அருகாமையில் கடந்தது. இந்தத் தடவை அப்பாவை எழுப்பினேன். அவர் மாதிரியே என்று ஆரம்பித்ததும் அப்பா முறைத்தார். இது பாரு சும்மா தூங்கு. நேத்துதான் பார்த்திருக்கே மனசில பதிந்து கூட இருக்காது. கற்பனை பண்ணாமல் சமத்தாத் தூங்கு என்றவர் என்னைப் பார்த்துக் கொஞ்சம் மனம் தளர்ந்தார். சரி உன் திருப்திக்காகக் கீழே இறங்கிப் பார்க்கிறேன் என்று இறங்கினார். அப்பாவைத் தூங்கவிடாமல் இதென்ன பிடிவாதம் என்று அம்மா கடிந்ததைக் கூட நான் பொருட்படுத்தவில்லை. அப்பா அவரைப் பார்க்கிறாரா என்றே கண்களை ஜன்னலோரம் பதித்தவண்ணம் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று என்னவோ செங்கல்பட்டிலேயே டேரா போட்டு விட்டது திருநெல்வேலி எக்ஸ்ப்ரஸ். அப்பா நாங்கள் இருக்கும் கம்பார்ட்மேண்ட் அருகிலேயே நிதானமாக உலாவினார்.அட} நீங்களா என்று குரல் கேட்டது. எனக்கோ படபடப்பு அதிகரித்தது. நீங்களும் இந்த வண்டியில் வருகிறீர்களா. உங்களுக்கு ராமேஸ்வரம் வண்டியில் போகவேண்டாமா என்று அப்பா கேட்க முன் கேட்ட அதே கம்பீரமான குரல். இல்லை மாமா, திருச்சி வொர்க்ஷாப்பில் ஒரு வண்டி நிற்கிறது. அதைப் புதுக் கோட்டை கொண்டு போகவேண்டும். அதனால் இந்த வண்டியில் வந்தேன். உங்களைப் பார்த்ததில் எனக்கும் ஒரே ஆச்சரியம்.எல்லோரும் மதுரை போகிறீர்களா என்ற வண்ணம் பக்கத்தில் வந்தது அந்தக் குரல். அம்மா உடனே புடவையை தோள் சுற்றிப் போர்த்துக் கொண்டு என்னை ஜன்னலோரத்திலிருந்து விலக்கி நீ அப்புறம் பார்க்கலாம்.இப்போது நாங்கள் பார்த்துக் கொள்கிறொம் என்று தள்ளி உட்கார வைத்தார். நான் தான் சொன்னபேச்சைக் கேட்கும் நல்ல பெண்ணாச்சே. தள்ளி உட்காரவும் ரயில் கூவவும் சரியாக இருந்தது. மாமா ஏறிக் கொள்ளுங்கள். பிறகு பார்க்கலாம் என்ற சொல் காதில் விழுந்ததது. அவர் தன் கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்ளவேண்டுமே என்று கவலை எனக்கு. அப்பா உள்ளெ வந்தார். என் கண் வெளியே. அம்மா அப்பாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பதைக் கூட உணரவில்லை. அவர்கள் தூங்கிய பிறகும் வண்டியின் தாளத்திற்கு ஏற்ப மனம் பாடிக் கொண்டே வந்தது. திருச்சி ஜன்க்ஷனும் வந்தது .எதிர்பார்த்தபடி அதே கண்கள் என்னை பார்த்தபடி விலகிச் சென்றன. இது என் பெற்றொருக்கும் ரொம்ப நாளைக்குத் தெரியாது.
உண்மைதான் தனபாலன். பிந்நாட்களில் இருவரும் வாக்குவாதம் செய்யும் நேரம் வரும்போதும் இந்த நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டுவந்தால் சிரித்துவிடுவார். தெரியாமல் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டேனே என்று பொய்யாக அலுத்துக் கொள்வார்.. நன்றி மா.
ஆஹா, இது முற்றிலும் புதிது. சினிமாவைத் தோற்கடிக்கும் நிகழ்ச்சியாக இருக்கே! நீங்க அந்தப் பெட்டியில் இருப்பதை எப்படித் தெரிந்து கொண்டார்? ஒவ்வொரு பெட்டியாக எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டாரோ? அதுக்கப்புறமும் விடாமல் திருச்சியில் வந்து பார்த்து விடைபெற்றுக் கொண்டுபோயிருக்காரே! அந்தக் காலத்தில் இதை எல்லாம் சொல்லி இருக்க முடியாது தான்!
நான் தான் ஜன்னலோரம் இருந்தேனே.கீதா. அதுவும் அப்ப கண்ணாடி எல்லாம் கிடையாது. நாங்கள் இந்த ரயிலில் போவோம் என்று தெரிந்திருக்கும். ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் கண்டு பிடிப்பது கஷ்டம் இல்லையே.அதாவது உண்மையான ஆர்வம் இருந்தால்.>}}எனக்குத் தெரிந்து ஜன்னலில் கம்பிகள் கூட பிறகு தான் வந்தது.
வரணும் தளிர் சுரேஷ். அப்போது சினிமாக்கள் அவ்வளவாகப் பார்க்க அனுமதி இல்லை. பிறகு நேரமில்லை. அதுதான்ன் வாழ்க்கைச் சினிமாவின் சுவாரஸ்யமான கட்டங்களைப் பதிவிடுகிறேன்.
22 comments:
கண்கள் பேசிய நினைவுகள் நயாகராவின் எழுச்சியை விட மறக்க முடியாதவை...
படம் மிகவும் அருமை அம்மா...
உண்மைதான் தனபாலன். பிந்நாட்களில் இருவரும் வாக்குவாதம் செய்யும் நேரம் வரும்போதும் இந்த நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டுவந்தால் சிரித்துவிடுவார். தெரியாமல் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டேனே என்று பொய்யாக அலுத்துக் கொள்வார்.. நன்றி மா.
சுவாரஸ்யமான சம்பவமாயிருக்கிறதே...
ம்ம்ம்ம்ம்ம்.ஆமாம் ஸ்ரீராம். கனவு போலக் கண்டு மகிழ்கிறேன்.
வல்லி அக்கா அருமையான நினைவுகள்.
சில் என்ற நினைவுதான்.
கண்எதிரே தோன்றினான்;..... சில்....சில் காதல்.. மனதைதொட்டது.
நினைப்பது என்றும்சுகமே....
பாடல் பகிர்வு மிக பொருத்தம்.
வழக்கம்போல் ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டேன்.
~ ஒரு நினைவலை. அம்மா எழுதியிருக்கா. அவளுக்கு 10/12 ல் கல்யாணம். மாமியோரோட காரைக்குடியிலிருந்து கும்பகோனம் வர்ரா, ரயிலில்,இன்னம்பூர் போக. 'ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டேன்.' என்று எழுதியிருக்கா. பாட்டி சிரித்துக்கொண்டாளாம்.
கண்ணெதிரே தோன்றினார்.... கனிமுகத்தைக் காட்டினார்....
நல்ல நினைவுகள்மா.....
நன்றி கோமதி.அழகான நாட்கள். பரிசுத்தமான நினைவுகள்.
உண்மைதான்.கண்டதும் பிடித்துப் போனது இருவருக்கும். கடைசிவரை மாறவில்லை மாதேவி.மிக மிக நன்றி மா.
இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டாரா!!!!!
அருமை!
மிக நன்றி இ சார். ஆகக் கூடி ஜன்னலோரக் கவிதைகளாகி விட்டோம் பெண்கள். உங்களது அம்மாவுக்கு 13,14 வயதுதான் இருந்திருக்கும்.
நல்ல நினைவுகளையே தக்க வைத்துக் கொள்ளப் போகிறேன் வெங்கட். மிக நன்றி.
ஆ அதேதான் துளசி. ஸ்மைலி போட்டுக்கவும்.
ஆஹா, இது முற்றிலும் புதிது. சினிமாவைத் தோற்கடிக்கும் நிகழ்ச்சியாக இருக்கே! நீங்க அந்தப் பெட்டியில் இருப்பதை எப்படித் தெரிந்து கொண்டார்? ஒவ்வொரு பெட்டியாக எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டாரோ? அதுக்கப்புறமும் விடாமல் திருச்சியில் வந்து பார்த்து விடைபெற்றுக் கொண்டுபோயிருக்காரே! அந்தக் காலத்தில் இதை எல்லாம் சொல்லி இருக்க முடியாது தான்!
அருமையான பாட்டு, பொருத்தமான பாட்டு.
ஜன்னலோர சீட்டுக்கு இப்போவும் எனக்கு ஆசை உண்டு தான்! :))))
சுவாரஸ்யம்:)!
நான் தான் ஜன்னலோரம் இருந்தேனே.கீதா. அதுவும் அப்ப கண்ணாடி எல்லாம் கிடையாது. நாங்கள் இந்த ரயிலில் போவோம் என்று தெரிந்திருக்கும். ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் கண்டு பிடிப்பது கஷ்டம் இல்லையே.அதாவது உண்மையான ஆர்வம் இருந்தால்.>}}எனக்குத் தெரிந்து ஜன்னலில் கம்பிகள் கூட பிறகு தான் வந்தது.
சினிமா போல சுவையாக இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!
நன்றி ராமலக்ஷ்மி.கருத்துக்கு மிக நன்றி.
வரணும் தளிர் சுரேஷ். அப்போது சினிமாக்கள் அவ்வளவாகப் பார்க்க அனுமதி இல்லை. பிறகு நேரமில்லை. அதுதான்ன் வாழ்க்கைச் சினிமாவின் சுவாரஸ்யமான கட்டங்களைப் பதிவிடுகிறேன்.
Post a Comment